Monthly Archives: ஒக்ரோபர் 2017

திருமயம் சத்தியமூர்த்தி பெருமாள் கோவில்

திருமயம் என்னும் திருமெய்யம் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒர் ஊராகும். இவ்வூரை நோக்கிப் பயணிக்கும்போது பல கி.மீ. தொலைவிலேயே இங்குள்ள அழகான மலைக்கோட்டையைக் காணலாம். இவ்வூரின் தென்புறமாக அமைந்துள்ள மலைச் சரிவில் இரண்டு குடைவரைக் கோவில்கள் அகழப்பட்டுள்ளன. கிழக்குப்புறம் அகழப்பட்டுள்ள குடைவரையில் திருமெய்யர் என்ற பள்ளிக்கூட பெருமாள் கிடந்த நிலையில் காட்சி தருகிறார். பிற்காலத்தில் இக்குடைவரையை … Continue reading

Posted in கோவில் | Tagged , , , , , , | 2 பின்னூட்டங்கள்

நாவி தமிழ்ச் சந்திப்பிழை திருத்தி மற்றும் வாணி தமிழ் எழுத்துப்பிழை திருத்தி, ஆன்லைன் மென்பொருள் செயலிகள்

வல்லின ஓற்றெழுத்துக்களான க், ச், த், ப் ஆகிய நான்கும் மிக வேண்டிய இடங்களில் மிகாமலும், மிக வேண்டாத இடங்களில் மிகுத்தும் எழுதுவது சந்திப்பிழை அல்லது ஒற்றுப்பிழையாகும். மீதி இரண்டு வல்லின ஓற்றெழுத்துக்களான ட், ற் ஆகிய இரண்டால் சந்திப்பிழை நேராது. எனவே இவை பற்றிக் கவலைப்பட வேண்டாம். வல்லினம் மிகும் இடங்களையும் மிகா இடங்களையும் தெரிந்து கொண்டால் சந்திப்பிழை அல்லது ஒற்றுப்பிழை நேராது..பெரிய எழுத்தாளர்களைக் கூட ஏமாறச் செய்யும் பிழை சந்திப்பிழை. பற்றி அதிகம் கவலைப்படத் தேவையில்லை என்று சொல்லுவோரும் உள்ளனர். இப்பிழையைச் சரிவரப் பார்க்கவில்லையென்றால் பொருள் கூட மாறுபடக்கூடும். நம்மில் சிலருக்கு இலக்கணம் தெரியாது என்றாலும் சந்திப்பிழையில்லாமல் எழுதிவிடுகிறோம். எழுதும்போது க், ச், த், ப் மிகும் இடங்களில் அழுத்தி உச்சரித்துப் படித்துப் பார்த்தால் பிழையைத் தவிர்க்கலாம். இருந்தபோதிலும் இலக்கணம் தெரிந்து எழுதினால் சந்திப்பிழைகள் நேராது.

தமிழில் எழுதுவது வருங்காலத்தில் வழக்கொழிந்து போகும் என்ற நிலை வந்தால் வியப்படைய தேவையில்லை! ஆங்கிலத்தில் தட்டச்சு செய்தல், சரிபார்த்தல்,தொகுத்தல் போன்ற பணிகள் கணனியின் மூலம் எளிதாக நிறைவேறிவிடுகிறது. உள்ளீட்டு கருவியைப் பயன்படுத்தித் தமிழில் தட்டச்சுச் செய்து உள்ளிடும் வழக்கம் அதிகரித்து வருகிறது. ஆங்கிலத்தில் உள்ளது போலப் பிழை திருத்தும் (spell checker) வசதி தமிழில் இல்லாதது பெருங்குறையாயிருந்தது. தற்போது தமிழில் சிற்சில பிழைதிருத்தி மென்பொருள்கள் கிடைத்துவருகின்றன. சந்திப்பிழைகளைக் களைய நாவி, எழுத்துப்பிழைகளைக் களைய வாணி சொற்திருத்தி ஆகியன ஓரளவிற்குப் பிழைகளைத் திருத்தி உதவுகின்றன.

