தமிழில் மின்னூல்கள்: அமேசான் கிண்டில் இ-புக்ஸ், கூகுள் பிளே மற்றும் சிறு தரவுத் தளங்கள்

மின்னூல் (electronic book or e-book) என்பது எண்முறை (டிஜிட்டல்) வெளியீடாகும். இந்த வகை நூல்கள் சித்திரங்கள் மற்றும் வரைபடங்கள் (கிராபிக்ஸ்) போன்ற அம்சங்களைக் கொண்டிருந்தாலும், இவை உரைநடையைப் பிரதானமாகக் கொண்ட நூற்களாகும். மின்னூல்கள் என்பது ஐ-ரீடர் (I-Reader), இ-ரீடர் (E-Reader), டேப்லெட் (Tablet),, லேப்டாப் (Laptop) மற்றும் டெஸ்க் டாப் பி.சி (P.C ) போன்ற அனைத்து மின்னணுக் கருவிகளிலும் படிக்கக்கூடிய புத்தகங்களாகும். இது மட்டுமின்றி, தற்போது மின்னூல்களைப் படிப்பதற்கென்று பிரத்யேகமாக அமேசான்.காம் (Amazon.com) – கிண்டில் (Kindle), பார்னெஸ் ஆண்டு நோபிள் (Barnes & Noble) – நூக் (Nook), புக்கீன் (Bookeen) – சைபுக் (Cybook), கோபோ (Kobo) _ கோபோ (Kobo), ஓனிக்ஸ் Onyx – ஓனிக்ஸ் (Onyx), பாக்கெட் புக் (PocketBook) – பாக்கெட் புக் (PocketBook), சோனி (Sony) – சோனி ரீடர் (Sony Reader), மற்றும் டோலினோ (Tolino) – டோலினோ (Tolino). போன்ற இ-மின்னணுக் கருவிகளும் (ரீடர் அல்லது இ-புக் ரீடர்) கிடைக்கின்றன.

டேப்லெட் கம்ப்யூட்டர், சுருக்கமாக டேப்லெட் என்று அழைக்கிறார்கள், என்பது எளிதில் எடுத்துச் செல்லத்தக்க (portable) ஒரு சிறிய பிசி ஆகும். இந்த டேப்லெட்டில் பொதுவாக ஒரு மொபைல் இயக்க முறைமை (mobile operating system) மற்றும் எல்.சி.டி (LCD) தொடுதிரை, காட்சி அமைப்பு மின்னணு சுற்று (display processing circuitry), மீண்டும் ஆற்றல் ஏற்ற வல்ல மின்கலம் (rechargeable battery) ஆகிய எல்லாம் ஒரு மெல்லிய தட்டையான கலனில் தொகுக்கப்பட்டிருக்கும். டேப்லேட், மற்ற பி.சி. ஐ போலஇயங்கும் ஒரு கணினி தான் என்றாலும், சில I / O திறன்களைக் கொண்டிருக்காது. ஆப்பிள் நிறுவனம் 2010 ஆம் ஆண்டு வெளியிட்ட பல செயல்பாடுகளைக் கொண்ட டேப்லெட்டுக்கு ஐ-பேட் என்று பெயர்.

டெஸ்க்டாப்,, லேப்டாப், மற்றும் ஸ்மார்ட் போன் போன்ற உபகரணங்களில் மின்னூல்களைப் படிக்கும்போது, சில பக்கங்களைப் படிப்பதற்குள் கண்கள் வலிக்க ஆரம்பித்துவிடும். மின்னூல்கள் மற்றும் மின்-பத்திரிகைகள் போன்றவற்றை வசதியாகவும் எளிதாகவும் வாசிக்க இ-ரீடர் அல்லது இ-புக் ரீடர் அல்லது இ-புக் கருவி என்று அழைக்கப்படும் டிஜிட்டல் மின்னணுக் கருவிகள் வடிவமைக்கப்பட்டன. இந்த மின்னணு இணக்கமான சாதனத்தைப் (electronically compatible device) பயன்படுத்தி மின்னூல்களைப் படிக்க முடியும். இவை வடிவில் சிறியதாகவும் எளிதில் பகிரவும், விலைக்கு வாங்கவும் கூடிய வகையில் வசதியாக அமைந்துள்ளன. மின்னூல்கள், எடை குறைவாகவும், மிகுந்த சேமிப்புத் திறன் உடையதாகவும், பயணத்தில் படிக்கத் தக்கதாகவும், மின் குறிப்புகள், உரை சுருக்கங்கள் செய்யத் தகுந்ததாகவும் அமைந்துள்ளன.

