Daily Archives: ஓகஸ்ட் 3, 2018

பென்னேஸ்வர மடம் கல்வெட்டுக் குறிப்பிடும் ‘மாதரசன்பட்டணம்’ எனும் மதராசப்பட்டணம் 651 ஆண்டுகள் பழைமையானதா?

பென்னேஸ்வர மடம் கிராமம் பெண்ணையாற்றங்கரையில் உள்ள பெரிய பாறையின் சரிவில் விஜயநகரப் பேரரசின் மன்னன் கம்பண உடையர், தம் ஆட்சியாண்டு சகம்  1291 ஆம் ஆண்டுப் பிலவங்க வருஷம் பூர்வபட்சம் ரோகிணி நட்சத்திரத்திற்கு நிகரான வரலாற்று ஆண்டு    1367 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 21 ஆம் தேதியன்று பொறித்த கல்வெட்டில் மாதரசன்பட்டணம் (‘Maadarasanpattanam’) (சென்னை) குறித்த தகவல் பதிவு செய்யப்பட்டுள்ளது. 31 வரிகளில் அமைந்த இக்கல்வெட்டுத் தமிழ் மொழியில் தமிழ் வடிவில் பதிவு செய்யப்பட்டுள்ளது, இது மிகவும் சிதைந்த நிலையில் காணப்படுகிறது. தானைத் தலைவனான சோமப்ப தெண்ணாயக்கர் மகன் கூளிமாராய நாயக்கர் கண்ட வெற்றிகளைத் தொகுத்துச் சொல்லும் இந்தக் கல்வெட்டில் இடம்பெற்றுள்ள மாதரசன்பட்டணம் பற்றிய பதிவின்படி 2018 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 21 ஆம் தேதியன்று மதராசப்பட்டணம் (சென்னை) நகரின் வயது 651 ஆண்டுகள் என்று நிச்சயமாகக் கூறுகிறார் முனைவர் எஸ்.இராஜவேலு. சென்னை வரலாற்று ஆசிரியர்களின் (Chennai Historians) கணிப்பின்படி சென்னையின் வயது 379 ஆண்டுகள் என்பது தவறான சித்தரிப்பு என்றும் இராஜவேலு கருதுகிறார். இந்தக் கணிப்பு புனித ஜார்ஜ் கோட்டைக்கு ஒருவேளை பொருந்தலாம்.  Continue reading

Posted in சென்னை, தொல்லியல், வரலாறு, விழாக்கள் | Tagged , , , , , , , | 13 பின்னூட்டங்கள்