பட்ட சித்ரா, தாலபட்ட சித்ரா: ஒரிசாவின் பாரம்பரிய ஓவியக்கலை

இந்தியக் கலையின் தொடக்கம் வரலாற்றுக்கு முந்தைய காலமான கி.மு. மூன்றாம் நூற்றாண்டில் ஹோமினிட் குடியேற்றங்களில் (Hominid settlements) கண்டறியலாம். இந்தியாவின் வரலாற்றுக்கு  முந்தைய (pre-historic) சித்திரங்கள் (engravings) மற்றும் பாறை ஓவியங்கள் (rock-art) போன்ற குகை ஓவியங்களின் வரலாறு கி.மு. 30,000 ஆண்டுகளுக்கும் முந்தைய எடக்கல் குகை (Edakkal Caves, Kerala) மற்றும் பிம்பேட்கா (Bhimbetka rock shelters, Madhya Pradesh) போன்ற மத்திய இந்தியாவின் குகை ஓவியங்களிலிருந்து தொடங்குகிறது. இந்தியாவின் பாறை ஓவியக் கலை (rock art), பாறை புடைப்புச் செதுக்கல்கள் (rock relief carvings), செதுக்கிய சித்திரங்கள் (engravings) மற்றும் ஓவியங்களை (paintings) உள்ளடக்கியதாகும். இந்தியாவில் சுமார் 1300 பாறை ஓவியத்தளங்களும் கால் மில்லியனுக்கும் அதிகமான வடிவங்களையும் (figures), சிலைகளையும் (figurines) காணலாம். பண்டைய இந்தியாவின் மிகக் குறைந்த குகைகளே மிஞ்சியுள்ளபடியால், இந்தியாவில் உள்ள அனைத்து ஆரம்பக் கால ஓவியங்களும் குகைகளில் கிட்டத்தட்ட பாதுகாப்பாகவே உள்ளன.

இந்தியக் கலை (arts) சிற்பம் மற்றும் ஓவியம் போன்ற பல்வேறு கலை வடிவங்களைக் (art forms) கொண்டுள்ளது. இந்தக் கலை வடிவம் முந்தைய காலத்திலிருந்து நவீன காலத்துக்கு மாறும் போது சமணம், பவுத்தம், இந்து மற்றும் இஸ்லாமிய மதங்களின் கலாச்சாரத் தாக்கங்களைப் பெற்றுள்ளது. புவியியல் ரீதியாக, இது இந்தியத் துணைக்கண்டம் முழுதும் பரவியுள்ளது.

பட்ட சித்ரா (Odiya: ପଟ୍ଟା ଚିତ୍ର) என்பது ஒரு பழங்காலக் கலை வடிவம் . இந்த வடிவம் கிழக்கு இந்திய மாநிலமான ஒடிஸாவின் பாரம்பரிய கலாச்சாரத்தில் பிறந்து வளர்ந்த ஓவியக்கலையாகும். சமஸ்கிருத மொழியில் “பட்டா” (Sanskrit: पट) என்றால் “துணி” (canvas) என்று பொருள்; “சித்ரா” (Sanskrit: चित्र ) என்பதன் பொருள் “படம்” என்பதாகும். பட்ட சித்ரா என்றால் துணியில் வரையப்படும் பாரம்பரியமிக்கச சுருள் ஓவியத்தைக் (scroll paintings) குறிக்கும் ஒரு பொதுவான சொல் எனலாம். பட்டா சித்ராவின் தோற்றம் மிகவும் சுவாரஸ்யமானது பண்டைய காலங்களில், எழுத்துத் தொடர்புக்குக் காகிதங்கள் பயன்படுத்தப்படவில்லை என்பது நமக்குத் தெரியும். பனை ஓலைகளை எழுத்துவதற்குப் பயன்படுத்தினார்கள். தொடக்கக் காலங்களில், பனை ஓலைகளில் செய்திகளை மட்டுமே அனுப்பினார்கள். இதன் பிறகு செய்திகளுடன் விளக்கப் படங்களையும் சேர்த்துக் கொண்டார்கள். அடுத்து விரைவிலேயே இந்த விளக்கப்படங்கள் பட்ட சித்ரா என்னும் அற்புதமான கலை வடிவமாக மாற்றம் கண்டது.