மின்னணுக் கருவிகளில் படிக்கக்கூடிய கோப்பு வடிவங்கள் (File Format)

நிறுவனத்தின் பெயர் (Name of the Institution) கோப்பு வடிவம் (File Format) கோப்பு நீட்சி (file extension)
சோனி நிறுவனத்தின் பிராட் பேண்ட் இ-புக்ஸ் (Broadband eBooks (BBeB) Sony Media .irx / .irx
மைக்ரோ சாஃப்டின்  எச்.டி.எம்.எல். (Microsoft HTML) Microsoft Compiled HTML help .chm
சர்வதேச டிஜிட்டல் பப்ளிஷிங் ஃபாரம் (International Digital Publishing Format IDPF) IDPF / EPUB .epub
இ-ரீடர் (e-Reader) Palm Media .pdb
ஹைப்பர் டெக்ஸ்ட் மார்க்கப் லாங்வேஜ் ) Hypertext Markup Language) Hypertext .htm; .html and typically auxiliary images, js and css
கிண்டில் (அமேசான்) Kindle (Amazon) Kindle .azw; .azw3 or .kf8; .kfx
மைக்ரோ சாஃப்ட் எல்.ஐ.டி (Microsoft LIT) Microsoft Reader .lit
மொபிபாக்கெட் (Mobipocket) Mobipocket .prc .mobi
மல்டிமீடியா இபுக்ஸ் (Multimedia eBooks) Eveda .exe (or) .html
ஓப்பன் எலெக்ட்ரானிக்ஸ் பேக்கேஜ் (Open Electronic Package) – Open ebook .opf
போர்ட்டபிள் டாகுமெண்ட் ஃபார்மெட் (Portable Document Format (PDF) Portable Document Format .pdf
பிளெய்ன் டெக்ஸ்ட் ஃபைல்ஸ் (Plain text files) Text .txt
போஸ்ட் ஸ்கிரிப்ட் (PostScript) Post Script .ps
ரிச் டெக்ஸ்ட் ஃபார்ட்மெட் (Rich Text Format) – கோப்பு நீட்சி (file extension) .rtf Rich Text Format .rtf

இபப் (epub) கோப்பு வடிவம்

 • கோப்பு வடிவம் (File Format): EPUB IDPF இபப் (epub) என்பது எலக்ட்ரானிக் பப்ளிஷிங் (Electronic PUblishing) என்பதன் சுருக்கம் ஆகும். இதை ePub என்ற குறிப்பிட்ட பாணியில் (style) எழுதுகிறார்கள். ஆன்ட்ராய்ட் போனில் FBReader ஆப்களையும், ஆப்பிள் கருவிகளில் iBooks ஆப்களையும் தரவிறக்கம் செய்துகொண்டு epub ஃபைல் பார்மேட்டில் உள்ள மின்னூல்களைப் படிக்கலாம்.
 • கோப்பு நீட்டிப்பு (File extension) : .epub
 • கோப்புகளை: ஸ்மார்ட்போன், டேப்லெட்ஸ், லேப்டாப் மற்றும் இ-ரீடர் போன்றவற்றில் படிக்கலாம். நூக், கோபோ, சோனி மின்னூல் இ-ரீடர் கருவிகள் epub ஃபைல் ஃபார்மேட்டை ஆதரிக்கின்றன.
 • சித்திரங்கள்: ஆதரிக்கிறது
 • காணொளி (Video) : ஆதரிக்கிறது
 • பட்டியல் (Table): ஆதரிக்கிறது
 • ஒலி (Sound): ஆதரிக்கிறது
 • ஊடாடுதல் (Inter-activitiy): ஆதரிக்கிறது
 • வார்த்தை மடங்குதல் (Word Wrap): ஆதரிக்கிறது
 • உட்பொதிக்கப்பட்ட சிறுகுறிப்பு (Embedded Annotation): ஆதரிக்கிறது
 • புத்தகக் குறிப்பான் (Book Mark): ஆதரிக்கிறது.
 • திறந்த தரநிலை (Open Standard): சர்வதேச டிஜிட்டல் பப்ளிஷிங் ஃபாரம் (International Digital Publishing Forum (IDPF) என்ற தொழில்நுட்ப தரநிலையை ஆதரிக்கிறது

2007ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் பழைய திறந்த இபுக் தரநிலைக்குப் (Open eBook standard) பதிலாக EPUB IDPF தரநிலை புகுத்தப்பட்டுள்ளது. புக் இன்டஸ்டரி ஸ்டடி குரூப் (Book Industry Study Group) இபப் 3 (EPUB 3) ஐ புத்தகத் தொகுப்பின் உள்ளடக்க வடிவமாக (format of choice for packaging content) அங்கீகரித்துள்ளது. மிகவும் பரவலான விற்பனையாளர் சுவாதந்திரிய ஆதரவு பெற்ற இபப் (ePub), PDF வடிவிலிருந்து மாறுபட்டதும், எக்ஸ்..எம்எல் (XML) ஐ அடிப்படையாகக் கொண்ட மின்னூல் கோப்பு நீட்சி வடிவாகும். இபப் (ePub) பெருவாரியான மின்னூல் வசிக்கும் கருவிகளை ஆதரிக்கிறது.

