கோட்டுக்கல் குடைவரைக் கோவில், கேரளா

கோட்டுக்கல் (மலையாளம்: കോട്ടക്കല്) குடைவரைக் கோவில் என்னும் கழற்றிக்கோவில் (மலையாளம்: കാലത്തിരിക്കോവിൽ) கேரள மாநிலம், கொல்லம் (மலையாளம்: കൊല്ലം) மாவட்டம், சடயமங்கலம் (மலையாளம்: സദായമനഗലം) வட்டம் இட்டிவா (மலையாளம்: ഇട്ടിവ) பின்கோடு 691536 கிராமத்தில் அமைந்துள்ளது. கொல்லம் மற்றும் திருவனந்தபுரம் (மலையாளம்: തിരുവനന്തപുരം) மாவட்ட எல்லைகளுக்கிடையே அமைந்துள்ள இட்டிவா ஒரு கிராமப் பஞ்சாயத்து ஆகும். இதன் அமைவிடம் 8° 51′ 49.5504” N அட்சரேகை 76° 55′ 26.3028” E தீர்க்கரேகை ஆகும். கடல் மட்டத்திலிருந்து இதன் உயரம் 52 மீ. (170 அடி) ஆகும். 2011 ஆம் ஆண்டு நடத்திய மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி இவ்வூரின் மக்கள்தொகை 17270 (ஆண்கள் 7989; பெண்கள் 9281; குடும்பங்கள் 4527) ஆகும். சடையமங்கலத்திலிருந்து 7 கி.மீ. தொலைவிலும்; மாவட்டத் தலைநகர் கொல்லத்திலிருந்து 44 கி.மீ. தொலைவிலும்; மாநிலத் தலைநகர் திருவனந்தபுரத்திலிருந்து 49 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ளது.

கொட்டுக்கல் என்ற (കൊട്ടിയ കല്ല്) மலையாளச் சொல் கொட்டிய கல்லு என்று விரிந்து “கல்லில் செதுக்கிய” (English: carved rock) குடைவரை என்ற பொருளில் அமைந்துள்ளது. இந்தக் குடைவரை கோவில் கேரளக் குடைவரை கோவில் கலைப்பணியைக் கொண்டுள்ளது. வயலின் நடுவே இயற்கையாய் அமைந்துள்ள குன்றைக் குடைந்து இக்குடைவரை உருவாக்கப்பட்டுள்ளது. பார்வைக்கு ஒரு யானை படுத்திருப்பது போலவே இக்குன்று தோற்றமளிக்கிறது.

குடைவரையின் கட்டிடக்கலை

kottukal-rock-cut-temple

கொட்டுக்கல் குடைவரைக் கோவில் PC: Kerala Tourism

கொட்டுக்கல் குடைவரை வளாகத்தில் சீரற்ற அளவில் இரண்டு குடைவரைகள் அமைந்துள்ளன. இந்த இரண்டு குடைவரைகளும் கிழக்கு நோக்கி அமைந்துள்ளன. அளவில் சற்று பெரியதான குடைவரை சதுர வடிவிலான கருவறையையும் செவ்வக வடிவ முகமண்டபத்தையும் பெற்றுள்ளது. குகையின் முகப்பில் இரண்டு பெருத்த தூண்கள் உத்திரம் தாங்குகின்றன. அளவில் சற்று சிறியதான குடைவரை நீள்வட்டமான கருவறையைப் பெற்றுள்ளது. இக்குகையில் முகமண்டபம் காணப்படவில்லை.

kottukal_cave_temple_dsc0042

ஹனுமான் PC: Wikipedia (Malaiyalam)

200px-kottukal_cave_templedsc_0025

விநாயகர் PC: Wikipedia (Malaiyalam)

குடைவரைக்கோவில் சிவனுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. கருவறையில் ஒரே கல்லில் வடித்த சிவலிங்கம் மற்றும் நந்தி ஆகிய இரண்டு திருமேனிகள் அமைந்துள்ளன. மற்றோரு குடைவரையின் கருவறையில் ஹனுமான் நின்ற நிலையில் காட்சி தருகிறார். இந்த இரு குகைகளுக்கான இடைவெளியில் உள்ள பாறையில் செவ்வக வடிவில் செதுக்கப்பட்ட கோட்டத்தில் புடைப்புச் சிற்ப விநாயகர் காட்சி தருகிறார். இக்குடைவரை வளாகத்தில் அமைந்துள்ள ஒரு கிணற்றில் எப்போதும் நீர் வற்றுவதில்லை.