2000 ஆண்டுகளுக்கு முன்பு, ஸ்க்ரைப் (scribe) எனப்படும் எழுத்தர்கள் (Sanskrit: लिबी; Odiya: ଲିପି), அரசர்கள் மற்றும் கோவில் அதிகாரிகளின் ஆதரவுடன், பண்டைய இலக்கியங்கள் (ancient literature) மற்றும் பக்திப் பாடல்களைக் (religious verses) கையெழுத்துப் பிரதிகளாக எழுதினார்கள். புதிய பிரதிகள் எடுக்கும் முன்பு இந்த விலைமதிப்பற்ற பனை ஓலைச்சுவடி கையெழுத்துப்பிரதிகள் சில நூற்றாண்டு காலம் வரை நீடிக்கும். பனை ஓலைக் கையெழுத்துப் பிரதிகளை, எழுத்தர்கள் கதைகள் (stories) அல்லது நிகழ்வுகளின் (events) விளக்கப்படங்களுடன் (Illustrations) அலங்கரிக்கத் தொடங்கிஇருக்கலாம். பின்பு பனை ஓலை ஓவியர்களால் பட்ட சித்ரா ஓவியமாகக் கலை வடிவமாகப் பெற்றிருக்கலாம். வண்ணங்களைப் பயன்படுத்திச் செதுக்கப்பட்ட இந்தக் கலை வடிவம் பல கருத்துக்கள் (ideas), நீதிக்கதைகள் (fables) மற்றும் வாழ்க்கைக் கதைகளை (life stories) வெளிப்படுத்தும் பனையோலை ஓவிய வடிவமாக வளர்ந்தது. நாளடைவில் இந்த ஓவியங்களில் பெரும்பாலானவை இந்து புராணத்தை அடிப்படையாகக் கொண்டது. குறிப்பாகப் பூரி ஜகன்னாதர் மற்றும் வைணவ சமய மரபுகளால் வளம் பெற்றது.

இந்த ஓரிய ஓவியத்தின் பழைய பாரம்பரியம் ஒடிசா மாநிலம், பூரி மாவட்டம் பூரி (English: Puri; Odiya; ପୁରୀ) (அமைவிடம் : 19°48′38″N 85°49′53″E) பின் கோடு 752002, மற்றும் பூரிக்கு வடக்கில் 09 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள ரகுராஜ்புர் (English: Raghurajpur; Odiya: ରଘୁରାଜପୁର) (அமைவிடம் 19.885464°N 85.826539°E) பின் கோடு 752012, பிபிலி கிராமம் (Oriya: ପିପିଲି English: Pipili) (அமைவிடம் : 20.12°N 85.83°E), கேந்திரபர மாவட்டம், தன்டிசஹி, (Odiya: ଦାଣ୍ଡିସାହି English: Dandasahi) பின் கோடு 762011, கஜபதி மாவட்டம், பரலக்ஹெமுண்டி (English: Paralakhemundi; Odiya: ପାରଳାଖେମୁଣ୍ଡି), (அமைவிடம் 18.8°N 84.2°E) பின் கோடு 761201, கஞ்சம் மாவட்டம், சிக்கிடி (English: Chikiti Odiya: ଚିକିଟି)  (அமைவிடம் 19.20°N 84.62°E) பின் கோடு 761010 மற்றும் சுபர்ணபூர் மாவட்டம் சோன்பூர் (English: Sonepur Odiya: ସୋନେପୁର) (அமைவிடம் 20° 50′ 52.8540” N 83° 53′ 42.0144” E) பின் கோடு 767045 போன்ற இடங்களில் இன்னும் உயிர்ப்புடன் உள்ளது.

