நாம் கணினியை பரவலாகப் பயன்படுத்தத் தொடங்கிவிட்டோம். கணினியில் பல மென்பொருட்கள் வந்துவிட்டன. இன்றைய டிஜிட்டல் யுகத்தில் அச்சடித்த புத்தகங்கள் கொஞ்சம் கொஞ்சமாக வழக்கொழிந்து வருகிறது. கணினியில் படிப்பதற்கு ஏற்ற வகையில் ஸ்கேன் செய்யப்பட்ட நூல்கள், பி.டி.எஃப் வடிவக் கோப்புகள், மற்றும் மின்னூல்கள் எல்லாம் வந்துவிட்டன. புத்தகங்களும் மின்வடிவம் பெற்று வரத்தொடங்கிப் பல நாட்கள் கடந்துவிட்டன. பி.டி.எஃப் வடிவக் கோப்புகளைப் போலவே இபப் (epub) மற்றும் மொபி (mobi) வடிவக் கோப்புகள் உருவாக்கப்பட்டன. இந்த மின்னூல்களைப் படிப்பதெற்கென்று பிரத்யோகக் கருவிகள் வடிவமைக்கப்பட்டன. மின்னூல்களை எளிதாக வாசிக்க சோனி நிறுவனத்தின் சோனி ஈ-ரீடர் (Sony e-Reader), பார்ன்ஸ் அன் நோபிள் நிறுவனத்தின் நூக் (NOOK), ஆப்பிள் நிறுவனத்தின் ஐபேடு (iPAD) பலகைக் கணினி போன்ற கருவிகள் வெளியிடப்பட்டன.
டிஜிட்டல் மியூசிக் உலகத்தில் மாபெரும் வெற்றி பெற்றதைப்போல, புத்தக உலகிலும் வெற்றிபெற அமேசானின் ஜெஃப் பிஸோஸ் (Jeff Bezos) விரும்பினார். அமேசான்.காம் (Amazon.com) நிறுவனத்தின் மூலம் கம்பியற்ற இணைப்புக்களின் உதவியுடன் மின்நூல்களை வாசிக்கக் கிண்டில் என்ற கருவியை 2007 ஆம் ஆண்டு அறிமுகம் செய்தார். ஒரே நேரத்தில் எழுத்தாளர்களையும், பதிப்பாளர்களையும் மின்னூல்களை வெளியிடும்படி தூண்டினார். இன்று அமேசான்.காம் வணிக இணையதளத்தில் 50 லட்சத்துக்கும் அதிகமான மின்னூல்கள் விற்பனைக்குக் காத்திருக்கின்றன. இந்தப் பதிவு அமேசான்.காம் நிறுவனம் வெளியிட்டு சந்தைப்படுத்தி வரும் கிண்டில் மின்னூல் படிக்கும் கருவி மற்றும் தொழில்நுட்பம் பற்றிய சிறு அறிமுகத்தை இங்கு வழங்குகிறது. ஒருவேளை நீங்கள் கிண்டில் கருவி வாங்க முடிவெடுத்தால் இவை உதவக்கூடும்.
வரலாறு
தொடக்கத்தில் அச்சடித்த புத்தகங்கள் ஸ்கேன் (scan) செய்யப்பட்டுக் கோப்புகளாகத் தொகுத்துப் பயன்படுத்தினோம். குட்டன்பேர்க் திட்டம் (Project Gutenberg) இணையத்தில் மின்னூல்களை வெளியிடும் திட்டங்களில் முதலாவதாகக் கருதப்படுகிறது. 1971 ஆம் ஆண்டுத் தொடங்கப்பட்ட இத்திட்டம், 1990 ஆம் ஆண்டிலிருந்து வேகம் பெற்றுச் செயல்படுகின்றது. மின்புத்தகங்களைக் குறுந்தகடுகளில் (Computer Disc) விற்பனை செய்யத் தொடங்கினர். இதுவரை 19,000 நூல்கள் மின்னூல்களாக வெளியிடப்பட்டுள்ளன. 1993 ஆம் ஆண்டு மின் புத்தகங்களைப் கணினியில் படிப்பதெற்கென்று தனியாக மென்பொருள் (software) வெளியிடப்பட்டது. 1993 ஆம் ஆண்டுமுதல் இணையத்தில் மின்னூல்கள்கள் விற்பனைக்கு வந்தன. 1998 ஆம் ஆண்டில் சர்வதேச குறியீட்டு எண் (International Standard Book Number ISBN) மின் புத்தகங்களுக்கு வழங்கப்பட்டன.