மொபி (mobi) கோப்பு வடிவம்

 • கோப்பு வடிவம் (File Format): மொபிபாக்கெட் (Mobipocket) . மென்பொருள் தொகுப்பு இலவசமானது.சர்வதேச டிஜிட்டல் பப்ளிஷிங் ஃபாரம் (International Digital Publishing Forum (IDPF 1.0 மற்றும் IDPF 2.00) என்ற வடிவத்தை அமேசானின் கிண்டில் ஆதரிக்கிறது.
 • கோப்பு நீட்டிப்பு (File extension) : .mobi மற்றும் .prc,
 • கோப்புகளை: ஸ்மார்ட்போன், டேப்லெட்ஸ், லேப்டாப் மற்றும் இ-ரீடர் போன்றவற்றில் படிக்கலாம்.
 • சித்திரங்கள் (Images): ஆதரிக்கிறது சித்திரங்கள் GIF வடிவத்திற்கு மாற்றப்படுகின்றன. இதன் அதிகபட்ச அளவு 64k ஆகும்.
 • காணொளி (Video) : ?
 • பட்டியல் (Table): ஆதரிக்கிறது
 • ஒலி (Sound): ஆதரிக்கவில்லை
 • ஊடாடுதல் (Inter-activitiy): ஆதரிக்கவில்லை
 • வார்த்தை மடங்குதல் (Word Wrap): ஆதரிக்கிறது
 • உட்பொதிக்கப்பட்ட சிறுகுறிப்பு (Embedded Annotation): ஆதரிக்கிறது. அகராதி இணைக்கப்பட்டுள்ளது.
 • புத்தகக் குறிப்பான் (Book Mark): ஆதரிக்கிறது
 • திறந்த தரநிலை (Open Standard): ஆதரிக்கவில்லை
 • அமேசான்.காம் அக்டோபர் 31, 2016 ஆம் தேதியன்று Mobipocket வலைத்தளம் மற்றும் சேவையகங்களை மூடிவிட்டது. அமேசான் நிறுவனம் மின்னூல்களைப் படிப்பதற்காகவே உருவாக்கிய கிண்டில் கருவிகள் Mobi என்ற ஃபைல் ஃபார்மேட்டை ஆதரிக்கின்றன. ஆன்ட்ராய்ட், ஆப்பிள் கருவிகளில் கிண்டில் ஆப்களைத் தரவிறக்கம் செய்து கொண்டு Mobi ஃபைல் ஃபார்மேட்டில் உள்ள மின்னூல்களைப் படிக்கலாம்.

பி.டி.எஃப் கோப்பு வடிவம்

 • கோப்பு வடிவம் (File Format): போர்ட்டபிள் டாகுமெண்ட் ஃபார்மெட் பி.டி.எஃப் (Portable Document Format – PDF) என்பது எளிதில் மாற்றத்தக்க கோப்பு வடிவமாகும். இந்தக் கோப்பு வடிவம் மென்பொருள் (software), வன்பொருள் (hardware), அல்லது இயக்க முறைமைகளில் (operating system) இருந்து சுயமாக ஆவணங்களைப் பரிமாற உதவுகிறது.
 • கோப்பு நீட்டிப்பு (File extension) : .pdf
 • கோப்புகளை: இந்தக் கோப்பை அடோப் அக்ரோபேட் ரீடர் (Adobe Acrobat Reader) என்னும் மென்பொருளைப் பயன்படுத்திப் படிக்கவியலும்.
 • சித்திரங்கள் (Images): ஆதரிக்கிறது
 • காணொளி (Video) : ஆதரிக்கிறது
 • பட்டியல் (Table): ஆதரிக்கிறது
 • ஒலி (Sound): ஆதரிக்கவில்லை
 • ஊடாடுதல் (Inter-activitiy): ஆதரிக்கவில்லை
 • வார்த்தை மடங்குதல் (Word Wrap): ஆதரிக்கிறது / ஆதரிக்கவில்லை
 • உட்பொதிக்கப்பட்ட சிறுகுறிப்பு (Embedded Annotation): ஆதரிக்கிறது.
 • புத்தகக் குறிப்பான் (Book Mark): ஆதரிக்கிறது
  திறந்த தரநிலை (Open Standard): திறந்த தரநிலை கோப்பு வடிவமான (Open source file format ) அடோப் சிஸ்டம்ஸ் (Adobe systems) பி.டி.எஃப் (PDF) வடிவத்தை சர்வதேச தரநிர்ணய அமைப்பு பராமரித்து வருகிறது..