ரகுராஜ்பூர் (Odisha: ରଘୁରାଜପୁର ) கிராமத்தில் உள்ள இரண்டு முக்கியத் தெருக்களில் சுமார் 120 வீடுகள் இருக்கின்றனவாம். சித்திர ஓவியங்கள் அலங்கரிக்கப்பட்டுள்ள இந்த வீடுகளில் பட்ட சித்திர ஓவியக் கலைஞர்கள் தங்கி பட்ட சித்ரா கலையைத் தொழிலாக மேற்கொண்டுள்ளனர். இவர்கள் உருவாக்கும் பாரம்பரிய காகித முகமூடிகள், கல் சிலைகள், காகிதக் கூழ் பொம்மைகள், செதுக்கு வேலைகள் மற்றும் மரப்பொம்மைகள் போன்ற குழந்தைகளுக்கான விளையாட்டுப் பொருட்கள் புகழ் பெற்றவை. இது பராம்பரியக் கலைஞர்களின் வசிப்பிடம்.

உலகப் புகழ் பெற்ற ஒடிசி நடனத்தின் தாய்வீடு ரகுராஜ்பூர் கிராமம்தான். கொட்டிபுவா எனும் பழைய நாட்டிய வடிவமே ஒடிசி நடனத்தின் முன்னோடி என்பது உபரிச் செய்தி. இந்த ஊரைச் சேர்ந்த ஒடிசி நடனக்கலைஞர் கேளுசரண் மொகபத்ரா உலகப் புகழ் பெற்றவர். இக்கிராமத்தில் இவருடைய சிறிய வீட்டையும், வீட்டின் முகப்பில் உள்ள அவரது சிலையையும் காணலாம்.

இந்த கிராமத்தில் துணி, காகிதம், உலர்ந்த பனை ஓலை போன்ற எந்தவிதமான பரப்பின் மேலும் நேர்த்தியாகப் பட்ட சித்ரா ஓவியங்கள் வரையும் கலைஞர்கள் பெருவாரியாக வாழ்கின்றனர். கேன்வாஸ் எனப்படும் துணி அல்லது விசிறி மடிப்புடன் தயார் செய்யப்படப் பனை ஓலை தான் பட்ட சித்ரா கலையின் ஊடகங்களாகும்.

பட்ட சித்ரா ஓவியம் தயாரிப்பதற்கான கேன்வாஸ் துணி தயாரிப்பது ஒரு விரிவான செயல்முறையாகும். கேன்வாஸ் துணியைப் பெண்கள் தயாரிக்கிறார்கள். புளியங்கொட்டை விதை மற்றும் சுண்ணாம்புக்கல் கலந்த கலவையைத் துணியின் மீது பூசி அந்தத் துணியைப் படம் வரைவதற்கு ஏற்ப தயார் செய்வார்கள். ஓவியத்தின் வெளிப்புறக் கோடுகள் தடிமனானவை. வெள்ளை, கருப்பு, சிவப்பு, பச்சை நீலம் மற்றும் மஞ்சள், வண்ணங்கள் தூக்கலாகவும் திடமாகவும் அமைந்துவிடுவது சிறப்பு. இயற்கையாய்க் கிடைக்கும் விளக்கு திரியின் கரியின் கருப்பு நிறம், சங்கு மற்றும் கிளிஞ்சல்களிலிருந்து வெள்ளை நிறம், தேங்காய் ஒடு மற்றும் பச்சிலைகளிலிருந்து பச்சை நிறம், இண்டிகோவிலிருந்து கருநீல நிறம், கெரு களிமண்ணிலிருந்து காவி நிறம் போன்ற நிறங்கள் தயாரிக்கப்படுகின்றன. எருமைமாட்டின் முடி, கன்றுக்குட்டியின் முடி, எலியின் முடி போன்ற முடிகளைக் கொண்டு தூரிகை (பிரஸ் brush) தயாரிக்கிறார்கள்.

