Daily Archives: நவம்பர் 22, 2017

கலம்காரி கலை

பேனாவைக் கொண்டு துணியில் அலங்கரிக்கும் ‘கலம்காரி’ (English: Kalamkari), (தெலுங்கு: కలంకారి) ஒரு தொன்மையான கலைப்பாணியாகும். பாரசீக மொழியில் “கலம்” என்றால் பேனா என்றும் “காரி” என்றால் கலைவடிவம் என்றும் பொருள்படும். கலம்காரி என்ற சொல் இயற்கையாகக் கிடைக்கும் தாவரச் சாயத்தைப் பயன்படுத்தி அழகிய வடிவங்களைக் (patterns) கையால் வரைந்தோ (free-hand painting) அல்லது அச்சுப் பதித்தோ (block-printing) தயாரிக்கப்படும் பருத்தித் துணிகளைப் பற்றி விவரிக்கிறது. தற்போது கலம்காரித் துணி வகை என்பது இந்தியாவில் அனைத்துப் பகுதிகளிலிருந்து தயாராகும் துணிவகைகளையும் உள்ளடக்கியதாகும். குறிப்பாகக் கலம்காரி என்ற சொல் தென்னிந்திய மாவட்டங்களில் தயாராகும் துணிகளை மட்டும் சுட்டிக்காட்டுகிறது. இந்தப்பதிவு கலம்காரி பாணி ஓவியங்கள் பற்றியும், பருத்தித்துணியில் கையால் வரைந்தோ அல்லது அச்சுப் பதித்தோ தயாரிக்கப்படும் தொழில்நுட்பம் பற்றியும் விவரிக்கிறது. Continue reading

Posted in நுண்கலை, வாழ்க்கை முறை | Tagged , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்