வினோத் ராஜனின் அட்சரமுகம்: இருபது தெற்காசிய லிபிகளுக்கான ஒலிபெயர்ப்பு மென்பொருள்

வினோத் ராஜன் இந்திய மொழியியல், எழுத்துரு (font) மற்றும்  யூனிகோடு சார்ந்த கணினியியலில்  (Computing) அதிக ஆர்வமுடைய இளைஞர். இவர் வடிவமைப்பில் உருவான அட்சரமுகம் என்ற ஒலிபெயர்ப்பு மென்பொருள் (Phonetic Software) பலரின் பாராட்டைப் பெற்றுள்ளது.

இவரது தாய்மொழி கூடத் தமிழ் அல்ல. என்றாலும் தமிழ்நாட்டு மக்கள் தமிழ் சார்ந்தவற்றைக் கற்க, ஊக்கப்படுத்த, தமிழில் மொழியியல் சார்ந்த மென்பொருட்கள் பல மென்பொருட்களை உருவாக்கவேண்டும் என்பது இவரது பேரவா. ஆதிநாதா என்பது வினோத் ராஜனால் வடிவமைக்கப்பட்ட யுனிடிகோட் தமிழ் பிராமி எழுத்துருவாகும் (Unicode Tamil Brahmi Font). பிராமி எழுத்து வடிவினை பண்டைத் தமிழகத்தில் அறிமுகப்படுத்திய சமணர்களின் நினைவைப் போற்றும் வகையில் இந்த எழுத்துரு ஆதிநாதா என்று பெயரிடப்பட்டது. பிராமி வரிவடிவ தமிழ் கல்வெட்டுகளை எண்ணிமப்படுத்த (Digitize) இந்த எழுத்துரு உதவக்கூடும் என்கிறார் வினோத் ராஜன். இது பற்றிய என் வலைப்பதிவு

இவர் வடிவமைத்த அனுநாதம் தமிழ் எழுத்துக்களைப்  பன்னாட்டு ஒலிப்பியல் அகரவரிசையில் (International Phonetic Alphabet (IPA) மாற்றும் கருவி ஆகும். மேலும் இவர் வடிவமைத்த அவலோகிதம் – தமிழ் யாப்பு (Tamil Prosody) மொழியியல் சார்ந்த மென்பொருளாகும். தமிழில் மரபுப் பா எழுதுவோருக்கு இந்த  மென்பொருள் பேருதவியளிக்கும். Grantha Script Lessons என்ற தலைப்பில் இவர் உருவாக்கிய மின்னூல் (PDF file) கிரந்த எழுத்துக்களைக் கற்க விழைவோருக்கு உதவும். இந்தப் பதிவு அட்சரமுகம் ஒலிபெயர்ப்பு மென்பொருள் பற்றி விவரிக்கிறது.

20180102_191838-1

Vinodh Rajan PC: Virtual Vinodh

வினோத் ராஜன் சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் வேதிப்பொறியியலும் (Chemical Engineering)  (ஆகஸ்டு 2004 முதல் மே 2008 வரை) தகவல் தொழில்நுட்பமும் (Information Technology) (ஆகஸ்டு 200 முதல் மே 2009 வரை) பயின்று தேறியவர். சிலகாலம் (நவம்பர் 2009 முதல் ஆகஸ்டு 2012 வரை) சென்னையில் உள்ள மென்பொருள் நிறுவனம் ஒன்றில் சோதனையாளராகப் பணிபுரிந்தார். அண்மையில் ஸ்காட்லாந்து நாட்டின் புனித ஆண்ட்ரூஸ் பல்கலைக்கழகத்தில் (St Andrews HCI (SACHI) research group, University of St Andrews) கணினியியல் துறையில் (Computer Science) முனைவர் பட்டம் (செப்டம்பர் 2012 முதல் ஆகஸ்டு 2016 வரை) பெற்றுள்ளார். சில காலம் (ஆகஸ்டு 2016 முதல் செப்டம்பர் 2017 வரை) இந்தப் பல்கலைகழகத்தில் இணை விரிவுரையாளராகப் (Associate Lecturer) பணிபுரிந்த பின்பு தற்போது ஜெர்மனியில் ஹம்பர்க் பல்கலைக் கழகத்தில் (University of Hamburg, Hamburg Germany) முதுமுனைவர் நிலையில் இணை ஆய்வராகப்  (Research Associate (Post-doctoral Level) பணியாற்றி வருகிறார்.