இந்தக் கலைஞர்கள் வரையும் கோடுகள், பூசும் அடர்த்தி மிக்க வண்ணங்கள் எல்லாம் பட்ட சித்ரா ஓவியங்களைத் தனித்தன்மையுடன் காட்டுகின்றன. இவற்றில், பூரி ஜெகனாதரின் லீலைகள், ராமாயணம், மகாபாரதம் போன்ற இந்துப் புராணங்கள் மற்றும் இதிகாசங்களிலிருந்து, நீண்ட காட்சிகளை ஒவியமாக வரைகிறார்கள். மலர்கள், கொடிகள், மரங்கள், விலங்குகள் போன்றவற்றையும் கற்பனையுடன் நுணுக்கமாக வரைந்து வேலைப்பாடுகளையும் இணைத்து ஓவியத்தின் அழகைக் கூட்டுவது பட்ட சித்ராவின் நவீன பணியாகும். டஸ்ஸர் என்னும் சில்க் துணிகளின் மேல் அல்லது சம்பல்பூரி பாணி புடவைகளின் மேல் பட்டசித்ரா ஓவியங்களை வரைவதும் நவீன பட்ட சித்ரா பாணியாகும். இந்த உருவங்கள் மற்றும் உடைகள் பட்ட சித்ரா பராம்பரிய முறையிலேயே வரையப்படுகின்றன. என்றாலும் மொகலாய ஒவியமரபின் சாயல்களும் இவ்வடிவங்களில் காணப்படுகிறது என்பது இக்கலை விமர்சகர்களின் கருத்து. ஒரு ஓவியத்தை ஒரு குடும்பமே ஒன்றாகச் சேர்ந்து உட்கார்ந்து கொண்டு வரைவது இக்கலையின் மற்றோரு சிறப்பாம்சம். பெண்கள் பட்ட சித்ரா கோட்டோவியங்களுக்கான கரு நீலம், காவி, மஞ்சள், போன்ற இயற்கை வண்ணங்களைத் தீட்டுகிறார்கள். பழமை மாறாது காட்சியளிக்கும் இவ்வூர் ஒரு திறந்த வெளிப் பட்ட சித்ரா மியூசியம் போலவே காணப்படுகிறது. வீட்டின் முகப்புகளிலும், சுவர்களிலும் நேர்த்தியான டஸ்ஸர் சில்க் துணிகளின் மேல் வரையப்பட்ட பட்ட சித்ரா ஓவியங்களே காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

விசிறி மடிப்பாக மடிக்கப்பட்டு, கயிற்றினால் நூல் இணைக்கப்பட்ட, பசும் மஞ்சள் நிறப் பனை ஓலைகளின் மேல் மெல்லிய ஊசி கொண்டு பொறிக்கப்பட்ட சித்திரங்கள் மாபெரும் புராண இதிகாசங்களிலிருந்து கதைகளைச் சொல்லுகின்றன. தாலபத்ர சித்ரா (தால-பனை, பத்ரா-இலை (ஓலை), சித்ரா- சித்திரம்) என்று பெயரில் அழைக்கப்படும் பனை ஓலை சித்திங்களில், ஒடிசாவின் கலைஞர்கள் புராணக் கதைகளை அழகாகச் சித்தரிக்கப்படுகின்றனர். இந்தச் சித்திரங்களில் இயற்கையான வண்ணங்களையே பயன்படுத்துகின்றனர்.

இந்தக் கிராமத்தில் வசிக்கும் மூத்த பட்ட சித்ரா கலைஞர்களில் சிலர் பத்ம ஸ்ரீ , லலித் கலா அகாடமி, சங்கீத நாடக அகாடமி போன்ற விருதுகளையும் பெற்றுள்ளனர். ரகுராஜ்பூரின் பார்ப்பரியமிக்கப் பட்ட சித்ரா கலைஞர்கள் மற்றும் தயாரிப்பாளர்களைக் காண்பதற்கும், ஓவியங்களை வாங்குவதற்கும், பட்ட சித்ரா ஓவியக்கலைப் பயிற்சிப் பட்டறையில் (workshop) பயிற்சி பெறவும் ஏராளமான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுப் பயணிகள் இங்கு வருகின்றனர். ரகுராஜ்பூர் கிராமத்தின் நடுவில் உள்ள கலைக்கூடத்தில் பட்ட சித்ரா ஓவியங்கள் காட்சிபடுத்தப்பட்டுள்ளன. விற்பனையும் இங்கு நடைபெறுவதுண்டு. இங்குப் பட்ட சித்ரா பயிற்சிப் பட்டறைகள் நடைபெறுவதுமுண்டு. பயிற்சியாளர்கள் இந்தக் கிராமத்தில் தங்கி ஓவியம் பயிலவும் வசதிகள் உள்ளன.