இப்பதிவு இந்த இரண்டு பிழைதிருத்திகள் பற்றி விளக்குகிறது. சந்தி இலக்கணத்தைக் கற்றுக்கொள்ள விரும்புவர்களுக்குச் சில இலக்கணக்குறிப்புகளை எடுத்துக்காட்டுகளுடன் விவரிக்கிறது. முயற்சி செய்தால் இந்த இலக்கணம் வசப்படும். Continue reading

Posted in தமிழ் | Tagged , , , , , , | 1 பின்னூட்டம்

இந்திய தொல்லியல் அளவீட்டு துறையின் மைசூர் அலுவலகத்தில் முடங்கிக் கிடக்கும் தமிழ் கல்வெட்டுகள் பற்றி அறிஞர்களும் பொதுமக்களும் கவலை…

தமிழ் நாட்டின் வரலாற்றை முறைப்படுத்தி எழுதுவதற்கு சங்க இலக்கியங்களும், இடைக்கால இலக்கியங்களும், சுமார் இரண்டாயிரம் ஆண்டுகளின் தொடர்ச்சியான கல்வெட்டுகளும் பெரிதும் துணை புரிகின்றன. ஆங்கிலேய ஆட்சியின் போது கல்வெட்டுகளைப் படியெடுக்கத் தொடங்கிய பின்புதான், இருண்டு கிடந்த தமிழ்நாட்டின் வரலாற்றில் புதிய வெளிச்சம் பரவியது. தமிழ் நாட்டின் இடைக்கால வரலாறு தமிழ் மக்களுக்கு மட்டுமின்றி வெளியுலகுக்கும் தெளிவாக புலப்பட்டது.

தற்பொழுது இந்திய தொல்லியல் அளவீட்டு துறை, தமிழ்நாடு அரசு தொல்பொருள் ஆய்வுத்துறை, பல்கலைக்கழகங்கள் முதலான அரசு நிறுவனங்களும் பல தனியார் நிறுவனங்களும் புதிய கல்வெட்டுகளை வெளியிட்டு வருகின்றன. தனிப்பட்ட ஆய்வாளர்களும், குழுக்களும், மன்றங்களும் இப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தொல்லியல் கழகம், தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர் எல்லா அடிப்படைச் சான்றுகளையும் தொகுத்து ஆண்டுதோறும் வெளியிட்டு வருகிறது. இதுவரை 28 தொகுப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. இணையதள சேவை, முகநூல், மன்றங்கள், வலைத்தளங்கள் மூலம் விரைவாக செய்திகள் பரிமாறப்படுகின்றன. சில வலைத்தளங்கள் ASI நிறுவனத்தின் குறிப்பிட்ட தொடர் வெளியீடுகளை மின்தரவுகளாக மாற்றியமைத்துள்ளார்கள். அன்றாடம் புதிய கல்வெட்டுகள் கல்வெட்டுகள் கண்டறியப்பட்ட செய்திகள் நாளிதழ்களில் வெளியிடப் படுகின்றன.

ஆங்கிலேயர் நமக்கு அளித்த பொக்கிஷம் இக்கல்வெட்டுகளின் படிகள் (copies). தமிழ் நாட்டின் வரலாற்று நினைவுச் சின்னங்களையும் கல்வெட்டுகளையும் பராமரிக்கவும், கல்வெட்டுப் படிகளைப் பாதுகாக்கவும், படித்து புரிந்து கொள்ளவும், தற்காலத்துக்கு ஏற்றவாறு அந்தந்த இந்திய மொழிகளில் எழுதுவடிவமாக்கவும், பதிப்பிக்கவும் இந்திய தொல்லியல் அளவீட்டுத் துறையும், தமிழ் நாடு அரசு தொல்லியல் துறையும் அரசு நிறுவனங்களாக ஏற்படுத்தப்பட்டு செயல்பட்டு வருகின்றன. இந்தப் பதிவு கடந்த 1890 ஆம் ஆண்டு முதல் அரும்பாடுபட்டு படியெடுத்து சேகரித்து, படித்து, தமிழ் எழுதுவடிவமாக்கி, ஆவணப்படுத்தப்பட்ட சுமார் 65000 தமிழக் கல்வெட்டுகளின் நிலை பற்றியது. இதற்கென பிரத்யோகமாக மைசூரில் செயல்படும் தொல்லியல் துறையின் கல்வெட்டியல் கிளை அலுவலகம் இந்த தரவுகளை முறையாகப் பராமரிக்கிறதா? சுமார் 400 ஆண்டுகள் பழைமையான இத்தரவுகள் பயன்படுத்தும் நிலையில் உள்ளனவா? 1909 ஆம் ஆண்டு முதல் இவை ஏன் நூலாக பதிப்பிக்கப்படவில்லை? 1908 ஆம் ஆண்டுவரை பதிப்பிக்கப்பட்ட நூல்களும் பிற கல்வெட்டு படி பிரதிகளும் ஆய்வாளர்கள் பயன்படுத்தும் வகையில் மின்தரவாக (digital document) கிடைக்க வகை செய்யப்பட்டுள்ளதா? இது போன்ற கேள்விகளுக்கு அறிஞர்கள் சொல்லும் தீர்வு என்ன? இந்தப் பதிவைப் படித்து தங்கள் மேலான கருத்துக்களை என் blog இல் பதிவிட வேண்டுமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன். Continue reading

Posted in தொல்லியல் | Tagged , , , , , , , | 1 பின்னூட்டம்