Monthly Archives: ஜனவரி 2018

பைரவகோண குடைவரைக் கோவில்கள், ஆந்திரப் பிரதேசம்

பைரவகோண எட்டுக் குடைவரைக் கோவில்களின் .தொகுப்பாகும். இக்குடைவரைக் கோவில்கள் ஆந்திர மாநிலம், பிரகாசம் மாவட்டம், சந்திரசேகரபுரம் மண்டல், சந்திரசேகரபுரம் (Chandra Sekhara Puram) பின் கோடு 523112 நகருக்கு அருகில் அடர்ந்த நல்லமலா காட்டில் (Nallamala forest) பைரவகோண அமைந்துள்ளது. இங்கு எட்டு குடைவரைக் கோவில்கள் மாமல்லபுரம் சாயலில் அமைந்துள்ளன. இந்த எட்டுக் குடைவரைகளும் கருங்கல் குன்றின் ஒரு சரிவில் அகழப்பட்டுள்ளன. இக்குடைவரைகளில் நேர்தியாகச் செதுக்கப்பட்ட தூண்கள், கருவறை, சிற்பத்தொகுப்புகள் போன்ற கட்டிடக்கலை உறுப்புகளைக் காணலாம். பைரவகோண குடைவரைகள் மாமல்லபுரத்தின் சாயலையும் ராஷ்டிரகூடர் மற்றும் சாளுக்கியர்களின் சில சாயல்களையும் காணமுடியும். Continue reading

Advertisements
Posted in குடைவரைக் கோவில், தொல்லியல், வரலாறு | Tagged , , , , , | 2 பின்னூட்டங்கள்

தமிழ் வலைப்பதிவகம்: தமிழ் வலைத்தளப் பதிவாளர்களுக்குப் பயனுள்ள வாட்ஸ் அப் திரட்டி

தமிழ் மொழியில் வலைத்தளத்தில் பதிவிடுவோர் தொகை கணிசமாகப் அருகி வருகிறது. முகநூல் மற்றும் டுவிட்டரில் நிறைய குழுக்கள் வந்துவிட்டன. கூகுளில் பல மன்றங்கள் (Forum) வந்து செயல்படுகின்றன. தமிழில் பல வலைத்தள பதிவுத் திரட்டிகள் தோன்றினாலும் பலவற்றின் செயல்பாடுகள் மட்டாகவே உள்ளன.

இந்த நிலையில் புதுக்கோட்டை வலைத்தளப் பதிவர்கள் எடுத்துவரும் முயற்சிகள் பாராட்டுக்கு உரியது. இவர்கள் சென்ற ஆண்டு நடத்திய பயிற்சிப் பட்டறை வலைத்தளப் பதிவாளர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. அண்மையில் புதுக்கோட்டையைச் சேர்ந்த மூத்த வலைத்தளப் பதிவர்களான திரு. முத்து நிலவன் அவர்களும், திரு.மீரா செல்வகுமார் அவர்களும், திரு திண்டுக்கல் தனபாலன் அவர்களும் இணைந்து “தமிழ் வலைப்பதிவகம்” என்னும் பெயரில் தமிழ் வலைத்தளப் பதிவர்களுக்கான வாட்ஸ் அப் திரட்டி ஒன்றை 2016 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 26 ஆம் நாளன்று உருவாக்கி வெற்றிகரமாக நடத்தி வருகிறார்கள். இந்த “தமிழ் வலைப்பதிவகம்” ஓராண்டை நிறைவு செய்துள்ளது அறிந்து மகிழ்ச்சி. தமிழ் வலைத்தளப் பதிவர்கள் செய்தியறிந்து சிறிது சிறிதாக தங்களை இணைத்துக்கொண்டு வருகிறார்கள். Continue reading

Posted in இணையம், கைபேசி | Tagged , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

சோமேஸ்வரர் கோவில், கோலார், கர்நாடக மாநிலம்

விஜயநகரப் பேரரசால் பதினான்காம் நூற்றாண்டில் திராவிடக் கட்டிடக்கலை பாணியில் கட்டப்பட்ட சோமேஸ்வரர் கோவில் கோலார் நகரில், ஃபோர்ட் (Fort) பகுதியில் அமைந்துள்ளது. கர்நாடக மாநிலம், கோலார் மாவட்டம், கோலார் வட்டம், கோலார் பின் கோடு 563101 நகரம் அமைந்துள்ளது. இதன் அமைவிடம் 13°38′N அட்சரேகை 95°35′E தீர்க்கரேகை ஆகும். கடல் மட்டத்திலிருந்து இதன் உயரம் 3200 அடி ஆகும். இவ்வூர் பெங்களூருவிலிருந்து 68 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. வரலாற்றுச் சிறப்புமிக்க இந்தக் கோவிலைப் பற்றி இந்தப் பதிவு விவரிக்கிறது. Continue reading

Posted in கோவில், சுற்றுலா | Tagged , , , , , | 1 பின்னூட்டம்