தனித்துவமான பட்ட சித்ரா கலை, ஒடிஸா பட்ட சித்ரா என்னும் புவிசார் குறியீட்டு அடையாள எண்ணின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஒடிசாவின் கைவினைஞர்களால் வழங்கப்படும் உயர் தரத்தை இது உறுதி செய்கிறது. இந்த புவியியல் குறியீட்டு எண் உண்மையான கைவினைக் கலைஞர்களை, அண்டைப் பகுதிகளில் உள்ள பட்ட சித்ரா கலைஞர்களின் போலி உரிமைக் கோரிக்கைகளால் பாதிக்கப்படாமல் காக்கிறது.

குறிப்புநூற்பட்டி

  1. சடங்கால் வாழும் கலை பாலாஜி ஸ்ரீநிவாசன் தி இந்து 17 ஜூலை 2014
  2. ரகுராஜ்பூர் – அசத்தும் ஓவியங்கள்
  3. 69 best patta chitra images on Pinterest
  4. A pattachitra artist draws from Hindu mythology without depicting anything religious
  5. Experience Patachitra at Raghurajpur Lakshmi Venkateswaran Travel Blogger
  6. Patachitra 
  7. PATTACHITRA: An Art That Speaks For Itself
  8. Patachitra from Orissa Anupama.  Aug 6, 2017
  9. Pattachitra-weaving-through-pictures
  10. Pattachitra workshop next month November 25, 2011
  11. Raghurajpur Odisha- Drawings etc.

ods10002_345x3452x

Taal Pattachitra PC: Culstreet

palm-leaf-pattachitra-960x494

Talapatta Chitra Craft. PC: Gatha.com

10craft7

Artists engraving designs on palm leaves at the workshop on Monday,  The Indian Express 11th April 2017

250240aa51107425a3ebe299116cb08d

Artisans Residences PC: Pinterest

raghurajpur2bpaintings2b-2b12

Krishna playing Flute by sitting on an Elephant. Observe the Elephant. PC: VenkatNagaraj

https3a2f2fmedia-insider-in2fimage2fupload2fc_crop2cg_custom2fv14907700112fdoxy45j2p4r8kjqx3d2y

Lec – Demo: Daksha Mashruwala on Gita Govinda in Dance & Ar PC: Insider.in

jxjlsgytqv-1491555210

Scroll.in A depiction of the Chausathi Kala or the 64 arts which Lord Jagannath is said to possessed. Image Credit: Artisans’

imkmtkmoda-1491555793

Image credit: Artisans’ The Navagunjara beast from the Mahabharata, a common motif in pattachitra.

tqaqqpkbqj-1491550860

A scene from the Krishna-Leela series. | Courtesy Artisans

About முத்துசாமி இரா

புதுக்கோட்டை மாவட்டம் இராமச்சந்திரபுரத்தைப் பிறப்பிடமாகவும், சென்னை சைதாப்பேட்டையை வசிப்பிடமாகவும் கொண்ட இரா.முத்துசாமி, காரைக்குடி அழகப்பா கல்லூரியிலும், சென்னைப் பல்கலைக்கழகத்திலும் பயின்றவர். இவர் 1975ஆம் ஆண்டு தொடங்கி சி.வி.ஆர்.டி.இ (டி.ஆர்.டி.ஓ) ஆவடி, சென்னையில் பணியாற்றி ஒய்வு பெற்றவர். தமிழ் இலக்கியத்திலும், தமிழக வரலாற்றிலும் ஈடுபாடு கொண்டவர்.
This entry was posted in நுண்கலை, வாழ்க்கை முறை and tagged , , , , , , , , . Bookmark the permalink.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.