அட்சரமுகம் வினோத் ராஜனால் உருவாக்கப்பட்ட ஒரு ஒலிபெயர்ப்பு மென்பொருள். http://www.virtualvinodh.com/wp/aksharamukha/ என்பது இதன் வலைதள முகவரி ஆகும். இந்த மென்பொருள் 20 தெற்காசிய மொழி லிபிகளுக்கு (Script) இடையே ஒலிபெயர்ப்புக்கு (transliteration) உதவுகிறது. இந்த மென்பொருளின் சிறப்பே, கூகிள் ஒலிபெயர்ப்பு கருவியைக் காட்டிலும், பெரும்பாலான தெற்காசிய லிபிகளுக்கு ஆதரவு தருவதுதான்.  வலை இடைமுகம் (web interface) மற்றும் உரை (text) ஆகிய இரண்டையும் இந்த மென்பொருளால் கையாள முடியும். இது இந்தியக் கணிப்பணியில் (Indic Computing) ஒரு முன்னோடி மென்பொருள் ஆகும்.

தற்போது இந்த மென்பொருள் திபெத், சிங்களம், மலையாளம், தமிழ், ஒரியா, தெலுங்கு, கன்னடம், வங்காளம், பர்மியம், கெமர், அசோகன் பிராமி, குஜராத்தி, குர்முகி, தமிழ் கிரந்த்தா, கிரந்தா, சௌராஷ்டா, தாய், தேவநாகரி லிபிகளை ஆதரிக்கிறது. இது International Alphabet of Sanskrit Transliteration (I.A.S.T.), ISO 15919, ஹார்வர்ட்-கியோட்டோ (Harvard-Kyoto), ITRANS மற்றும் Velthuis போன்ற 5 முக்கிய லத்தீன் ஒலிபெயர்ப்பு மரபுகளை  (major latin transliteration conventions) ஆதரிக்கிறது.

தேவநாகரி மற்றும் தொடர்புடைய இந்திய லிபிகளை இலத்தீன் லிபியில் மொழிபெயர்த்தல் என்பது ரோமானியமயமாக்கலுக்கான தொடர்ச்சியான சர்வதேச தரங்களில் ஒன்றாகும். இதற்கான ஐ.எஸ்.ஒ 15919 தகுதரம் 2001 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. இது பிராமி (Brahmic scripts) மற்றும் இந்திய லிபிகளில் (Indic scripts) மிகப்பெரிய மெய் மற்றும் உயிர் எழுத்துத் தொகுப்புக்களை (much larger set of consonants and vowels) இலத்தின் லிபிக்கு ஒலிபெயர்க்கத் தேவையான  ஒலிக்குறியீட்டுப் புள்ளிகளின் (diacritics) வரை படத்தைப் (map) பயன்படுத்துகிறது. இந்த மென்பொருள் பி.எச்.பி (PHP: Hypertext Preprocessor) நிரலாக்க மொழியில் உருவாக்கப்பட்டுள்ளது. மொழியின் குறிப்பிட்ட அம்சங்கள் மற்றும் அட்சரமுகத்தின் விருப்பத் தேர்வுகளை  இங்கும் இங்கும்2 இந்கும்3 காணலாம்.

aksharamukha க்கான பட முடிவு

அட்சரமுகம் என்ற ஆசிய லிபி மாற்றி (ஒலிபெயர்ப்பு) (Aksharamukha ·Asian Script Converter) மென்பொருளைப் பயன்படுத்துவது எப்படி?

அட்சரமுகம் மென்பொருள் இடைமுகத்தின் (Aksharamukha Software Interface) படம் மேலே தரப்பட்டுள்ளது. முதலில் “Source” என்ற கீழ் விரியும் பட்டியில் (Drop-down Menu) காணும் 20 மூல மொழிகளில் ஒன்றைத் தேர்வு செய்வதன் மூலம் இம்மொழியின் லிபி உரையை (Text – Script of the Source Language) உள்ளிட முடியும். அடுத்து “Target”  என்ற கீழ் விரியும் பட்டியில் (Drop-down Menu) காணும் 20 மூல மொழிகளில் ஒன்றைத் தேர்வு செய்வதன் மூலம் இம்மொழியின் லிபி உரையை (Text – Script of the Source Language) வெளியீட்டுப் பெட்டியில் விடையாகக் காண முடியும். உள்ளிடும் பெட்டி (Input Box) மற்றும் வெளியிடும் பெட்டி (Output Box) என இரண்டு பெட்டிகள் காட்டப்பட்டுள்ளன.