A4 அளவில் உள்ள PDF ஃபைல் ஃபார்மேட்டில் இருக்கும் மின்னூல்கள் டெஸ்க்டாப் / லேப்டாப்புகளிலும், பிரவுசர் சாஃப்ட்வேர்களிலும் படிக்க வசதியாக இருக்கும். மாறாகப் பழைய கிண்டில், நூக் போன்ற மின்னூல் ரீடர் கருவிகளில் படிப்பதற்கு மிகவும் கஷ்டமாக இருக்கும். ஏனெனில் எழுத்துகள் சிறியதாகத் தெரியும். பெரிதாக்கி, அப்படியும் இப்படியும் நகர்த்திப் படிப்பது மிகவும் கடினமான செயல்.

அமேசான் மின்னூல்கள்:  அமேசான் கிண்டில் இ-புக்ஸ்

அமேசான்.காம், இன்கு (amazon.com, நாஸ்டாக்: AMZN), சியாட்டல், வாசிங்டன் நகரில் அமைந்துள்ள ஓர் அமெரிக்க பன்நாட்டு இணைய வணிக நிறுவனம். ஜெஃப் பெசோஸ் (Jeff Bezos) என்பவரால் 1994 ஆம் ஆண்டு ஜூலை 5 நாள் தொடங்கப்பட்டு, 1995 ஆம் ஆண்டு இணைய தளத்தில் வெளியிடப்பட்ட அமேசான்.காம் இன்று மிகப்பெரிய இணைய விற்பனை அங்காடியாக வளர்ந்து உலகம் முழுதும் தனது சேவையினை அளித்து வருகிறது. ஆன்லைன் சேவை மூலம் மின்னூல்களை வழங்கி கிண்டில் எனும் இ.ரீடரில் படிக்கும் வசதியினை மேம்படுத்துவதில் அமேசான்.காம் முன்நிலையில் வகித்து வருகிறது. இப்போது வரை, கின்டெல் 4 மில்லியன் புத்தகங்களையுடைய‌ ஒரு நூலகத்தைக் கொண்டுள்ளது (library of 4 million books) என‌ அமேசான் கூறுகின்றது.

2016 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் முதல் தேதியிலிருந்து, அமேசான் நிறு­வனம், தமிழ், இந்தி, மராத்தி, குசராத்தி, மலையாளம் ஆகிய ஐந்து இந்திய மொழிகளில் மின்னூல்களின் விற்பனையைத் துவக்கியுள்ளது. பார்வை: இந்திய மின்னூல்கள் தமிழ் மின்னூல்கள். இந்திய மொழிகளில் மொத்தம் உள்ள 3,896 மின்னூல்களில் தமிழில் மட்டும் 1374 மின்னூல்கள் உள்ளன என்று ஒரு கணக்குச் சொல்கிறது.

amazon-kindle-book-store-759

கிண்டிலில் புத்தகங்களை வாங்குவதற்கு அமேசான்.காம் இல் ஒரு கணக்கினை இங்கு துவக்கிக் கொள்ளலாம். இங்கு புகுபதிகை செய்து உள்-நுழையலாம். குறிப்பிட்ட புத்தகத்தை வாங்குவதற்கு உங்கள் கணினியின் பிரவுசர் (browser) அல்லது உங்கள் கிண்டில் ரீடர் (kindle reader) அல்லது கிண்டில் ஆப் (kindle app) இவற்றில் ஏதாவது ஒன்றைப் பயன்படுத்திக் கொள்ளலாம். கிண்டில் டேப்லெட் (tablet) வகைகளோடு இல்லாமல் ஆண்ட்ராய்டு  (android) மற்றும் ஐஓஎஸ் இயங்குதளங்களில் (iOS operating system) கிடைக்கும் கிண்டில் ஆப்ஸ்களையும் பயன்படுத்தி இந்த மின்னூல்களை வாசிக்கலாம்.

amazon-kindle-publishing-ebooks

கணினியில் iOS, Android, Mac மற்றும் PC களுக்கான இலவச அமேசான் கிண்டில் செயலிகள் இலவசமாகக் கிடைக்கிறது. இதனைக் கணினியில் கூகுள் பிளே ஸ்டார் அல்லது ஆப்பிள் பிளே ஸ்டார், அல்லது அமேசான் கிண்டில் ஆப் போன்ற இயங்குதளங்களில் தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.

