Monthly Archives: நவம்பர் 2018

கல்வெட்டு எழுத்தியல் அறிஞர் பத்மஸ்ரீ ஐராவதம் மகாதேவன் மறைந்தார்

மிகச் சிறந்த கல்வெட்டு எழுதியல் அறிஞரான பத்மஸ்ரீ ஐராவதம் மகாதேவன் அவர்கள் சென்னை ஆதம்பாக்கத்தில் உள்ள அவரது இல்லத்தில் இன்று (நவம்பர் 26 2018) அதிகாலை 4 மணி அளவில் காலமானார். .

இவர் நீண்ட நாள்களாகவே உடல்நலம் இல்லாமல் சிகிச்சை பெற்று வந்தார். இவரது இறுதிச் சடங்கு, சென்னை பெசன்ட் நகர் மின் மயானத்தில் நவம்பர் 26 2018 ஆம் தேதி மாலை நடைபெறுகிறது. 

இவர் மிகச் சிறந்த களப்பணியாளர் தமிழகத்தில் நடைபெற்ற தொல்லியல் ஆய்வுகளில் இவர் ஆற்றிய பணிகள் போற்றுதற்குரியது. தமிழ் பிராமி ஆய்வுகளில் முன்னோடியாகத் திகழ்ந்த இவர் பல கட்டுரைகளையும் எழுதியுள்ளார். சிந்துசமவெளி எழுத்துகளுக்கும் திராவிட மொழி குடும்பத்துக்கும் உள்ள உறவை சொன்னவர் பத்மஸ்ரீ ஐராவதம் மகாதேவன் ஆவார். இவரது மறைவு தமிழுக்கும் தொல்லியலுக்கும் ஈடு செய்ய முடியாத இழப்பாகும். Continue reading

Posted in தொல்லியல், மொழி, வரலாறு | Tagged , , , , | 8 பின்னூட்டங்கள்

தமிழகத்தின் இரும்புக் காலம்: 1 சங்க இலக்கியத்தில் இரும்பு எஃகு தொழில் நுட்ப அறிவு

மனித நாகரீகத்தின் முன்னேற்றத்தை கற்கால நாகரீகத்திலிருந்து உலோக கால நாகரீகத்திற்கு (Iron Age Civilization) நகர்த்திய உலோகங்களில் இரும்பு முக்கியப் பங்கு வகிக்கிறது. கொஞ்சம் இரும்புத் தாது நெருப்பில் விழுந்து உருகிக் குளிர்ந்து கட்டி இரும்பான (Wrought Iron) போது  ஆதிமனிதனால்  இந்த உலோகம் கண்டறியப்பட்டிருக்கலாம் என்று வரலாற்றாசிரியர்கள் நினைக்கிறார்கள். இரும்பு இவர்களின் வாழ்க்கையை எளிதாக்கியது உண்மை. இரும்பினால் செய்யப்பட்ட  செய்யப்பட்ட ஆயுதங்களும் கருவிகளும் திறம்படப் பயன்பட்டன.

ஆதிமனிதன் பயன்படுத்திய கற்கருவிகளைக் கொண்டு கற்காலத்தைப் பழைய கற்காலம் (கி.மு. 10,000 ஆண்டுகளுக்கு முன்), புதிய கற்காலம் (கி.மு. 10,000 – கி.மு. 4,000 வரை) எனப் பிரித்தார்கள்.  புதிய கற்கால நாகரீகதிற்குப் பிறகு உலோககால  (பொற்காலம், செம்புக்காலம், இரும்புக்காலம்) நாகரீகம் தோன்றியது.

தமிழகத்தில் கி.மு. 500 ஆம் ஆண்டளவில் இரும்பு அறிமுகமாகியிருக்கலாம். கொடுமணல், மேல்சிறுவலூர், குட்டூர், ஆதிச்சநல்லூர், அரிக்கமேடு  போன்ற இடங்களில் மேற்கொள்ளப்பட்ட தொல்லியல் ஆய்வுகள் தமிழகத்தின் இரும்புக் காலகட்டத்தை வரையறை செய்ய உதவுகின்றன. சங்க இலக்கியம் மற்றும் தொல்லியல் வரலாற்று ஆய்வுகள் தமிழகத்தில் இரும்புத் தொழில்துறை செழித்தோங்கியது பற்றியும் ரோம் மற்றும் எகிப்து நாடுகளுக்கு இரும்பும் எஃகும் ஏற்றுமதியானது குறித்தும் பதிவு செய்துள்ளன. பண்டைய ரோமானிய ஆவணங்கள் சங்ககாலத்துத் தமிழகத்தின் சேர நாட்டிலிருந்து எஃகு இறக்குமதி செய்யப்பட்டது குறித்தும் பதிவு செய்துள்ளன. இது தமிழகத்தின் இரும்புக் காலம் பற்றிய இரண்டு பதிவுகள் கொண்ட தொடர் ஆகும்:
Continue reading

Posted in தமிழ், தொல்லியல், வரலாறு | Tagged , , , , , , , , , , , | 15 பின்னூட்டங்கள்

கிருஷ்ணபட்ணம் சித்தேஸ்வரசுவாமி கோவிலில் ஐந்நூற்றுவர் வணிகக் குழுவினர் பற்றிய விரிவான தகவலுடன் கல்வெட்டுகள்

ஆந்திரப் பிரதேச மாநிலம், எஸ்.பி.எஸ்.ஆர் நெல்லூர் மாவட்டம், முதுக்கூர் மண்டலில், வங்கக் கடற்கரையை ஒட்டி, அமைந்துள்ள சிறு கிராமம் கிருஷ்ணபட்ணம் (Telugu: కృష్ణ పట్నం) பின் கோடு 524344 ஆகும். இவ்வூர் தனியாரால் கட்டமைக்கப்பட்டுத் தனியாருக்குச் சொந்தமான கிருஷ்ணபட்ணம் துறைமுகம் ஆகும். Krishnapatnam Port Company Limited (KPCL) என்ற பெயரில் பிரபலமாக அறியப்படும் இத்துறைமுகம், ஆழமிக்கதும் எல்லாப் பருவநிலைகளுக்கும் ஏற்றதுமான துறைமுகம் ஆகும்.

இந்தக் கிராமம், ஒரு காலத்தில் பன்னாட்டுத்  துறைமுகபட்டணமாகத் திகழ்ந்தது என்பதை நம்புவது சற்று கடினம்தான். தூர கிழக்கு நாடுகள் (far-eastern) மற்றும் தென்கிழக்கு ஆசியா நாடுகளில் நிலைபெற்றிருந்த பேரரசுகளுடன் (south-eastern Asian empires) விரிவான வணிகம் மேற்கொண்ட  பன்னாட்டு வணிகர் குழுவினரின் (International Merchant-Guilds) துறைமுகப்பட்டணமாகக் கிருஷ்ணபட்ணம் விளங்கியது என்பது சற்று வியப்பான செய்திதான். இவ்வூரில் சித்தேஸ்வரருக்கு  அர்ப்பணிக்கப்பட்ட, கி.பி. 16 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சிவன் கோவில் அமைந்துள்ளது. மனும சித்தேஸ்வரம் (Manuma-Siddhisvaram) என்ற பெயருடன் இக்கோவில் திகழ்ந்துள்ளது. Continue reading

Posted in தொல்லியல், மேலாண்மை, வரலாறு | Tagged , , , , , , , | 7 பின்னூட்டங்கள்