Daily Archives: ஒக்ரோபர் 24, 2017

புன்னதாலா, கேரளா: இஸ்லாமியர்கள் நிதியளித்து கட்டிய ஸ்ரீ லக்ஷ்மிநரசிம்மமூர்த்தி சுவாமி கோவிலில் இஃப்தார் நோன்பு விருந்து!

கடந்த 2017 ஆம் ஆண்டு ஜூன் மாதம் சிறுபான்மையினரைக் குறிவைத்து மாட்டு இறைச்சி விற்பனைக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள சமயத்தில், கேரள மாநிலதிலுள்ள புன்னதாலா என்ற கிராமத்தில் உள்ள இந்து வைணவக் கோவில், 2017 மே மாதம் 30 ஆம் தேதி செவ்வாய்க்கிழமையன்று மாலை இக்கிராமத்தில் வாழும் 500 இஸ்லாமிய மக்களுக்கு புனித ரமலான் மாத நிகழ்வான இஃதார் நோன்பு திறப்பு விருந்தளித்து மகிழ்துள்ளது.

இது பற்றி திரு. மோகனன், செயலாளர், ஸ்ரீ லக்ஷ்மிநரசிம்மமூர்த்தி சுவாமி கோவில், புன்னதாலா  சொன்ன கருத்து இது: ‘‘எங்கள் கிராமத்தில் இந்து-இஸ்லாமிய மக்கள் ஒரே குடும்பமாக வாழ்ந்து வருகிறோம். நல்லது கெட்டது எதுவென்றாலும் இஸ்லாமிய மக்களுடன் கலந்து பேசி முடிவுசெய்வோம். இந்தக் கோயிலைக் கட்ட (‘ஸ்ரீ லக்ஷ்மிநரசிம்மமூர்த்தி சுவாமி கோவில் புனரப்பு திருப்பணிகளுக்கு’), சுமார் 20 லட்சம் ரூபாய் இஸ்லாமிய மக்கள் தந்தனர். யாரும், எந்த மதத்தையும் பின்பற்றலாம். அது அவர்களின் உரிமை. எல்லாவற்றையும் தாண்டி ‘மனிதம்‘ என்ற ஒற்றை வரியில் நாங்கள் இணைந்து நிற்கிறோம்.‘’ Continue reading

Posted in கோவில், மதம் | Tagged , , , , | பின்னூட்டமொன்றை இடுக