அமேசானில் தற்போதுள்ள மின்னூல்கள், ஏற்கனெவே அச்சு வடிவில் வெளியிடப்பட்ட நூல்களாகும். இந்த மின்னூல்கள் அமேசானின் இந்திய தளத்தில் மட்டும் விற்பமனையாகின்றன. அமேசான் இந்­தியா நிறு­வனம் பழைய புத்­த­கங்­களை வழங்கும் சேவையையும் இந்­தி­யாவில் துவக்­கி­யி­ருக்­கி­றது. மற்ற நாடுகளில் வசிக்கும் அமேசான் பயனர்கள் அமேசான் இந்தியா பக்கத்திற்குச் சென்றாலும் மின்நூல்களை வாங்குவதற்கு வாய்ப்பில்லையாம். “இத்தலைப்பு (உங்கள் நாட்டில்) இல்லை” என்று செய்தி மட்டும் வருகிறதாம்.

அமேசானின் கிண்டில் இ-புக் தளத்தில் உங்களுக்குத் தேவையான மின்னூலின் பெயர் அல்லது எழுத்தாளர் பெயர் போன்ற நூற்பட்டியல் விவரங்களைக் கொண்டு தேடினால் உடனடியாக அந்த மின்னூல் பற்றிய விபரங்கள் பட்டியலிடப்படும்.

முதலில் நீங்கள் வாங்க விரும்பும் புத்தகத்தைத் தெரிவு செய்துகொள்ளவும். அமேசன் தளத்தில் ஏற்கனவே நீங்கள் பதிவுசெய்திருந்தால் அந்த மின்னஞ்சல் முகவரி பாஸ்வேர்ட் கொண்டு புகுபதிகை செய்யுங்கள். பெயர் மற்றும் உங்கள் வீட்டின் முகவரி, நாடு, தொலைபேசி இலக்கம் போன்ற தகவல்களை மிகச்சரியாகப் பதிவு செய்யுங்கள்.

கிரெடிட் கார்டு / டெபிட் கார்டு மூலமாகவோ அல்லது இன்டர்நெட் பேங்கிங் மூலமாகவோ உங்கள் பணத்தைச் செலுத்தலாம். உங்கள் பணம் அமேசானில் வரவு வைத்தவுடன் நீங்கள் கோரிய புத்தகத்தைத் தரவிறக்கிக்கொள்ள அனுமதிப்பார்கள். நீங்கள் வைத்துள்ள ஆண்ட்ராய்டு டேப்லெட், கிண்டில், நூக் போன்ற எந்தக் கருவியை வேண்டுமானாலும் பயன்படுத்திப் புத்தகத்தைத் தரவிறக்கம் செய்துகொள்ளலாம்.

இவ்வாறு தரவிறக்கம் செய்யும் மின்னூல்(கள்) கிளவுடில் (cloud) சேகரமாகும். வேண்டும்போது அவற்றைக் கிளவுடில் இருந்து தரவிறக்கி படித்தபின் உங்கள் கருவியிலிருந்து நீக்கி (Delete) விடலாம். ஆனால் மின்னூல்(கள்) கிளவுடில் பாதுகாக்கப்படும். எப்போது வேண்டுமானாலும் மீண்டும் தரவிறக்கிப் படித்துக்கொள்ளலாம். அமேசானில் கிண்டில் கருவி மற்றும் மின் புத்தகங்களுக்கான சலுகைக் கட்டணத்தைக் குறிப்பிட்ட நாட்களில் நிர்ணயித்து அளிக்கிறார்கள். இதையும் வாசகர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.

கிண்டில் அன்லிமிடெட்

கிண்டில் அன்லிமிடெட் என்று ஒரு திட்டமும் உள்ளது. இது தற்போது பயன்படுத்திவரும் லெண்டிங் லைப்ரரி திட்டம் போன்றதுதான். நீங்கள் செய்ய வேண்டியது இதுதான். ஒரு வருடத்திற்கு அல்லது ஒரு மாதத்திற்கு என நிர்ணயித்த கட்டணத்தைக் கட்டிவிட்டால் நீங்கள் விரும்பும் ஒன்றுக்கும் மேற்பட்ட புத்தகங்களைக்கூட தரவிறக்கிக்கொள்ளலாம். ஒவ்வொரு புத்தகத்திற்கும் தனித்தனியே பணம் தர வேண்டாம். படித்த புத்தகத்தைத் திரும்பிக் கொடுத்தால் போதும். வேறு ஒரு புத்தகத்தை தரவிறக்கம் செய்துகொள்ளலாம். விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள்

