Monthly Archives: ஜூலை 2015

உங்கள் குழந்தையைத் தெரிந்துகொள்ளுங்கள் 5

நமது மூளையைப் பற்றிய பல அறிவியல் கண்டுபிடிப்புகள் நமக்கு மிகுந்த ஆச்சர்யத்தைத் தருகின்றன. கிறிஸ்து பிறப்பிற்கு முன்பு கிரேக்க இலத்தீனிய தத்துவ ஞானிகள் பலவாறான யூகங்களை வெளிப்படுத்தினார்கள். கி.பி. ஆறு மற்றும் ஏழாம் நூற்றாண்டுகளில் மூளைபற்றிய ஆய்வுகள் மந்த கதியில் நடந்தன. பதினெட்டு மற்றும் பத்தொன்பதாம் நூற்றாண்டுகளில் ஆய்வுகள் துரித கதியில் நிகழ்ந்தன. இருபதாம் நூற்றாண்டு நவீன மருத்துவம் கம்ப்யூட்டர் நுட்பங்களை உள்ளடக்கிய பலகருவிகளைப் பயன்படுத்தி வாழும் மூளையின் செயல்பாடுகள் கண்டறியப்பட்டன.    மேலை நாடுகளில் பல ஆராய்சி நிறுவனங்களில் , பல்கலைக்கழகங்களில், ஆய்வுத் திட்டங்களில்  நடைபெற்ற மூளை ஆராய்சியில் பல சிக்கலான கேள்விகளுக்கு விடை கிடைத்துள்ளன.  இப்பதிவில் நமது மூளையைப்பற்றி கடந்த காலத்தில் மேற்கொண்ட சுவையான ஆய்வுகள் பற்றிக் காண்போமா? Continue reading

Posted in உளவியல், கற்பிக்கும் கலை, நரம்பியல், மருத்துவம் | Tagged , , | பின்னூட்டமொன்றை இடுக

உங்கள் குழந்தையைத் தெரிந்துகொள்ளுங்கள் – 4

இது தான் என் படம். எத்தனை மடிப்புகள். கசங்கிக் கொளகொளன்னு இருக்குல்லையா?  இதைப்பற்றி இன்னும் சற்று விரிவாகப் பார்ப்போமா?  முதலில் முன் மூளை, நடு மூளை, பின் மூளை என மூன்று பகுதிகளாகப் பிரித்துக் கொள்வோமா?   உங்கள் கபாலத்தில் நெற்றி எலும்புகளுக்குள் ஸெரிப்ரம் என்னும் பெருமூளை பத்திரமாக உள்ளது. இதனை முன் மூளை என்று வைத்துக்கொள்வோம்.  … Continue reading

Posted in Uncategorized | பின்னூட்டமொன்றை இடுக

உங்கள் குழந்தையைத் தெரிந்துகொள்ளுங்கள் – 3

ஹாய்…. ஹலோ இங்கே பாருங்க… நான் தான் உங்க மூளை பேசறேன். என்ன திகைச்சுப் போய்ட்டீங்களா? உங்களுக்கு என்னை நல்லாத் தெரியும்னு நினைக்கிறீங்க இல்லையா? ஆனால்  உங்களுக்கு என்னைப்பற்றிய முழுத் தகவல்களும் தெரியாது… அதுதானே உண்மை. மடிப்பு மடிப்பான வெளிப்பகுதி அடர்த்தியான சாம்பல் நிறத்திலும்  கூழான உட்பகுதி வெள்ளை அல்லது வெளிர் மஞ்சள் நிறத்திலும் அமைந்துள்ள … Continue reading

Posted in குழந்தைகள், மூளை வளர்ச்சி | பின்னூட்டமொன்றை இடுக