பொது விருப்பங்கள் (General Options)

இலக்கின் மூல உரை பாதுகாவல் (Preserve Source): இந்த விருப்பத்தைத் தேர்வு செய்யப் பெட்டியில் சொடுக்குக. விளக்கம்: இலக்கு உரை (Target Text) தாய்நாட்டரின் மரபு வழக்கில் செயலாக்கப்படுவதால் (processed for nativization convention) .இவற்றைச் சேமிக்கவேண்டியுள்ளது. சேமித்த உரையைக் (nativized text) கொண்டு தலைகீழாக ஒலிபெயர்ப்பு (reverse transliterate) செய்ய இயலும்.

ஒலிக்குறியீட்டுப் புள்ளிகளை நீக்குதல் (Remove Diacritics): இந்த விருப்பமானது இலக்கு உரைகளில் காணப்படும் அழுத்தம், வேறுபாடு முதலியவற்றைக் காட்ட இடப்படும் ~, ^ போன்ற குறியீட்டுப் புள்ளிகளை நீக்க உதவுகிறது. இந்த விருப்பத்தைத் தேர்வு செய்யப் பெட்டியில் சொடுக்குக.

குறிப்பிட்ட லிபிகளுக்கான விருப்பங்களைத் (Script Options) தேர்வு செய்யப் பக்க பட்டையில் (Side Bar) உள்ள பக்கங்களைப் பார்க்கவும்.

எழுத்துக்களின் அணியைக் (Character Matrix) காண இங்கு செல்க.

எடுத்துக்காட்டு:-

“மாண்யபுரா என்ற மண்ணே: அழிவின் விளிம்பில் மேலைக் கங்கர்களின் தலைநகரம்” என்ற என்னுடைய வலைப்பதிவு குறித்துத் திரு. என்.கணேசன் ஐயா அவர்கள் மின்தமிழ் குழுவில் (GOOGLE GROUP) எழுதிய மடலில் கண்ட சில வரிகளைக் கீழே கொடுத்துள்ளேன். இந்த வரிகள்  மூலம் அட்சரமுகம் மென்பொருள் பற்றித் தெரிந்து கொண்டேன். பயன்படுத்தியதில் இஃது எவ்வாறு பதிவுகளை மேம்படுத்த கூடும் என்று புரிந்தது. கணேசன் ஐயா அவர்களுக்கு நன்றி. உங்களுக்கும் இந்த மென்பொருள் பயன்படக்கூடும் என்று கருதியதால் இந்தப் பதிவை எழுதுகிறேன்.

மண்ணை என்ற தமிழ்ச் சொல் மண்ணெ என்று கன்னடத்தில் வரும். மண்யபுர என்பர். மாண்யபுர இல்லை. மண்ணூர் என்ற பெயர், மண்ணெ என்றும், புர சேர்ந்து மண்யபுர என்றும் அழைப்பர் போலும்.
பல பதிவுகளில், கன்னட, தெலுங்கு, மலையாள, பிற இந்தியச் சொற்களை தமிழ் எழுத்தில் எழுதுகிறீர்கள். அதனைச் சரிபார்க்க உதவும் கருவிப் பக்கம் இருக்கிறது. உங்களுக்கு மிக உதவக்கூடியது:
அட்சரமுகம்:
உ-ம் 1:
மேல்பெட்டியில் ಮಣ್ಯಪುರ உள்ளிட்டு, Kannada தெரிவுசெய்க.
பின் Target பெட்டியில் தமிழ் (அல்லது வேறோர் லிபி):
மண்யபுர என விடைகிட்டும். பாருங்கள்.
உ-ம் 2:
மேல்பெட்டியில்  ಬಸದಿ  உள்ளிட்டு, கன்னடத்தைத் தேர்ந்தெடுக்கவும்.
 
பின் டார்கெட் பெட்டியில் தமிழ்.
ப³ஸதி³ என விடைகிடைக்கும்.

