வரும் தமிழர் திருநாளான பொங்கல் (2018 ஆம் ஆண்டு ஜனவரி 14 ஆம் நாள்) திருநாளன்று மதுரை (Project Madurai) அல்லது மதுரை திட்டம் அல்லது மதுரை தமிழ் இலக்கிய மின்பதிப்புத் திட்டம் – 20 ஆம் ஆண்டு விழாவைக் (585 மின்பதிப்புகள்) கொண்டாடுகிறது.\ 1998 ஆம் ஆண்டு ஜனவரி 14 ஆம் நாள் தமிழர் திருநாளான பொங்கல் அன்று ஆரம்பிக்கப்பட்ட ப்ராஜெக்ட் மதுரைத் திட்டம் இன்றும் தொடர்ந்து இயங்கி வருகிறது.
ப்ராஜெக்ட் மதுரை (Project Madurai) என்பது பண்டைய மற்றும் சமகாலத் தமிழ் இலக்கியங்களை ஆவணப்படுத்தி இலவசமாக வெளியிடும் ஒரு திறந்த, தன்னார்வ, உலகளாவிய முயற்சியாகும். உலகெங்கிலுமிருந்து பல அரிய தமிழ் இலக்கிய நூல்களைச் சேகரித்துப் பாதுகாப்பது ப்ராஜெக்ட் மதுரை திட்டத்தின் முக்கிய குறிக்கோளாகும். தமிழ் இலக்கியத்திற்கான மின்னூலகம் ஒன்றை உருவாக்கி வரும் தலைமுறையினரின் பயன்பாட்டுக்கு அளிப்பது இந்தத் திட்டத்தின் செயல்முறையாகும்.
ப்ராஜெக்ட் மதுரை
இந்தத் திட்டத்திற்கான முழுக் கருத்தும் பல்வேறு தமிழ் ஆர்வலர்களின் கூட்டுச் சிந்தனையாகும். இணையம் தொடங்கிய காலங்களில், அதாவது 1966 ஆம் ஆண்டு தொடங்கி, உலகம் முழுவதிலும் பல மின்னூல் ஆக்கப்பணிகள் நிகழ்ந்தன. soc.culture.tamil (usenet), தமிழ்.நெட் (tamil.net) மின்னஞ்சல் விவாதப் பட்டியல் (email discussion list) போன்ற தளங்களில் இடுகைகள் இடுவதன் மூலம் பலர் பண்டைய தமிழ் செம்மொழி இலக்கியங்களை மின்னூலாக்கும் சில திட்டங்களைத் தொடங்க ஆர்வம் காட்டினார்கள். இவர்கள் tamil.net மூலம் விடுத்த அழைப்பினை ஏற்று 1998 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 14 ஆம் தேதி, பொங்கல் நன்னாளில், மதுரை திட்டம் அதிகாரபூர்வமாகத் துவங்கியது.
ப்ராஜெக்ட் மதுரை திட்டத்திற்காக எந்தவித அரசாங்க உதவியோ அல்லது தனியார் நிறுவன உதவியோ பெறாமலும், எந்தவித வியாபார நோக்கமில்லாமலும் நடைபெறும் ஒரு தன்னார்வ (voluntary) முயற்சியாகும். இத்திட்டத்தில் “உலகில் வெவ்வேறு நாடுகளில் வசிக்கும் முன்னூற்றுக்கும் மேற்பட்ட தமிழர்களும், தமிழார்வலர்களும்” பங்கேற்று நடத்தி வருகிறார்கள். தொடர்புகொள்ள முகவரி. 2018 ஆம் ஆண்டு ஜனவரி 06 தேதியன்று சுமார் 585 மின்னூல்கள் ப்ராஜெக்ட் மதுரைத் திட்டத்தின் மூலம் வெளியிடப்பட்டுள்ளன. (பட்டியல் காண்க)

Madurai Meenakshi Temple PC: Wikimedia Commons
மதுரை: பெயர்க்காரணம்
மதுரை தென்னிந்தியாவில் உள்ள மிகப் பழைமையான நகரம் ஆகும். இந்த நகரம் 2000 ஆண்டு கால வரலாறு கொண்டது. பாண்டியர்களின் தலைநகராக விளங்கியது. சங்ககாலப் பாண்டியர்கள் தமிழ் சங்கத்தை உருவாக்கி வளர்த்து வந்தார்கள். சங்க காலம் தமிழகத்தின் பொற்காலம் என்று அரியப்படுகிறது. இறையனார், நக்கீரர், கபிலர், பரணர் போன்ற சங்ககாலப் புலவர்கள் சங்க இலக்கியங்களைப் படைத்து தமிழுக்கு மிகப்பெரும் தொண்டாற்றினர். எட்டுத்தொகை, பத்துப்பாட்டு போன்ற சங்க இலக்கியங்கள் இக்காலத்தில் தொகுக்கப்பட்டன. எனவே இந்த திட்டத்திற்கு மதுரை நகரின் பெயரை வைப்பதே சாலப்பொருத்தம் என்று கருதி மதுரைத் திட்டம் அல்லது ப்ராஜெக்ட் மதுரை என்று பெயரிட்டுள்ளார்.