தமிழ் கூகுள் பிளே புத்தகங்கள்

அமேசானின் போட்டி நிறுவனமான கூகுள் பிளே புக்ஸ் சேவையும் பல்வேறு இந்திய மொழிகளில் புத்தகங்களை வழங்கி வருகிறது. கூகிள் நிறுவனம் 2012 ஆம் ஆண்டு மார்ச் மாதம் தனது ஆன்டிராய்டு அங்காடியையும், இசைச் சேவையையும் இணைத்து கூகிள் பிளே ஸ்டார் (Google Play Store) என்னும் சேவையை ஆரம்பித்தது. இந்த கூகிள் பிளே ஸ்டார் சேவை வழியாக டிஜிட்டல் தகவல்களை வழங்குகிறது. இது தவிர இசைக்கோப்புகள் (music files), புத்தகங்கள் (books), இதழ்கள் (magazines), திரைப்படங்கள் (movies), தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் (television programs), விளையாட்டுகள் (games) போன்றவற்றையும் இங்கு பெறலாம்.

கூகுள் பிளே புத்தகங்கள் (Google Play Books) என்பது மின்னூல்களை டிஜிட்டல் முறையில் விநியோகிக்கும் சேவையாகும். கூகுள் பிளே புத்தகங்கள் ஐந்து மில்லியன் மின்னூல்களை தன் சேவை மூலமாக விநியோகிக்கிறது. இதன் பயனர்கள் தங்கள் நூல்களை .pdf மற்றும் .epub வடிவ கோப்புகளாக மாற்றி, தங்கள் சொந்த இன்பாக்ஸ் வரை 1000 மின்னூல்களைப் பதிவேற்றலாம்.

தமிழ் கூகுள் பிளே புத்தகங்கள் தமிழ் சேவை புத்தகம் படிக்கும் முறையை எளிதாக்குகிறது. கூகுள் பிளே பயனாளர்களுக்கு புத்தகங்களை எளிதாகத் தேடும் சேவையை அளிக்கிறது. இங்கு தமிழில் மின்னூல்கள் விற்பனைக்குக் கிடைக்கின்றன. குறிப்பிட்ட காலங்களில் தேர்ந்தெடுத்த தலைப்புகளுக்கு தள்ளுபடிச் சலுகையும் அளிக்கிறார்கள். இவை மட்டுமின்றி மின்னூல்கள் இலவசமாகவும் கிடைக்கின்றன. இங்கு சென்று கூகுள் பிளேயில் தங்கள் கணக்கைத் தொடங்கலாம். டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகள் அல்லது நெட் பேங்கிங் வழியாக பணம் செலுத்தும் வசதி உள்ளது. விற்பனைக்குள்ள மின்னூல்கள் மற்றும் இலவச மின்னூல்கள் ஆகிய இரண்டு வகை மின்னூல்களையும் இங்கிருந்து தரவிறக்கிக் கொள்ளலாம்.

தமிழ் மின்னூல்களின் சிறு தரவுத் தளங்கள்

தமிழ் மின்னூல்கள் பல இணையத்தின் பல சிறு தரவுத் தளங்களில் ஒரு சில தன்னார்வலர்களால் திரட்டப்பட்டுள்ளன. அதனை இலவசமாக பதிவிறக்கி, பயனர்கள் படித்து மகிழலாம். இங்கு சில தரவுத்தளங்களையும் இவை பற்றிய செய்திகளையும் தொகுத்து அளிக்கப்பட்டுள்ளன.

ப்ராஜெக்ட் மதுரை (http://projectmadurai.org/pmworks.html) மதுரை திட்டம், தமிழ் இலக்கியங்களின் மின்பதிப்புக்களை உருவாக்குவதற்காக 1998 ஆம் ஆண்டு, திருவள்ளுவர் திருநாள் தை முதல் தேதி அன்று சில மின்நூல்களைக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. முனைவர் கே.கல்யாணசுந்திரம், முனைவர் பி.குமார் மல்லிகார்ஜுணன் ஆகிய இரு தன்னார்வர்களின் சீரிய முயற்சியால் உருவான தன்னார்வ (voluntary) முயற்சியாகும். மதுரை திட்டத்தில் உலகளாவிய தமிழர்கள் ஒருங்கிணைந்து இணையம்வழி உருவாக்கிய தமிழ் இலக்கியங்களின் மின்பதிப்புகளை இணையம்வழியாகவே தமிழர்களும் தமிழார்வலர்களும் இலவசமாகப் பெற வசதிசெய்யும் திட்டமாகும். எந்தவித வியாபார நோக்கமுமின்றி நடைபெறும் இந்தத் திட்டத்திற்காக அரசாங்கத்திடமோ அல்லது தனியார் நிறுவனங்கத்திடமோ எந்தவித உதவியும் பெறவில்லை.

