தமிழ் மொழியில் வலைத்தளத்தில் பதிவிடுவோர் தொகை கணிசமாகப் அருகி வருகிறது. முகநூல் மற்றும் டுவிட்டரில் நிறைய குழுக்கள் வந்துவிட்டன. கூகுளில் பல மன்றங்கள் (Forum) வந்து செயல்படுகின்றன. தமிழில் பல வலைத்தள பதிவுத் திரட்டிகள் தோன்றினாலும் பலவற்றின் செயல்பாடுகள் மட்டாகவே உள்ளன.
இந்த நிலையில் புதுக்கோட்டை வலைத்தளப் பதிவர்கள் எடுத்துவரும் முயற்சிகள் பாராட்டுக்கு உரியது. இவர்கள் சென்ற ஆண்டு நடத்திய பயிற்சிப் பட்டறை வலைத்தளப் பதிவாளர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. அண்மையில் புதுக்கோட்டையைச் சேர்ந்த மூத்த வலைத்தளப் பதிவர்களான திரு. முத்து நிலவன் அவர்களும், திரு.மீரா செல்வகுமார் அவர்களும், திரு திண்டுக்கல் தனபாலன் அவர்களும் இணைந்து “தமிழ் வலைப்பதிவகம்” என்னும் பெயரில் தமிழ் வலைத்தளப் பதிவர்களுக்கான வாட்ஸ் அப் திரட்டி ஒன்றை 2016 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 26 ஆம் நாளன்று உருவாக்கி வெற்றிகரமாக நடத்தி வருகிறார்கள். இந்த “தமிழ் வலைப்பதிவகம்” ஓராண்டை நிறைவு செய்துள்ளது அறிந்து மகிழ்ச்சி. தமிழ் வலைத்தளப் பதிவர்கள் செய்தியறிந்து சிறிது சிறிதாக தங்களை இணைத்துக்கொண்டு வருகிறார்கள்.
தமிழ் வலைப்பதிவகத்தின் நிர்வாகிகள் இந்த வாட்ஸ் அப் திரட்டிக்கென்று ஒரு சில கட்டுப்பாடுகளை விதித்திருப்பது பாராட்டுக்கு உரியது. இந்தக் கட்டப்பாட்டுகள் இந்தத் திரட்டியின் வெற்றிக்குக் காரணாமாக அமைந்துள்ளது என்பது என் கருத்து.
இந்தக் கட்டுப்பாடுகள் திரு. திண்டுக்கல் தனபாலன் அவர்களின் வலைத்தளத்தில் (http://dindiguldhanabalan.blogspot.in/2016/12/Bloggers-WhatsApp-Thiratti.html?m=1) உள்ளபடி இங்கு தரப்படுகிறது:
01. காலை, மாலை, இரவு வணக்கங்கள், படங்கள், காணொளி/லி, தகவல்கள், விசாரிப்புகள், மற்றும் பல உரையாடல்கள் தவிர்க்க வேண்டும்.
காணொளி/லி (Video / Audio) விளக்கம்: பிடித்த பாடல்களின் அல்லது செய்தி ஊடகங்களின் video / audio என்றால் கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும்.
02. இது ஒரு வலைப்பதிவருக்கான திரட்டி.. ! எப்படி என்றால்?
03. தங்கள் வலைப்பதிவின் இணைப்பு மட்டுமே கொடுக்க வேண்டும்…
04. புதிதாக இணைபவர்களும், தினமும் (அல்லது அவ்வப்போது) பதிவு எழுதுபவர்களும் பதிவின் இணைப்பை (URL) ஒரு சிறு விளக்கத்துடன் கொடுப்பதோடு, அதன் கீழ் உங்கள் பெயர் மற்றும் ஊர் விவரங்களைக் கொடுத்தால், அவரவர் அலைபேசியில் தங்கள் கைபேசி எண்ணைப் பதிவு செய்துகொள்ள வசதியாக இருக்கும்.
எடுத்துக்காட்டு: என் வலைதளப்பதிவு இது: “சோமேஸ்வரர் கோவில், கோலார், கர்நாடக மாநிலம்”
இதற்கான சுட்டி (URL) இதுவாகும்:
இது போல நீங்கள் அண்மையில் வெளியிட்ட உங்கள் பதிவின் சுட்டியை (URL) மட்டும் “தமிழ் வலைப்பதிவகம்” வாட்ஸ் அப் திரட்டியில் ஒட்டிவிடுங்கள்.
