Monthly Archives: செப்ரெம்பர் 2018

முதலாம் ஆதித்த சோழனின் பள்ளிப்படை கோவில்: கோதண்டராமேஸ்வரா பொக்கிசம்பாளம், ஆந்திரப் பிரதேசம்

கோதண்டராமேஸ்வரா (English: Kondandaramesvara; Telugu: కోతండ రామ రాఎస్వారా) என்னும் ஆதித்தீஸ்வரா (English: Aditeesvara; Telugu: అదితిస్వారా) அல்லது ஸ்ரீ காமாட்சி சமேத கோதண்டராமேஸ்வர சுவாமி கோவில், ஆந்திரப்பிரதேச மாநிலம், சித்தூர் மாவட்டம், ஸ்ரீ காளஹஸ்தி மண்டல், பொக்கிசம்பாளம் (English: Bokkasam Palem; Telugu: బొక్కసం పాలెం) பின் கோடு 517619  கிராமத்தில் அமைந்துள்ள முதலாம் ஆதித்த சோழரின் (கி.பி. 871-907) பள்ளிப்படை கோவிலாகும் (English: Sepulchre Temple).  பள்ளிப்படைக் கோவில் வழிபாடு எப்போது தொடங்கியது என்பது பற்றி நிச்சயமாகத் தெரியவில்லை. பள்ளிப்படை கோவில் என்பது பிற்காலச் சோழர்களின் காலத்தில் உயிர்நீத்த சோழ மன்னர்கள் மற்றும் இவர்கள் குடும்பத்தினர்கள், பெரும் போரில் இறந்துபோன வீரர்கள் ஆகியோரது அஸ்தியின் மீது எழுப்பப்பட்ட கோவிலைக் குறிக்கும். கல்வெட்டு பதிவுகள் இவ்வூரை தொண்டமாநாடு என்று குறிப்பிடுகின்றன.

விஜயாலய சோழனின் (கி.பி.846-881) மகனான இராஜகேசரி முதலாம் ஆதித்த சோழன் (கி.பி.871-907) கி.பி. 907 ஆம் ஆண்டு தொண்டமானாற்றூர் என்னுமிடத்தில் இறந்து போனார். இவருடைய மரணம் பற்றி “தொண்டைமானரூர் துஞ்சின உடையார்” என்ற அடைமொழியுடன் (epithet) இரண்டாம் ஆதித்த சோழனின்  14 ஆம் ஆட்சியாண்டில் பொறிக்கப்பட்ட திருமால்புரம் (திருமால்பேர்) கல்வெட்டு பதிவு செய்துள்ளது. தொல்லியல் ஆய்வாளர் திரு.வெங்கய்யா இந்தத் தொண்டமானாற்றூரை ஸ்ரீ காளஹஸ்திக்கு அருகில் உள்ள தொண்டமாநாடு என்று அடையாளம் கண்டுள்ளார். இவ்வூரை திருவேங்கடக் கோட்டத்து ஆற்றூர் நாட்டு தொண்டமான் பேராற்றூர் என்று கல்வெட்டுக் குறிப்பிடுகிறது.
Continue reading

Posted in கோவில், சோழர்கள், தொல்லியல், வரலாறு | Tagged , , , , , , , , , | 12 பின்னூட்டங்கள்

தொண்டூர்: பஞ்சனாப்பாடி குன்றில் சமணர் குகைத்தளங்கள், பல்லவர் கால விண்ணாம்பாறை விஷ்ணு சிற்பம்

விழுப்புரம் மாவட்டத்தில் சமணம் செழித்தோங்கியது. இம்மாவட்டத்தில் கி.மு. முதல் நூற்றாண்டு தொடங்கிப் பல சமண சமயச் சான்றுகள் கிடைத்துள்ளன. செஞ்சி வட்டத்தில் உள்ள மலைக்குன்றுகளில் 2000 ஆண்டுகள் பழமையான சமணர் குகைத் தளங்களும், கற்படுக்கைகளும், தமிழ் பிராமிக் கல்வெட்டுகளும், பாறைகளில் செதுக்கப்பட்ட சமண தீர்த்தங்கரர்களின் புடைப்புச் சிற்பங்களும் காணக்கிடைக்கின்றன.

தொண்டூர் கிராமத்தின் அருகே பஞ்சனாப்பாடி என்ற மலைக்குன்றில் அமைந்துள்ள இயற்கையான சமணர் குகைத் தளம், கற்படுக்கைகள், 23 ஆம் தீர்த்தங்கரரான பார்சுவனாதரின் புடைப்புச் சிற்பம் மற்றும் தமிழ் பிராமிக் கல்வெட்டு ஆகியவற்றைக் காணலாம். கல்வெட்டு கி.பி. 3 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது என்றும் பார்சுவனாதரின் புடைப்புச் சிற்பம் கி.பி. 8 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது என்றும் கணிக்கப்பட்டுள்ளன. இந்தச் சமணர் குகைத்தளம் தொல்லியல் துறையினரின் பராமரிப்பில் இல்லாதது வியப்புக்குரியது.  பராமரிப்பு இல்லாமல் பாழடையும் இந்த நினைவுச் சின்னத்தைப் பாதுகாக்க வேண்டியது மிகவும் இன்றியமையாதது ஆகும். 

தொண்டூர் அருகே வயல் வெளியில், விண்ணாம்பாறை என்று அழைக்கப்படும் தனிப் பாறையில் புடைப்புச் சிற்பமாகச் செதுக்கப்பட்டுள்ள சிற்பத் தொகுதியில் விஷ்ணு வலமிருந்து இடமாகப் பள்ளிகொண்ட கோலத்தில் அனந்தசயன விஷ்ணுவாக யோக நித்திரையில் காட்சி தருகிறார். மூன்றாம் நந்திவர்ம பல்லவன் காலத்தில் செதுக்கப்பட்ட இந்த அனந்தசயன விஷ்ணுவின் நீண்ட கிரீடமகுடம் கம்போடிய படிமவியல் கலைப்பாணியை நினைவுபடுத்துகிறது.    கம்போடியா நாட்டுடன் பல்லவர்கள் கொண்டிருந்த தொடர்புக்கு சான்றாக அமைந்துள்ளதாக வரலாற்று அறிஞர்கள் கருதுகிறார்கள். Continue reading

Posted in சமண சமயம், தொல்லியல், படிமக்கலை, வரலாறு | Tagged , , , , , , , , , , | 12 பின்னூட்டங்கள்

ஆலகிராமம் எமதண்டீஸ்வரம் கோவிலில் கிடைத்த கி.பி. 5 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பிள்ளையார் சிற்பமே காலத்தால் முந்தையது!

விழுப்புரம் மாவட்டம், மைலம் வட்டாரத்தில் அமைந்துள்ள எமதண்டீஸ்வரர் கோவிலில்  வட்டெழுத்துகள் பொறிக்கப்பட்ட பீடத்துடன் கூடிய பிள்ளையாரின் புடைப்புச் சிற்பம் கல்வெட்டு ஆய்வாளர்களான வீரராகவன், மங்கையற்கரசி தம்பதியரால் கண்டறியப்பட்டது. இந்தச் சிற்பம் பலகைக் கல்லில் செதுக்கப் பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள பிள்ளையார் சிற்பங்களிலேயே இந்தப் பிள்ளையார் சிற்பமே காலத்தால் முந்தையது என்றும் இந்தத் தம்பதிகள் கருத்துத் தெரிவித்துள்ளனர். Continue reading

Posted in குடைவரைக் கோவில், தொல்லியல், படிமக்கலை | Tagged , , , , , , , , | 16 பின்னூட்டங்கள்