 

Tamil: அட்சரமுகம் <–>(Assamese: অক্ষৰমুকম্) <–> (Bengali: অক্ষরমুকম্) <–> (Burmese: အက္ၐရမုကမ်) <–> (Devanagari: अक्षरमुकम्) <–> (Gujarathi: અક્ષરમુકમ્) <–> (Kannada: ಅಕ್ಷರಮುಕಂ)   <–> (Khemer (Cambodian): អក្ឞរមុកម៑) <–> (Malayalam: അക്ഷരമുകം) <–> (Oriya: ଅକ୍ଷରମୁକମ୍) <–> (Punjabi (Gurmukhi): ਅਕ੍ਸ਼਼ਰਮੁਕਮ੍) <–> (Sinhala: අක්‍ෂරමුකම්)  <–>(Telugu: అక్షరముకం)

தமிழ் – கிரந்தம் (இந்தோலிபி): விசித்ரசித்த (ৱিচিত্রচিত্ত), மத்தவிலாச (মত্তৱিলাচ), சம்கிர்ணஜடிஹ் (চম্কির্ণজটিহ্)

பட்டியல் 1: மூலம்: தேவநாகரி –> இலக்கு: தமிழ் -> வங்கம் -> குஜராத்தி -> கன்னடம் -> கெமர்

தேவநாகரி
தமிழ்
வங்கம்
குஜராத்தி
கன்னடம்
கெமர்
संस्कृत
ஸம்ʼஸ்க்ருʼத
সংস্কৃত
સંસ્કૃત
ಸಂಸ್ಕೃತ
សំស្ក្ឫត
श्री कृष्ण
ஸ்ரீ க்ருʼஷ்ண
শ্রী কৃষ্ণ
શ્રી કૃષ્ણ
ಶ್ರೀ ಕೃಷ್ಣ
ឝ្រី ក្ឫឞ្
विराम
விராம
 বিরাম
વિરામ
ವಿರಾಮ
វិរាម

பட்டியல் 2: மூலம்: தேவநாகரி –> இலக்கு: மலையாளம் -> சிங்களம் -> தமிழ் கிரந்தம் -> பரிவிருத்த தெலுங்கு -> பஞ்சாபி (குர்முகி)

தேவ நாகரி
மலை யாளம்
சிங்களம்
தமிழ் கிரந்தம்
பரிவிருத்த தெலுங்கு
பஞ்சாபி (குர்முகி)
संस्कृत
സംസ്കൃത
සංස්කෘත
ஸংஸ்கৃத
సంస్కృత
ਸੰਸ੍ਕ੍ਰੁਤ
श्री कृष्ण
ശ്രീ കൃഷ്ണ
ශ්‍රී කෘෂ්ණ
 கৃஷ்ண
 శ్రీ కృష్ణ
ਸ਼੍ਰੀ ਕ੍ਰੁਸ਼਼੍ਣ
विराम
 വിരാമ
විරාම
 விராம
విరామ
ਵਿਰਾਮ
Sanskrit (தேவநாகரி): ॐ भूर्भुवः स्वः तत्सवितुर्वरेण्यम् भर्गो देवस्य धीमहि धियो यो नः प्रचोदयात् ॥
தமிழ்: ஓம்ʼ பூ⁴ர்பு⁴வ​: ஸ்வ​: தத்ஸவிதுர்வரேண்யம் ப⁴ர்கோ³ தே³வஸ்ய தீ⁴மஹி தி⁴யோ யோ ந​: ப்ரசோத³யாத்
தமிழ் (ஒலிக்குறியீட்டுப் புள்ளிகள் நீக்கியது): ஓம் பூர்புவ​: ஸ்வ​: தத்ஸவிதுர்வரேண்யம் பர்கோ தேவஸ்ய தீமஹி தியோ யோ ந​: ப்ரசோதயாத் ||
 இந்தோ லிபி : ওং ভূর্ভুৱঃ স্ৱঃ তত্সৱিতুর্ৱরেণ্যম্ ভর্গো দেৱস্য ধীমহি ধিযো যো নঃ প্রচোদযাত্ ||