1998 ஆம் ஆண்டிலேயே ராக்கெட் இ-புக் மற்றும் சாஃட்புக் என்ற கருவிகளை மின் புத்தகங்களைப் படிப்பதற்கென்று பிரத்தியோகமாக வெளியிட்டு சந்தைப்படுத்தினர். 1999 ஆம் ஆண்டு மின் புத்தகம் விற்கும் வலைத்தளங்கள் புழக்கத்திற்கு வந்தன. பேன் புக்ஸ் (Baen Books) என்ற அறிவியல் புனைவுக் கதைகளை வெளியீட்டாளர் தனது சில மின்னூல்களை இணையத்தில் இலவசமாக வெளியிட்டது. இந்தப் பேன் புக்சின் அங்கமான வெப்ஸ்கிருப்ஷன் நிறுவனம் 2000 ஆம் ஆண்டு முதல் மின்புத்தகங்களைகாப்புரிமைத் தளைகள் ஏதுமில்லாமல் விற்பனை செய்தது. அமேசான் நிறுவனம் மோபிபாக்கெட் (Mobipocket) என்ற ஃபிரெஞ்சு மின்னூல் பதிப்பகத்தை விலைகொடுத்து வாங்கி மின்னூல் சந்தைக்குள் அடியெடுத்து வைத்தது. 2000 ஆம் ஆண்டு முதல் 2010 ஆண்டு வரை ஐரெக்ஸ் (iRex) நிறுவனத்தின் இலியட் (ILiad) (2006); சோனி (Sony) நிறுவனத்தின் சோனி ரீடர் (Sony Reader) (2007); அமேசான்.காம் நிறுவனத்தின் கிண்டில் (Kindle) (2007); பார்னஸ் அண்டு நோபிள் (Barnes & Noble) நிறுவனத்தின் நூக் (NOOK) (2009) போன்ற மின்னூல் வாசிப்புக் கருவிகள் விற்பனைக்கு வந்தன. தற்போது மின்னூல் படிக்கும் கருவிகள் தொழில்நுட்பத்தில் வெகுவாக முன்னேற்றம் பெற்றுள்ளன. பார்வை 1, பார்வை 2
அமேசான்.காம்
அமேசான்.காம், இன்கு (amazon.com, நாஸ்டாக்: AMZN), சியாட்டல், வாசிங்டன் நகரில் அமைந்துள்ள ஓர் அமெரிக்க பன்நாட்டு இணைய வணிக நிறுவனம். ஜெஃப் பெசோஸ் (Jeff Bezos) என்பவரால் 1994 ஆம் ஆண்டு ஜூலை 5 நாள் தொடங்கப்பட்டு, 1995 ஆம் ஆண்டு இணைய தளத்தில் வெளியிடப்பட்ட அமேசான்.காம் இன்று மிகப்பெரிய இணைய விற்பனை அங்காடியாக வளர்ந்து உலகம் முழுதும் தனது சேவையினை அளித்து வருகிறது. ஆன்லைன் சேவை மூலம் மின் நூல்களை வழங்கி கிண்டில் எனும் இ.ரீடரில் படிக்கும் வசதியினை மேம்படுத்துவதில் அமேசான்.காம் முன்நிலையில் வகித்து வருகிறது.
அமேசான்.காம் தனது படைப்பான கிண்டில் மின்னூல் ரீடர் (Kindle electronics book reader) மூலம் புத்தகச் சந்தையில் ஒரு முக்கியமான இடத்தைப் பிடித்துள்ளது. எளிய வடிவமைப்பு, நீடித்து செயல்படும் பேட்டரி போன்ற தொழில் நுட்பங்கள் கிண்டில் மின்னூல் ரீடரின் வெற்றிக்குக் காரணங்களாகும். அமேசான்.காம் 2015 ஆம் ஆண்டு முதல் நான்கு நவீன தொழில்நுட்பம் கொண்ட கிண்டில் மாடல்களை அறிமுகப்படுத்தியுள்ளது. அவை: 1. கிண்டில் (Kindle பேசிக்), 2. கிண்டில் பேப்பர்ஒயிட் (Kindle Paperwhite); 3. கிண்டில் வோயேஜ்(Kindle Voyage) மற்றும்4. கிண்டில் ஒயாஸிஸ் (Kindle Oasis) என்பனவாகும்.