05. இவ்வாறு இணைந்த வலைப்பதிவர்கள் தங்கள் நண்பர்களின் கைபேசி எண்களைத் தெரிவித்தாலும் இணைத்து விடலாம் என்று சொல்கிறார்கள். உங்கள் தளம் அல்லாத உங்களுக்கு விருப்பமான நண்பரின் சமீபத்திய பதிவின் இணைப்பையும் இணைக்கலாம்.
06. தயவு செய்து உங்கள் பாராட்டையும், வாழ்த்தையும், நன்றியையும் smiley icon உட்பட அனைத்தையும் இந்தக் குழுமத்தில் உள்ள உறுப்பினர்களுக்குத் தெரிவிக்க வேண்டாமே…
07. இதற்குப் பதிலாக நாம் செய்ய வேண்டியது புதியவர்களின் தளத்திற்குச் சென்று உங்களை Followers ஆக இணைத்துக் கொண்டு அவர்களின் பதிவிற்கான பாராட்டையும், வாழ்த்தையும், நன்றியையும் தெரிவிப்பது புதிய வலைப்பதிவர்களுக்கு ஊக்கம் தரும் அல்லவா!
08. வலைத்தளம் பற்றிய சந்தேகங்கள் மற்றும் பிரச்சனைகள் எதுவென்றாலும் இங்கு தெரிவிக்கலாம். இந்த உரையாடலுக்கு வரைமுறையில்லை
09. பெரிய மாற்றம் வேண்டுமெனில் நிர்வாகியை அவர் கைபேசி எண்ணில் 9944345233 தொடர்பு கொள்ளலாம் அல்லது dindiguldhanabalan@yahoo.com என்ற மின்னஞ்சல் முகவரியிலும் தொடர்பு கொள்ளலாம்.
____________________________________________________________________________________________
நீங்கள் “தமிழ் வலைப்பதிவகம்” வாட்ஸ் அப் திரட்டியில் இணைத்துக் கொள்ள விரும்பினால் இங்கு செல்க:
____________________________________________________________________________________________
வாட்ஸ் அப் பற்றி ஒரு சிறு கண்ணோட்டம்
வாட்ஸ் அப் ஸ்மார்ட் போனில் பயன்படுத்துவதற்காக வடிவமைக்கப்பட்ட ஒரு செய்தி பரிமாற்ற செயலி (Messaging Application) என்பது பலருக்கும் தெரிந்த செய்தியாகும். அனைத்து வகையான ஸ்மார்ட் போன்களிலும், ஆப்பிள், பிளாக்பெர்ரி, ஆண்ட்ராய்ட், விண்டோஸ், சிம்பியன் இயங்கு தளங்களில் செயல்படும் அனைத்து ஸ்மார்ட் போன்களிலும் இந்த வாட்ஸ் அப்பைப் பயன்படுத்தும் வசதி உண்டு என்பதும் நாடறிந்த செய்திதான். பிரைன் அக்டன் மற்றும் ஜேன் கோம் என்ற இருவர் இணை உருவாக்கிய, வாட்ஸ் அப், தற்போது முகநூல் (Facebook) நிறுவனத்தால் நிர்வாகிக்கப்பட்டு வருகிறது.
எஸ்.எம்.எஸ் என்னும் குறுஞ்செய்தி பரிமாற்ற சேவையை, இந்த வாட்ஸ் அப் முந்திவிட்டது. காரணம் வாட்ஸ் அப் செயலியைப் பயன்படுத்தி ஸ்மார்ட் போன் மூலம் குறுஞ்செய்திகள் (எஸ்.எம்.எஸ்), காணொளி, (வீடியோ), குரல்வழிச் செய்தி (Audio Message), இணைய சுட்டிகள் (லிங்ஸ்) போன்றவற்றை அனுப்பலாம். இதன் காரணமாகவே வாட்ஸ் அப் செயலியில் தினமும் ஒரு பில்லியனுக்கும் அதிகமானோர் செய்திகளை அனுப்பியும், பெற்றும் வருகின்றனர். தினமும் 55 பில்லியன் செய்திகள், 4.5 பில்லியன் புகைப்படங்கள், ஒரு பில்லியன் காணொளிகள் (videos) போன்றவை பரிமாறப்படுகிறதாம். இதுவல்லாமல் தினமும் 100 மில்லியன் குரல் அழைப்புகளும் மேற்கொள்ளப்படுகிறதாம். 2009 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட இந்த வாட்ஸ் அப் சேவை இந்த வளர்ச்சியை வெறும் எட்டு ஆண்டுகளிலேயே எட்டியுள்ளது. இந்தியாவில் பத்துக்கும் மேற்பட்ட மொழிகளில், சுமார் 200 மில்லியன் பயனாளர்கள் இந்த வசதியைப் பெறுவதாக ஒரு புள்ளி விவரம் சொல்கிறது.