Monthly Archives: ஜூன் 2018

பென்னேஸ்வரமடம் கோவில் கல்வெட்டு: ஹோய்சாள மன்னர் வீர ராமநாதன் எவ்வாறு ஊழலைக் கட்டுப்படுத்தினார்?

அருள்மிகு வேதநாயகி சமேத பென்னேஸ்வர நாயனார் கோவில் கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிபட்டிணம் வட்டாரம் (Block),  பென்னேஸ்வரமடம் (Panneswaramadam), பின் கோடு 635112 (காவேரிபட்டிணம் அஞ்சல் நிலையம்), பென்னேஸ்வரமடம் – அகரம் சாலையில்,  தென்பெண்ணை ஆற்றங்கரையில் அமைந்துள்ளது. இக்கோவிலில் 40 க்கும் மேற்பட்ட கல்வெட்டுகள் கண்டறியப்பட்டுள்ளன. இவற்றுள் ஹோய்சாள மன்னன் வீர ராமநாதன் பொறித்த கல்வெட்டு ஒன்று இலஞ்சம் வாங்குவதோ கொடுப்பதோ குற்றம் என்று கருதி, லஞ்சம் வாங்கிய அல்லது கொடுத்த நபருக்கும், அதைத் தடுக்கத் தவறிய அரசு அதிகாரிக்கும் மரண தண்டனை வழங்க ஆணை பிறப்பித்துள்ளது பலரையும் வியப்படைய வைத்துள்ளது. Continue reading

Posted in கோவில், தொல்லியல், வரலாறு | Tagged , , , , , , , | 9 பின்னூட்டங்கள்

பட்டறைப்பெரும்புதூர் அகழாய்வு: அரிய கற்காலக் கருவிகள், ரோமானிய ரௌலட் மண்கலன்கள் கண்டுபிடிப்பு

பட்டறைப்பெரும்புதூர் கிராமத்தில் தமிழ்நாடு மாநில தொல்லியல் துறையினர் மேற்கொண்ட அகழ்வாய்வில் 30 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய காலத்திலேயே இந்தப் பகுதியில் மனிதர்கள் வாழ்ந்ததற்கான தடயங்களைக் கண்டறிந்துள்ளனர். இங்கு கற்கால மனிதர்கள் பயன்படுத்திய பல்வேறு கற்கருவிகள் கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.  ரோமானியர்களுடன் தமிழர்கள் கொண்டிருந்த வணிகத் தொடர்பைச் சுட்டிக்காட்டும் ரோமானிய ரௌலட் மட்பாண்ட வகைகள் இங்குக் கிடைத்திருப்பதும் குறிப்பிடத்தக்கது. சங்ககாலத்தில் இந்த இடம் ரோமானியர்களுடன் வர்த்தகம் மேற்கொண்ட வணிகமையமாகவும் திகழ்ந்திருக்கக்கூடும் என்று தொல்லியல் அறிஞர்கள் கருதுகிறார்கள். Continue reading

Posted in தமிழ்நாடு, தொல்லியல், வரலாறு | Tagged , , , , , , , , , | 9 பின்னூட்டங்கள்