Monthly Archives: ஜனவரி 2018

கோலரம்மா கோவில், கோலார், கர்நாடக மாநிலம்

சோழர்களால் ஒர் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு திராவிடக் கட்டிடக்கலை பாணியில் கட்டப்பட்ட கோலரம்மா கோவில் கோலார் நகரில் அமைந்துள்ளது. கர்நாடக மாநிலம், கோலார் மாவட்டம், கோலார் வட்டம், கோலார் பின் கோடு 563101 நகரம் அமைந்துள்ளது. இதன் அமைவிடம் 13°38′N அட்சரேகை 95°35′E தீர்க்கரேகை ஆகும். கடல் மட்டத்திலிருந்து இதன் உயரம் 3200 அடி ஆகும். இவ்வூர் பெங்களூருவிலிருந்து 68 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. வரலாற்றுச் சிறப்புமிக்க இந்தக் கோவிலைப் பற்றி இந்தப் பதிவு விவரிக்கிறது. Continue reading

Posted in கோவில், சுற்றுலா | Tagged , , , , , | 4 பின்னூட்டங்கள்

ப்ராஜெக்ட் மதுரை: மதுரை தமிழ் இலக்கிய மின்பதிப்புத் திட்டம் பொங்கலன்று தன் 20 ஆம் ஆண்டை நிறைவு செய்கிறது.

வரும் தமிழர் திருநாளான பொங்கல் (2018 ஆம் ஆண்டு ஜனவரி 14 ஆம் நாள்) திருநாளன்று  மதுரை (Project Madurai) அல்லது மதுரை திட்டம் அல்லது மதுரை தமிழ் இலக்கிய மின்பதிப்புத் திட்டம் – 20 ஆம் ஆண்டு விழாவைக் (585 மின்பதிப்புகள்) கொண்டாடுகிறது.\ 1998 ஆம் ஆண்டு ஜனவரி 14 ஆம் நாள் தமிழர் திருநாளான பொங்கல் அன்று ஆரம்பிக்கப்பட்ட ப்ராஜெக்ட் மதுரைத் திட்டம் இன்றும் தொடர்ந்து இயங்கி வருகிறது.

ப்ராஜெக்ட் மதுரை (Project Madurai) என்பது பண்டைய மற்றும் சமகாலத் தமிழ் இலக்கியங்களை ஆவணப்படுத்தி இலவசமாக வெளியிடும் ஒரு திறந்த, தன்னார்வ, உலகளாவிய முயற்சியாகும். உலகெங்கிலுமிருந்து பல அரிய தமிழ் இலக்கிய நூல்களைச் சேகரித்துப் பாதுகாப்பது ப்ராஜெக்ட் மதுரை திட்டத்தின் முக்கிய குறிக்கோளாகும். தமிழ் இலக்கியத்திற்கான மின்னூலகம் ஒன்றை உருவாக்கி வரும் தலைமுறையினரின் பயன்பாட்டுக்கு அளிப்பது இந்தத் திட்டத்தின் செயல்முறையாகும். Continue reading

Posted in இணைய நூலகம், இலக்கியம், தமிழ் | Tagged , , , , | 7 பின்னூட்டங்கள்

மைலாப்பூர் திருவிழா 2018

மைலாப்பூர் திருவிழா (Mylapore Festival) என்பது ‘மைலாப்பூர் டைம்ஸ்’ (Mylapore Times) இலவச வார இதழ் பத்திரிகை வெளியீட்டாளர்களும், சுந்தரம் ஃபைனான்ஸ் நிறுவனமும் இணைந்து நடத்தும் வருடாந்திரத் திருவிழாவாகும். இந்தத் திருவிழா 2005 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு கடந்த 23 ஆண்டுகளாக வெற்றிகரமாக நடைபெற்று வருகிறது. 2018 ஆம் ஆண்டுக்கான மைலாப்பூர் திருவிழா ஜனவரி 4 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. வருகிற ஜனவரி 7 ஆம் தேதி வரை நான்கு நாட்கள் நடைபெறும்.

இந்தத் திருவிழா மைலாப்பூர் கபாலீசுவரர் கோவில், கோவில் தெப்பக் குளம், தேரடி, கோவிலைச் சுற்றியுள்ள நான்கு மாட வீதிப் பகுதிகளில் நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு கோலப் போட்டிகள், இசை நிகழ்ச்சிகள், நாட்டுப்புற நடனம் மற்றும் கிளாசிக்கல் நடன நிகழ்ச்சிகள், தாயக்கட்டம், பல்லாங்குழி போன்ற பாரம்பரிய விளையாட்டுப் போட்டிகள், குழந்தைகளுக்கான பயிற்சிப் பட்டறைகள், நாகேஸ்வர ராவ் பூங்காவில் சிறார்களின் இசை நிகழ்ச்சிகள் என்று  பல கலாச்சார நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. 200 கலைஞர்களுக்கு மேல் பங்குபெறும் முப்பதிற்கும் மேற்பட்ட கலை நிகழ்ச்சிகள் இந்த ஆண்டுத் திருவிழாவில் இடம்பெற்று வருகின்றன. சென்னை மக்களுக்குச் சொல்லத் தேவையில்லை. குடும்பத்துடன் சென்று வருகிறார்கள். இந்தப் பதிவு வெளியூரிலும் வெளி நாட்டிலும் வசிப்பவர்களுக்காக இங்குப் பதிவு செய்கிறேன். இது பற்றி உங்கள் கருத்துக்களைப் பின்னூட்டமாக நிச்சயம் இடுவீர்கள்.  
Continue reading

Posted in கோவில், விழாக்கள் | Tagged , , , , , , , | 4 பின்னூட்டங்கள்