கிண்டில் (Kindle பேசிக்)

Kindle Basic PC: Good Reader
மாடல்: ஏழாம் ஜெனெரேசன் தொழில் நுட்பம்;
அறிமுகப்படுத்தப்பட்ட ஆண்டு: 2014 ஆம் ஆண்டு
திரை அளவு: 6 இன்ச் (15.24 செ.மீ)
திரையில் எல்.இ.டி மூலம் ஒளியூட்ட வசதி: இல்லை
திரை வகை: இ-இங்க் பேர்ள் ஹை டெஃபனிஷன் (E Ink Pearl High Definition)
எடை: 161 கிராம்
திரை அடர்த்தி: 600 x 800 பிக்ஸெல்ஸ்
பிக்ஸெல் அடர்த்தி: 167 பிக்ஸெல்ஸ் / இன்ச்
தொடு திரை (டச் ஸ்க்ரீன்): உண்டு
பக்கம் நகர்த்தும் பொத்தான்: இல்லை
வை-ஃபை வசதி: வை-ஃபை (Wi-Fi)
டெக்ஸ்ட் மூலம் பேசும் வசதி: இல்லை
ஃபைல் ஃபோல்டர்: உண்டு அகநிலை சேமிப்பு (Internal Storage): 4 (Mb.)
லைப்ரரி டிஜிட்டல் ரைட்ஸ் மேனேஜ்மெண்ட் இணக்கத்தன்மை: யு.எஸ்ஸில் மட்டும்
யு.எஸ்.பி. பெரிஃப்ரல்: இல்லை
விலை: யு.எஸ். 79.99 ரூ. 4999.00 (Price from Amazon site on December 23, 2017)
கிண்டில் பேப்பர்ஒயிட் (Kindle Paperwhite)

Kindle Paperwhite PC: Amazon
மாடல்: மூன்றாம் ஜெனெரேசன் தொழில் நுட்பம் / வை-ஃபை / 3G;
அறிமுகப்படுத்தப்பட்ட ஆண்டு: 2015 ஆம் ஆண்டு
திரை அளவு: 6 இன்ச் (15.24 செ.மீ)
திரையில் எல்.இ.டி மூலம் ஒளியூட்ட வசதி: 4 எல்.இ.டி உண்டு
திரை வகை: இ-இங்க் கார்ட்டா ஹை டெஃபனிஷன் (E Ink Carta High Definition)
எடை: 205 கிராம்
திரை அடர்த்தி: 1080 x 1430 பிக்ஸெல்ஸ்
பிக்ஸெல் அடர்த்தி: 300 பிக்ஸெல்ஸ் / இன்ச்
தொடு திரை (டச் ஸ்க்ரீன்): உண்டு 2 – பாய்ண்ட்
பக்கம் நகர்த்தும் பொத்தான்: இல்லை
வை-ஃபை வசதி: வை-ஃபை (Wi-Fi), சி.டி.எம்.ஏ, ஜி.எஸ்.எம்
டெக்ஸ்ட் மூலம் பேசும் வசதி: இல்லை
ஃபைல் ஃபோல்டர்: உண்டு
அகநிலை சேமிப்பு (Internal Storage): 4 (Mb.)
வெப் பிரவுசர்: உண்டு
லைப்ரரி டிஜிட்டல் ரைட்ஸ் மேனேஜ்மெண்ட் இணக்கத்தன்மை: யு.எஸ்ஸில் மட்டும்
யு.எஸ்.பி. பெரிஃப்ரல்: இல்லை
விலை: யு.எஸ். 99.99 ரூ. 8999.00 (Price from Amazon site on December 23, 2017)
கிண்டில் வோயேஜ்(Kindle Voyage)

Kindle Voyage PC: Amazon
மாடல்: மூன்றாம் ஜெனெரேசன் தொழில் நுட்பம் / வை-ஃபை / 3G;
அறிமுகப்படுத்தப்பட்ட ஆண்டு: 2014 ஆம் ஆண்டு
திரை அளவு: 6 இன்ச் (15.24 செ.மீ)
திரையில் எல்.இ.டி மூலம் ஒளியூட்ட வசதி: 6 எல்.இ.டி உண்டு
திரை வகை: இ-இங்க் கார்ட்டா ஹை டெஃபனிஷன் (E Ink Carta High Definition)
எடை: 180 கிராம்
திரை அடர்த்தி: 1080 x 1430 பிக்ஸெல்ஸ்
பிக்ஸெல் அடர்த்தி: 300 பிக்ஸெல்ஸ் / இன்ச்
தொடு திரை (டச் ஸ்க்ரீன்): உண்டு 2 – பாய்ண்ட்
பக்கம் நகர்த்தும் பொத்தான்: இரண்டு பக்கமும் சென்சார் உண்டு
வை-ஃபை வசதி: வை-ஃபை (Wi-Fi), சி.டி.எம்.ஏ, ஜி.எஸ்.எம்
டெக்ஸ்ட் மூலம் பேசும் வசதி: இல்லை
ஃபைல் ஃபோல்டர்: உண்டு
அகநிலை சேமிப்பு (Internal Storage): 4 (Mb.)
