கான்ஹெரீ பெளத்த குடைவரைகள், கிழக்கு போரிவலி, மும்பை

மும்பை சுற்றுப் பகுதிகளில் அமைந்துள்ள பௌத்த குகைகளைக் காண ஆர்வம் உள்ளதா? நீர்வீழ்ச்சி, ஏரிகள், பறவைகள், விலங்குகள், மரம் செடிகொடி நிறைந்த அடர்வனப் பகுதியில் உங்கள் விடுமுறையைக் கழிக்க விருப்பமா? கவலை வேண்டாம்!. மும்பை போரிவலி கிழக்கு புறநகர்ப் பகுதியில் அமைந்துள்ள சஞ்சய் காந்தி தேசிய பூங்காவும் (संजय गाँधी राष्ट्रीय उद्यान) பூங்காவின் மையத்தில் உள்ள கான்ஹெரீ பெளத்த குடைவரை வளாகமும் (कान्हेरी गुफाएँ)  உங்கள் ஒரு நாள் சுற்றுலாவிற்கான சிறந்த தேர்வு ஆகும்.

கான்ஹெரீ 109 பௌத்த குடைவரைகள் அடங்கிய வளாகம் ஆகும். கி.பி. முதலாம் நூற்றாண்டைச் சேர்ந்ததாகக் கருதப்படும் இந்தப் பழமையான குடைவரைகளைப் பௌத்த துறவிகள், கிருஷ்ண சைலா (அல்லது கன்ஹ சைலா) என்ற செங்குத்துப் பாறையை அகழ்ந்து உருவாக்கியுள்ளார்கள். இந்த 109 குடைவரைகளில் பெரும்பாலானவை சிறிய அளவில் அமைக்கப்பட்ட அறைகள் ஆகும். இவை பெளத்த விகாரைகள் (विहार) என்றழைக்கப்பட்டன. இங்கு வாழ்ந்த பெளத்த துறவிகள் விகாரைகளை உறைவிடமாகவும், பயிலுமிடமாகவும், தவமியற்றும் இடமாகவும்  பயன்படுத்தி உள்ளனர். விகாரைகள் மட்டுமின்றிப் பெரிய அளவில் காணப்படும், பொது வழிபாட்டிற்கான, குடைவரைகள் சைத்தியம் (चैत्य)  என்று அழைக்கப்பட்டன. பெளத்த சைத்தியங்கள், துறவிகள் ஒன்றிணைந்து கூட்டாக வழிபடவும், பெளத்த இறையியல் (Buddhist Theology) பயிலவும் பயன்பட்டன. அரை வட்ட (குதிரை லாட) வடிவில் அழகிய தூண்களுடன் அமைக்கப்பட்ட சில சைத்திய மண்டபங்களில் (Colonades) ஸ்தூபிகள், வடிவமைக்கப்பட்டுள்ளன. சிறிதும் பெரிதுமாகப் பல ஸ்தூபிகளை இங்கு காணலாம். சைத்தியங்களில் புடைப்புச் சிற்பத் தொகுப்புகள், மாபெரும் புத்தர் சிற்பங்கள் (Colossal Buddha Statues) எல்லாம் வடிவமைக்கப்பட்டுள்ளன. பல கல்வெட்டுகளும் இங்கு கண்டறியப்பட்டுள்ளன.

Continue reading

Advertisements
Posted in குடைவரைக் கோவில், தொல்லியல், பெளத்த சமயம் | Tagged , , , , , , , , | 6 பின்னூட்டங்கள்

சோழர் காலத்து திசை ஆயிரத்து ஐநூற்றுவர் வணிகக் குழுவினர் கல்வெட்டு புதுக்கோட்டை அருகே கண்டறியப்பட்டது

புதுக்கோட்டை மாவட்டம் செல்லுகுடி கிராமத்தில், எல்லைப்பட்டி அரசு உயர்நிலைப் பள்ளியின் மரபுக் கழக உறுப்பினர்கள் செல்லுகுடிக்குச் சுற்றுலா சென்றபோது கண்டறியப்பட்டு, புதுக்கோட்டை தொல்லியல் ஆய்வுக்கழகக் (Pudukkottai Archeological Research Forum) குழுவினரால் படித்தறியப்பட்ட “திசையாயிரத்து ஐநூற்றுவர்” (Thisaiyaarathu Ainootruvar) என்னும் வணிககுழுவினர் (Merchant’s Guild) பற்றிய சோழர் காலத்துத் தூண் கல்வெட்டு தொல்லியல் ஆர்வலர்களிடையே மிகுந்த முக்கியத்துவம் பெற்றுள்ளது. இது பற்றிச் செப்டம்பர் 19, 2018 தேதி  நாளிதழ்களில் விரிவான செய்தி வெளியாகியுள்ளது. Continue reading

Posted in சோழர்கள், தொல்லியல் | Tagged , , , , , , | 12 பின்னூட்டங்கள்

தமிழ் திரட்டிகள்

மூலம்: தமிழ் திரட்டிகள்

Posted in Uncategorized | 2 பின்னூட்டங்கள்