Kannada ಎಲ್ಲಾ ಕನ್ನಡ ಅಭಿಮಾನಿಗಳ ಅಂತರರಾಷ್ಟೀಯ ವೇದಿಕೆ – ಈಕವಿ
ಬನ್ನಿ ಎಲ್ಲಾ ಕನ್ನಡಿಗರು ಒಂದಾಗಿ ಕನ್ನಡ ಕೆಲಸಕ್ಕೆ ಮುಂದಾಗೋಣ…
Tamil: எல்லா கன்னட அபிமானிகள அந்தரராஷ்டீய வேதிகெ – ஈகவி
பன்னி எல்லா கன்னடிகரு ஒந்தாகி கன்னட கெலஸக்கெ முந்தாகோண…

Malayalam: ഹരിവരാസനം വിശ്വമോഹനം
ഹരിധധീശ്വരം ആരാധ്യപാദുകം
അരുവിമര്ദ്ധനം നിത്യനര്ത്തനം
ഹരിഹരാത്മജം ദേവമാസ്രയേ

Tamil: ஹரிவராஸனம்ʼ விஸ்²வமோஹனம்ʼ
ஹரித⁴தீ⁴ஸ்²வரம்ʼ ஆராத்⁴யபாது³கம்ʼ
அருவிமர்த்³த⁴னம்ʼ நித்யனர்த்தனம்ʼ
ஹரிஹராத்மஜம்ʼ தே³வமாஸ்ரயே

Telugu: 
సామజ వర గమన సాధు హృత్ |
సారాసాబ్జు పాల కాలాతీత విఖ్యాత||
||సామజ||
సామని గమజ సుధా |
మయ గాన విచక్షణ ||
గుణశీల దయాలవాల |
మామ్ పాలయ ||

Tamil:

ஸாமஜ வர க³மன ஸாது⁴ ஹ்ருʼத் |
ஸாராஸாப்³ஜு பால காலாதீத விக்²யாத||
                                                                                      || ஸாமஜ||
ஸாமனி க³மஜ ஸுதா⁴ |
மய கா³ன விசக்ஷண ||
கு³ணஸீ²ல த³யாலவால |
மாம் பாலய ||

குறிப்புநூற்பட்டி

  1. திரு.என்.கணேசன் அவர்களின் வல்லமை மடல் கருத்துப் பதிவு https://groups.google.com/forum/#!topic/vallamai/XkEFSRaSU_U
  2. ரோமன்லிபியில் எளிமையாகத் தமிழ் ஒலிபெயர்ப்பு https://groups.google.com/forum/#!topic/houstontamil/15P9PsGrKgE
  3. Devanagari transliteration Wikipedia
  4. Dr. Vinodh Rajan Sampath https://www.inf.uni-hamburg.de/inst/ab/bv/team/sampath.html
  5. ISO 15919
  6. Virtual Vinod http://visiblemantra.blogspot.com/2010/05/virtual-vinod.html
  7. Virtul Vinodh http://www.virtualvinodh.com/wp/aksharamukha/

About முத்துசாமி இரா

புதுக்கோட்டை மாவட்டம் இராமச்சந்திரபுரத்தைப் பிறப்பிடமாகவும், சென்னை சைதாப்பேட்டையை வசிப்பிடமாகவும் கொண்ட இரா.முத்துசாமி, காரைக்குடி அழகப்பா கல்லூரியிலும், சென்னைப் பல்கலைக்கழகத்திலும் பயின்றவர். இவர் 1975ஆம் ஆண்டு தொடங்கி சி.வி.ஆர்.டி.இ (டி.ஆர்.டி.ஓ) ஆவடி, சென்னையில் பணியாற்றி ஒய்வு பெற்றவர். தமிழ் இலக்கியத்திலும், தமிழக வரலாற்றிலும் ஈடுபாடு கொண்டவர்.
This entry was posted in இந்தியா, தமிழ், மொழி and tagged , , , , , , , . Bookmark the permalink.

5 Responses to வினோத் ராஜனின் அட்சரமுகம்: இருபது தெற்காசிய லிபிகளுக்கான ஒலிபெயர்ப்பு மென்பொருள்

  1. ஸ்ரீராம் சொல்கிறார்:

    திரு வினோத் ராஜனின் சிறப்பு பற்றி புரிகிறது.

    Like

  2. கரந்தை ஜெயக்குமார் சொல்கிறார்:

    போற்றுதலுக்கு உரியவர்

    Like

  3. பிங்குபாக்: வினோத் ராஜனின் அட்சரமுகம்: இருபது தெற்காசிய லிபிகளுக்கான ஒலிபெயர்ப்பு மென்பொருள் – TamilBlogs

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.