வரலாறு

கொட்டுக்கல் குடைவரைக் கோவிலில் சிவன், விநாயகர் மற்றும் ஹனுமான் ஆகிய தெய்வங்களுக்குச் சன்னதிகள் அமைந்துள்ள காரணத்தால் திரிகோவில் என்ற பெயரிலும் இக்குடைவரைக் கோவில் அறியப்படுகிறது. சிவன், விநாயகர் மற்றும் ஹனுமான் ஆகிய தெய்வங்கள் இங்கு இணைந்திருப்பது போல வேறெங்கும் இணைந்து காணப்படவில்லை என்று தெரிகிறது. சில வரலாற்று ஆசிரியர்கள் இக்குடைவரைக் கோவிலின் காலத்தை கி.பி. 6 முதல் 8 ஆம் நாற்றாண்டு வரையிலுள்ள காலகட்டத்திற்குள் கணிக்கிறார்கள். வேறு சில வரலாற்று ஆசிரியர்கள் இக்குடைவரையின் காலத்தை கி.பி. 7 ஆம் நூற்றாண்டு என்று கணிக்கிறார்கள். இக்கருத்துக்கள் பற்றி விரிவான ஆய்வு தேவை. பாண்டியன் ஜடில பராந்தக நெடுஞ்சடையன் என்ற (முதலாம்) வரகுணன் (கி.பி.765 – 815) இப்பகுதியை ஆண்ட காரணத்தால் சடையமங்கலம் என்னும் பெயர் பெற்றது. ஆனைமலை, திருச்சிராப்பள்ளிக் கல்வெட்டுகள் இம்மன்னனை மாரஞ்சடையன் என்றும் குறிக்கின்றன.

கொட்டுக்கல்லுக்குச் செல்ல…

சிறந்த பருவம் டிசம்பர் முதல் மே மாதம் வரை.

கோட்டுக்கல் குடைவரைக் கோவில் சடையமங்கலத்திலிருந்து 8 கி.மீ. தொலைவிலும்; அஞ்சலிலிருந்து 7 கி.மீ. தொலைவிலும் உள்ளது. சடையமங்கலம் மற்றும் அஞ்சலிலிருந்து உள்ளூர் பஸ்கள் உள்ளன. சடையமங்கலம் வழியாக பல கே.எஸ்.ஆர்.டி. சி பஸ்கள் புனலூர், கொல்லம், திருவனந்தபுரம் மற்றும் பல நகரங்களுக்குச் சென்று வருகின்றன. டாக்சி வசதி உண்டு.

அருகிலுள்ள இரயில் நிலையம் புனலூர் (20 கி.மீ.); வர்க்கலா (25 கி.மீ.); கொல்லம் ஜங்க்ஷன் (35 கி.மீ.).

அருகிலுள்ள இரயில் நிலையம் திருவனந்தபுரம் 53 கி.மீ. தொலைவு.

குறிப்புநூற்பட்டி

  1. Kottukal Cave: Hindu Rock cut Cave Temple, Kottukal near Kollam. Know Your Heritage. September 2, 2016
  2. Kottukkal Rock Cave Temple GUHA Kshethram. Facebook. May 8, 2015
  3. Kottukal Rock Cut Cave Temple. Mahrubhumi (English). May 31, 2008
  4. Kottukal Rock Cut Cave Temple. Tapioca.co.in
  5. The Cave Temple at Kottukal, Kollam. Kerala Tourism.org
  6. കോട്ടുക്കല്‍ ഗുഹാക്ഷേത്രം , അഞ്ചല്‍, കൊല്ലം (http://kudukka.com/coin123)

About முத்துசாமி இரா

புதுக்கோட்டை மாவட்டம் இராமச்சந்திரபுரத்தைப் பிறப்பிடமாகவும், சென்னை சைதாப்பேட்டையை வசிப்பிடமாகவும் கொண்ட இரா.முத்துசாமி, காரைக்குடி அழகப்பா கல்லூரியிலும், சென்னைப் பல்கலைக்கழகத்திலும் பயின்றவர். இவர் 1975ஆம் ஆண்டு தொடங்கி சி.வி.ஆர்.டி.இ (டி.ஆர்.டி.ஓ) ஆவடி, சென்னையில் பணியாற்றி ஒய்வு பெற்றவர். தமிழ் இலக்கியத்திலும், தமிழக வரலாற்றிலும் ஈடுபாடு கொண்டவர்.
This entry was posted in கோவில், தொல்லியல், வரலாறு, Uncategorized and tagged , , , , , , . Bookmark the permalink.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.