அப்பச்சிமார் காவியம்: அப்பச்சி மாரய்யன் சகோதரர்கள் கதை

புத்தக விமர்சனம்
கொங்கு 24 நாடுகளில் ஒன்றான வாழவந்தி நாட்டுப் பிள்ளைக்கரையாற்றூர் எனும் ஊரில் வேட்டுவர் குலத்தில் பிறந்தவர்கள் அப்பச்சி மாரய்யன் மற்றும் அவரது நான்கு சகோதரர்கள். இவர்களுக்கு 70 ஆண் மக்கள். இந்த 70 பேருக்கும் அதே குலத்தில் பிறந்த 70 பெண்களை மணம் முடிக்கும் தருணத்தில் நடக்கும் போரில் அப்பச்சி மாரய்யன் குடும்பத்தினர் அனைவரும் வீரமரணம் அடைகின்றனர். அப்பச்சி மாரய்யன் தெய்வத்தன்மை அடைகிறார். பின்னர் இது அப்பச்சிமார் காவியமாக உருப்பெற்று விளங்கி வருகிறது.

354 செந்தமிழ்க் கவிதைகளில் பல நூற்றாண்டுக் காலம் ஓலைச் சுவடியில் இருந்த இக்காவியத்தைக் கல்வெட்டு அறிஞர் புலவர் செ. இராசு அவர்கள் அச்சேற்றி நூல் வடிவில் கொணர்ந்திருக்கிறார். இது ஒரு பெரிய, அரிய முயற்சி. வேட்டுவர் சமுதாயப் பெருமைகள் கூறும் இந்நூலில் 153 வேட்டுவர் சமூகக் குலங்களின் பட்டியலும் கொடுக்கப்பட்டுள்ளது.
    • புத்தகத் தலைப்பு: அப்பச்சிமார் காவியம்
    • ஆசிரியர் : புலவர் செ. இராசு,
    • வெளியீடு : டாக்டர் சி. மயிலேறு ரவீந்திரன், 70, டாக்டர்ஸ் லே-அவுட், சம்பத்நகர், ஈரோடு – 638 011,
    • பக். : 136,
    • விலை ரூ. 75/-.

 

 

About முத்துசாமி இரா

புதுக்கோட்டை மாவட்டம் இராமச்சந்திரபுரத்தைப் பிறப்பிடமாகவும், சென்னை சைதாப்பேட்டையை வசிப்பிடமாகவும் கொண்ட இரா.முத்துசாமி, காரைக்குடி அழகப்பா கல்லூரியிலும், சென்னைப் பல்கலைக்கழகத்திலும் பயின்றவர். இவர் 1975ஆம் ஆண்டு தொடங்கி சி.வி.ஆர்.டி.இ (டி.ஆர்.டி.ஓ) ஆவடி, சென்னையில் பணியாற்றி ஒய்வு பெற்றவர். தமிழ் இலக்கியத்திலும், தமிழக வரலாற்றிலும் ஈடுபாடு கொண்டவர்.
This entry was posted in இலக்கியம், நாட்டுப்புறவியல், விமர்சனம் and tagged , , , , . Bookmark the permalink.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.