தமிழ் மரபு அறக்கட்டளை (http://www.tamilheritage.org/old/text/ebook/ebook.html) என்பது உலகு தழுவிய ஒர் இயக்கமாகும். ஜெர்மனியில் வசித்து வரும் தமிழரும், இலண்டன் பல்கலைக்கழகத்தில் டாக்டர் பட்டம் பெற்றவருமான டாக்டர் சுபாஷினி தமிழ் மரபு அறக்கட்டளையின் வாயிலாக உலகம் முழுவதும் உள்ள மரபு சார்ந்த தமிழ் ஆர்வலர்களையும், தமிழ் வரலாற்று ஆர்வலர்களையும் இணைத்துள்ளார். 2001 ஆம் ஆண்டு ஆகஸ்டு 27 ஆம் நாள் முதல் தமிழ்மரபு அறக்கட்டளை பல முக்கியமான தமிழ் நூல்களை மின்னூல்களாக மாற்றி வெளியிட்டுள்ளார்கள். தமிழின் புராதனமான ஓலைச்சுவடிகளையும் மின் பதிப்புகளாக்கியுள்ளார்கள். 2001 ஆம் ஆண்டு டிசம்பரில் “கொங்கன் படை” என்ற நூலை மின்பதிவு செய்து இதன் பயணம் தொடங்கியது. இதுவரை அபிதான கோசம், கண்ணுக்குள் வெளி, எக்காளக் கண்ணி, கோதை நாச்சியார் தாலாட்டு என 90 க்கும் மேற்பட்ட தமிழ் நூல்களை, மின்னூல்கள் ஆக்கி வலையேற்றியுள்ளது. இந்த மின்னூல்களை இலவசமாக தரவிறக்கலாம்.

தமிழ் இணையக் கல்விக் கழகம் (Tamil Virtual Univeristy) http://www.tamilvu.org/library/libindex.htm தமிழ் இணையக் கல்விக் கழகத்தின் மின் நூலகம், தமிழ் இணையக் கல்விக்கழகப் பாடத்திட்டத்தில் சேர்ந்து, பயில்வோர் மற்றும் உலகு தழுவி வாழும் தமிழர்கள் அனைவரது பயன்பாட்டிற்காகவும் உருவமைக்கப்பட்டுள்ளது. இம்மின் நூலகத்தில் நூல்கள், அகராதிகள், நிகண்டுகள்சுவடிக் காட்சியகம், ஆகிய பிரிவுகள் உள்ளன.

தமிழம் வலை (http://thamizham.net/) இத்தளத்தில் பொதுவுடமையாக்கப்பட்ட புத்தகங்கள் இலவச தரவிறக்கம் செய்து கொள்ளும் வகையில் கிடைக்கின்றன. நாளொரு நூல் எனும் திட்டம் ஒன்றை இத்தளம் நட்த்துகிறது. இங்கு 15000 க்கும் மேற்பட்ட புத்தகங்கள் உள்ளன.

நூலகம் (www.noolaham.org / http://www.noolaham.net) “நூல்கள், இதழ்கள், பத்திரிகைகள், பிரசுரங்கள், ஆய்வேடுகள் எனத் தமிழில் வெளிவந்த அனைத்தையும் அப்படியே பாதுகாக்கிற உயரிய முறையின் வழி – படவடிவக் கோப்புகளாக்கிப் பாதுகாக்கிறது. இதுவரை 4,000 க்கும் மேற்பட்ட பதிவுகளைச் செய்துள்ளது. நூலகத்தில் உள்ள அயலக மின்னூல்கள் என்ற தொடுப்பானது உலகம் முழுவதும் நூல்களைப் பாதுகாக்கிற இணைய தளங்கள் பற்றிய செய்தியைச் சொல்லுகிறது. நூலகத்தில் உள்ள இதழ்களையும் நூல்களையும் யார் வேண்டுமானாலும் இலவசமாக வலையிறக்கிக் கொள்ளும் வகையில் வைத்திருப்பது வணங்குதற்குரிய செயல். ஈழமண்ணிலிருந்து வெளிவந்த அனைத்தையும் திரட்டிப் பாதுகாக்க வேண்டும் என்ற முனைப்புடன் செயல்படும் இந்த இணையதளம் வாழ்த்துதற்குரியதே.”