டாக்டர். கே. கல்யாணசுந்தரம் PC: http://www.Facebook /மதுரை தமிழ் இலக்கிய மின்பதிப்புத் திட்டம் (Project Madurai)
நிறுவனர்கள்
சுவிட்சர்லாந்தில் உள்ள சுவிஸ் ஃபெடரல் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி (Swiss Federal Institute of Technology, Switzerland) நிறுவனத்தில் வேதியியல் ஆய்வு இணைப்பாளராகப் (Research Associate in Chemistry) பணியாற்றும் டாக்டர் கே. கல்யாணசுந்தரம் அவர்கள் இந்த ப்ராஜெக்ட் மதுரை திட்டத்தின் தலைவராவார். அமெரிக்காவில் பணிபுரியும் முனைவர் குமார் மல்லிகார்ஜுனன் இத்திட்டத்தின் துணைத்தலைவராவார். இந்தத் திட்டத்தில் பல தன்னார்வலர்கள் ஒருங்கிணைப்பாளர்களாகப் பணிபுரிகின்றனர். டாக்டர் கே. கல்யாணசுந்தரம் உலகத் தமிழ்த் தகவல் தொழில்நுட்ப மன்றம் (உத்தமம்) International Forum for Information Technology in Tamil (INFITT) என்னும் தமிழ்த் தகவல் தொழில்நுட்பம் தொடர்பான விசயங்களை ஆராயும், நியமங்களைப் பரிந்துரைக்கும், ஒரு தொண்டூழியர் அமைப்பை நிறுவிய நிறுவனர் உறுப்பினராவார் (founding member). இவர் 1989 ஆம் ஆண்டில் மயிலை (Mylai) என்னும் தமிழ் எழுத்துருவை உருவாக்கியவர் ஆவார். 8 பிட் டிஸ்கி (Tamil Script Code for Information Interchange – TSCII) தமிழ் குறியாக்கத்தை (8-bit Tamil encoding TSCII) உருவாக்குவதற்குப் பெரும் பங்காற்றினார். இவருக்கு டொராண்டோ பல்கலைக்கழகம், தமிழ் இலக்கியப் பூங்கா (Tamil Literary Garden, University of Toronto), தமிழ் கம்பியூட்டிங் / தமிழ் ஐடி ஆகியவற்றில் பங்களித்ததற்காகச் சுந்தர ராமசாமி விருது பெற்றவர்.
குறிப்புநூற்பட்டி
- Dr.Kalyanasundaram awarded Sura Award in Toronto Dr.Kalyanasundaram awarded Sura Award in Toronto
- Kuppuswamy Kalyanasundaram https://en.wikipedia.org/wiki/Kuppuswamy_Kalyanasundaram
- Mylai Tamil Font for preparation of Texts in Tamil Script on Computers http://www.tamilelibrary.org/teli/mylai1.html
Tamil Electronic Library http://tamilelibrary.org/
போற்றுதலுக்கு உரிய முயற்சி ஐயா
LikeLike
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
LikeLike
அரிய தகவல் களஞ்சியத்தை அறியத் தந்தமைக்கு நன்றி நண்பரே
LikeLike
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
LikeLike
நல்ல விஷயம். Project Madurai தளத்தில் பல முறை திறந்து அங்கே உள்ள நூல்களை படித்திருக்கிறேன் – ஆரம்பகாலத்தில்….
அவர்கள் 20-ஆம் ஆண்டில் இருக்கிறார்கள் என்பதில் மிக்க மகிழ்ச்சி. அத்திட்டத்தினைத் தொடரும் அனைவருக்கும் மனம் நிறைந்த நன்றியும் வாழ்த்துகளும்.
LikeLike
நல்ல கட்டுரை! மதுரைத் திட்டத்தின் சிறப்பை நன்கறிவேன். அதன் வெளியீடுகள் இன்றும் என் திரட்டில் உள்ளன. அந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க முயற்சி தன் 20-ஆவது ஆண்டு விழாவை எட்டுகிறது என்பது மிகவும் மகிழ்ச்சியும் பெருமையும் அளிக்கும் செய்தி. இதை அறியத் தந்தமைக்கு மிக்க நன்றி ஐயா!
LikeLike
தங்கள் வருகைக்கு மிக்க நன்றி. தங்கள் கருத்து நிறைவாயுள்ளது. நன்றி
LikeLike