மாமல்லபுரத்துப் புதிர்: கிருஷ்ணனின் வெண்ணெய்ப் பந்து என்னும் வான் இறைக் கல்

தமிழ்நாடு மாநிலம், காஞ்சிபுரம் மாவட்டம், மகாபலிபுரம் (மாமல்லபுரம்) பின் கோடு 600024 நகரத்தில் அர்ஜுனன் தபசு புடைப்புச் சிற்பத் தொகுதிக்கு அருகில் கிருஷ்ணனின் வெண்ணெய்ப் பந்து பாறை அமைந்துள்ளது. இதன் அமைவிடம் 12°38′N அட்சரேகை 80°10′E தீர்க்கரேகை ஆகும் ) கடல் மட்டத்திலிருந்து இந்நகரின் உயரம் 12 மீட்டர் (39 அடி ஆகும்.

கிருஷ்ணனின் வெண்ணெய்ப் பந்து அல்லது வான் இறைக் கல் (Stone of the Sky God) என்று உள்ளூர் பொதுமக்களால் அழைக்கப்படும்,  இந்தப் பெரிய, உருண்டை வடிவப் பாறாங்கல் 45 டிகிரி சாய்வான பாறைத்தளத்தில் புவி ஈர்ப்பு விசையை எதிர்த்து நிற்பதன் மர்மம் இன்றுவரை புரியவில்லை. மாமல்லபுரத்திற்கு அன்றாடம் வருகைபுரியும் சுற்றுலாப் பயணிகள் இந்தப் பாறைக் கல்லை வியப்புடன் பார்த்துச் செல்கின்றனர்.  இந்தப் பாறைக்கல் உருண்டை 5 மீட்டர் விட்டமும், 6 மீட்டர் உயரமும், 250 டன் எடையும் கொண்டது. இதன் எடையைக் கணக்கில் எடுத்துக்கொண்டால் 45 டிகிரி சாய்வான பாறைத்தளத்தில் இருந்து உருண்டோடி சமதளத்தில் நின்றிருக்கவேண்டும். எந்த விதப் பிடிப்பும் இல்லாமல் சாய்வான தளத்தில் நிற்பது வியப்பிறகுரியதாகும். 

பல்லவ மன்னன் முதலாம் நரசிம்ம வர்மன் (கி.பி. 630 – 668) என்னும் மாமல்லன் நினைவாகவே மாமல்லபுரம் என்ற துறைமுக நகரம் ஏற்படுத்தப்பட்டது. இம்மன்னன் தன் ஆட்சிக் காலத்திலேயே இந்த உருண்டை வடிவப் பாறைக் கல்லை நகர்த்தி அப்புறப்படுத்த முயன்றுள்ளார். இதுவே இப்பாறையை அப்புறப்படுத்த மேற்கொண்ட முதல் முயற்சியாகும். இதற்குப் பிறகு சுமார் 1250 ஆண்டுகள் கழித்து மெட்ராஸ் கவர்னராகப் பணிபுரிந்த சர்.ஆர்தர் லாலி (28 மார்ச்  1906 – 3 நவம்பர்  1911) என்ற ஆங்கிலேயர் இந்தப் பாறையை அப்புறப்படுத்த முயன்றார். இவர் ஏழு யானைகளைப் பணியில் அமர்த்தி இப்பாறையை அப்புறப்படுத்துவதற்கு மேற்கொண்ட முயற்சி பலனற்றுப் போனது.

இந்தப் பாறையை அதன் இடத்தில் நிலைத்து நிற்க வைத்துக் கடவுள் தன் சக்தியைப் புலப்படுத்தியுள்ளார் என்று பலர் நம்புகிறார்கள். கண்ணுக்குப் புலப்படாத அமானுஷ்ய சக்தியே இந்தப் பாறையை இந்தச் சாய்வு தளத்திலிருந்து மேலும் நகர முடியாதபடி நிலை நிறுத்தியுள்ளது என்பது வேறு சிலர் நம்பிக்கை. இது இயற்கையான உருவாக்கம் என்பது  புவியியல் விஞ்ஞானிகளின் கருத்தாகும். பாறாங்கல் சரிவதைத் தடுப்பது உராய்வு (Friction) ஆகும்.  நாம் சறுக்கும் தரையில் நிற்கும்போது எப்படி நிற்கிறோமோ அது போலவே இந்தப் பாறையும் நிற்கிறது. புவி ஈர்ப்பு மையம் (Center of gravity) ஒரு சிறிய தொடர்பு பகுதியில் (small contact area) சமநிலைப்படுத்த (balance) அனுமதிக்கிறது. இது போல பல எடுத்துக்காட்டுகளை ஹம்பி மற்றும் ஜபல்பூர் போன்ற இடங்களில் காணலாம்.

இப்பாறையின் ஆபத்து பற்றி சற்றும் கவலைப்படாத சுற்றுலாப் பயணிகள் பறையின் அடியிலேயே நின்று புகைப்படம் எடுத்துக் கொள்வதும், அமர்ந்து இளைப்பாறுவதும்  நாம் அன்றாடம் காணும் காட்சியாகும்.

சுற்றுலாப் பயணிகளை அழைத்து வந்து வழி நடத்தும் வழிகாட்டிகள் இதன் அடியிலேயே நின்று கொண்டு கிருஷ்ணன் கோகுலத்தில் வெண்ணெய் திருடியதையும் இந்தப் பாறையின் உருண்டை வடிவத்தையும் இணைத்து தினமும் கதை சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.

OLYMPUS DIGITAL CAMERA

Krishna’s Butter Ball. (Wikimedia Commons)

OLYMPUS DIGITAL CAMERA

Krishna’s Butter Ball (Wikipedia)

krishna_butter_ball_in_mahabalipuram

Krishna’s Butter Ball (Wikipedia)

About முத்துசாமி இரா

புதுக்கோட்டை மாவட்டம் இராமச்சந்திரபுரத்தைப் பிறப்பிடமாகவும், சென்னை சைதாப்பேட்டையை வசிப்பிடமாகவும் கொண்ட இரா.முத்துசாமி, காரைக்குடி அழகப்பா கல்லூரியிலும், சென்னைப் பல்கலைக்கழகத்திலும் பயின்றவர். இவர் 1975ஆம் ஆண்டு தொடங்கி சி.வி.ஆர்.டி.இ (டி.ஆர்.டி.ஓ) ஆவடி, சென்னையில் பணியாற்றி ஒய்வு பெற்றவர். தமிழ் இலக்கியத்திலும், தமிழக வரலாற்றிலும் ஈடுபாடு கொண்டவர்.
This entry was posted in அறிவியல், சுற்றுலா and tagged , , , . Bookmark the permalink.

3 Responses to மாமல்லபுரத்துப் புதிர்: கிருஷ்ணனின் வெண்ணெய்ப் பந்து என்னும் வான் இறைக் கல்

  1. நான் இன்றுதான் இதன் வரலாற்று செய்திகளை விரிவாக அறிந்தேன் நன்றி நண்பரே…

    Like

  2. கரந்தை ஜெயக்குமார் சொல்கிறார்:

    நன்றி ஐயா

    Like

  3. பிங்குபாக்: மாமல்லபுரத்துப் புதிர்: கிருஷ்ணனின் வெண்ணெய்ப் பந்து என்னும் வான் இறைக் கல் – TamilBlogs

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.