வெப் பிரவுசர்: உண்டு
லைப்ரரி டிஜிட்டல் ரைட்ஸ் மேனேஜ்மெண்ட் இணக்கத்தன்மை: யு.எஸ்ஸில் மட்டும்
யு.எஸ்.பி. பெரிஃப்ரல்: இல்லை
விலை: யு.எஸ். 199.99 ரூ. 12298.00 to ரூ. 16499.00 (Price from Amazon site on December 23, 2017)
கிண்டில் ஒயாஸிஸ் (Kindle Oasis)

Kindle Oasis PC: Amzon
மாடல்: மூன்றாம் ஜெனெரேசன் தொழில் நுட்பம் / வை-ஃபை / 3G;
அறிமுகப்படுத்தப்பட்ட ஆண்டு: 2014 ஆம் ஆண்டு
திரை அளவு: 7 இன்ச் (17.78 செ.மீ)
திரையில் எல்.இ.டி மூலம் ஒளியூட்ட வசதி: 12 எல்.இ.டி adoptive Light Sensor உண்டு
வாட்டர் ப்ரூஃப்: IPX 8 தொழில்நுட்பம் உண்டு (2 மீ. ஆழத்தில் நன்னீரில் 60 நிமிடம் நீர் புகாது)
திரை வகை: இ-இங்க் கார்ட்டா ஹை டெஃபனிஷன் (E Ink Carta High Definition)
எடை: 194 கிராம்
திரை அடர்த்தி: 1080 x 1430 பிக்ஸெல்ஸ்
பிக்ஸெல் அடர்த்தி: 300 பிக்ஸெல்ஸ் / இன்ச்
தொடு திரை (டச் ஸ்க்ரீன்): உண்டு 2 – பாய்ண்ட்
பக்கம் நகர்த்தும் பொத்தான்: ஒரு பக்கம் சென்சார் உண்டு
வை-ஃபை வசதி: வை-ஃபை (Wi-Fi), சி.டி.எம்.ஏ, ஜி.எஸ்.எம்
டெக்ஸ்ட் மூலம் பேசும் வசதி: இல்லை
ஃபைல் ஃபோல்டர்: உண்டு
அகநிலை சேமிப்பு (Internal Storage): 8 அல்லது 32 (Gb.)
வெப் பிரவுசர்: உண்டு
லைப்ரரி டிஜிட்டல் ரைட்ஸ் மேனேஜ்மெண்ட் இணக்கத்தன்மை: யு.எஸ்ஸில் மட்டும்
யு.எஸ்.பி. பெரிஃப்ரல்: இல்லை
விலை: யு.எஸ். 249.99 ரூ. 21999.00 முதல்… (Price from Amazon site on December 23, 2017)
குறிப்பு நூற்பட்டி
- அமேசான் கின்டில் விக்கிப்பீடியா
- தொழில் முன்னோடிகள்: ஜெஃப் பிஸோஸ் (1964) தி இந்து ஆக்டோபர் 03, 2017 http://tamil.thehindu.com/business/article19789712.ece
- Comparison of e-readers Wikipedia
- Kindle E-readers https://www.amazon.com/Amazon-Kindle-Ereader-Family/b?ie=UTF8&node=6669702011
வாழ்ததுக்கள் அருமையான பதிவு.
LikeLike
நன்றி. திரு.Jay Mayu
இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.
வருகைக்கும் பதிவிற்கும் மிக்க நன்றி. அடிக்கடி தங்கள் வரவை எதிர்நோக்கியுள்ளேன்.
நன்றி
அன்புடன்
இரா.முத்துசாமி
LikeLike