Daily Archives: செப்ரெம்பர் 29, 2017

சர்வதேச காஃபி தினம்

சர்வதேச காஃபி தினம் இன்று, வெள்ளிக்கிழமை, செப்டம்பர் 29, 2017. சர்வதேச காஃபி தின கொண்டாட்டங்கள் அக்டோபர் 01, 2017 வரை தொடரும். சர்வதேச காஃபி அமைப்பு (International Coffee Organization (ICO) மற்றும் உலக நாடுகளில் உள்ள காஃபி சங்கங்கள் (Coffee Associations) எல்லாம் சேர்ந்து மூன்றாம் ஆண்டிற்கான சர்வதேச காஃபி தினத்தைக் கொண்டாடுகிறார்கள். உங்களுக்குப் பிடித்தமான காஃபி என்ற இந்த பானத்தைக் கொண்டாடவும் ஊக்குவிக்கவும் ஒரு வாய்ப்பு. சர்வதேச காஃபி அமைப்பு முதன் முறையாக அக் டோபர் 1, 2015 தேதியை மிலான் நகரில் அதிகாரபூர்வமாக அறிவித்தது. இந்த நாள் நியாயமான காஃபி வர்த்தகத்தை ஊக்குவிக்கவும் காஃபி விவசாயிகளின் துயரங்கள் பற்றி விழிப்புணர்வினை ஏற்படுத்தவும் பயன்படுத்தப்படுகின்றது. சர்வதேச காஃபி அமைப்பு   ஐக்கிய நாடுகள் சபை United Nations (UN) ஆதரவுடன் லண்டனில் 1963 ஆம் ஆண்டு அமைக்கப்பட்டது என்பது உபரி தகவல்.
Continue reading

Posted in உணவு | Tagged , , , | பின்னூட்டமொன்றை இடுக