Daily Archives: ஜனவரி 6, 2018

ப்ராஜெக்ட் மதுரை: மதுரை தமிழ் இலக்கிய மின்பதிப்புத் திட்டம் பொங்கலன்று தன் 20 ஆம் ஆண்டை நிறைவு செய்கிறது.

வரும் தமிழர் திருநாளான பொங்கல் (2018 ஆம் ஆண்டு ஜனவரி 14 ஆம் நாள்) திருநாளன்று  மதுரை (Project Madurai) அல்லது மதுரை திட்டம் அல்லது மதுரை தமிழ் இலக்கிய மின்பதிப்புத் திட்டம் – 20 ஆம் ஆண்டு விழாவைக் (585 மின்பதிப்புகள்) கொண்டாடுகிறது.\ 1998 ஆம் ஆண்டு ஜனவரி 14 ஆம் நாள் தமிழர் திருநாளான பொங்கல் அன்று ஆரம்பிக்கப்பட்ட ப்ராஜெக்ட் மதுரைத் திட்டம் இன்றும் தொடர்ந்து இயங்கி வருகிறது.

ப்ராஜெக்ட் மதுரை (Project Madurai) என்பது பண்டைய மற்றும் சமகாலத் தமிழ் இலக்கியங்களை ஆவணப்படுத்தி இலவசமாக வெளியிடும் ஒரு திறந்த, தன்னார்வ, உலகளாவிய முயற்சியாகும். உலகெங்கிலுமிருந்து பல அரிய தமிழ் இலக்கிய நூல்களைச் சேகரித்துப் பாதுகாப்பது ப்ராஜெக்ட் மதுரை திட்டத்தின் முக்கிய குறிக்கோளாகும். தமிழ் இலக்கியத்திற்கான மின்னூலகம் ஒன்றை உருவாக்கி வரும் தலைமுறையினரின் பயன்பாட்டுக்கு அளிப்பது இந்தத் திட்டத்தின் செயல்முறையாகும். Continue reading

Posted in இணைய நூலகம், இலக்கியம், தமிழ் | Tagged , , , , | 7 பின்னூட்டங்கள்