சென்னை நூலகம் (http://www.chennailibrary.com/) உலகெங்குமுள்ள தமிழ் நெஞ்சங்கள் தமிழ் நூல்களை வாசிப்பதற்கு உதவும் நோக்கில் சென்னைநூலகம்.காம் இணையதளம் செயல்பட்டு வருகிறது. இங்கு பல அருமையான புத்தகங்கள் இலவச மின்னூல்களாக உள்ளன. இத்தளம் கட்டண சேவையும் வழங்குகிறது

ஓப்பன் ரீடிங் ரூம் (Open Reading Room) https://archive.org/details/ openreadingroom  ஓபன் ரீடிங் புக் என்னும் இணையதளம் தமிழில் புத்தகங்களை மின்னூல் வடிவில் இலவசமாக படிக்க உதவுகிறது.

ஃப்ரி தமிழ் இபுக்ஸ் (Free Tamil ebooks) http://freetamilebooks.com/ நூலகம் இங்குள்ள புத்தகங்களின் எண்ணிக்கை உங்களை அதிசயிக்கச் செய்யலாம். நிறைய நூல்கள் இங்கு உள்ளன. தமிழ் மின்னூல்களை இலவசமாக பதிவிறக்கி வாசிக்கலாம்! நீங்களும் இந்தத் தளத்தில் மின்னூல்களை வெளியிடலாம்.

தமிழ் நூலகம் http://noolagam.org/

தமிழக அரசின் பாடநூல்கள் தளம் (http://www.textbooksonline.tn.nic.in/) இந்த தளத்தில் முதல் வகுப்பு முதல் பனிரெண்டாம் வகுப்பு வரையிலான தமிழ் நாடு அரசு பாட்த்திட்ட மின்னூல்களைத் தரவிரக்கிக் கொள்ள முடியும். மாணவர்களுக்கும், ஆராய்ச்சியாளர்களுக்கும், போட்டித் தேர்வுக்கு தயார் செய்துகொள்பவர்களுக்கும் பயனுள்ள தளம்.

ஆங்கிலத்தில் வெளியிடப்பட்ட மின்னூல்களை வெளியிடும் சில தளங்கள் கீழே தரப்பட்டுள்ளன:

ப்ராஜெக்ட் கூடன்பெர்க் (Project Gutenberg) http://www.gutenberg.org/

மெனி புக்ஸ் (Many Books) http://www.manybooks.net

பிளானெட் இபுக் (Planet ebook) http://www.planetebook.com/

குறிப்புநூற்பட்டி

 1. அமேசான் இந்திய மின்னூல்கள் எண்ணிக்கையில் தமிழ் முதலிடம்! http://sellinam.com/archives/1391
 2. கிண்டிலில் இந்திய மொழி மின்னூல்கள்http://freetamilebooks.com/indic-ebooks-in-amazon-kindle/
 3. கிண்டிலில் தமிழ் மின்னூல்கள் படிப்பது எப்படி?http://freetamilebooks.com/how-to-read-tamil-in-kindle-and-other-ebook-readers/
 4. பிரபல அமேசான்.காம் தளத்தில் புத்தகமொன்றை வாங்குவது எப்படி? http://kalapam.ca/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%B2-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4/
 5. வீட்டில் இருந்தே சம்பாதிக்கலாம்: நீங்களும் பதிப்பாளராகலாம்! தி இந்து டிசம்பர் 17, 2016
 6. Amazon Kindle https://play.google.com/store/apps/details?id=com.amazon.kindle
 7. Comparison of e-book formats https://en.wikipedia.org/wiki/Comparison_of_e-book_formats#eReader
 8. E-reader https://en.wikipedia.org/wiki/E-reader
 9. Get the all-new Kindle app https://www.amazon.com/kindle-dbs/fd/kcp
 10. How to Make an Amazon account https://www.wikihow.com/Make-an-Amazon-Account
 11. Kindle app https://play.google.com/store/apps/details?id=com.amazon.kindle
 12. Register or De-register Kindle e-readers  https://www.amazon.com/gp/help/customer/display.html?nodeId=201733370

About முத்துசாமி இரா

புதுக்கோட்டை மாவட்டம் இராமச்சந்திரபுரத்தைப் பிறப்பிடமாகவும், சென்னை சைதாப்பேட்டையை வசிப்பிடமாகவும் கொண்ட இரா.முத்துசாமி, காரைக்குடி அழகப்பா கல்லூரியிலும், சென்னைப் பல்கலைக்கழகத்திலும் பயின்றவர். இவர் 1975ஆம் ஆண்டு தொடங்கி சி.வி.ஆர்.டி.இ (டி.ஆர்.டி.ஓ) ஆவடி, சென்னையில் பணியாற்றி ஒய்வு பெற்றவர். தமிழ் இலக்கியத்திலும், தமிழக வரலாற்றிலும் ஈடுபாடு கொண்டவர்.
This entry was posted in இணைய நூலகம் and tagged , , , , , . Bookmark the permalink.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.