Daily Archives: நவம்பர் 5, 2018

அரக்கு பள்ளத்தாக்கு சுற்றுலா 3: போரா குகைகள்

போரா குகைகள் (தெலுங்கு: బొర్రా గుహలు = போரா குஹலு) ஆந்திரப் பிரதேச மாநிலம், அரக்கு பள்ளத்தாக்கில், கடல்மட்டத்திலிருந்து 705 (2,313 அடி) உயரத்தில், அனந்தகிரி மலைத்தொடரில் அமைந்துள்ள இயற்கையான குகைகள் ஆகும்.  குகையின் உட்புறம் (Interior of the Cave) கடல்மட்டத்திலிருந்து 625 மீ. அமைந்துள்ளது. உயரத்தில் போரா என்றால் (Telugu: బొర్రా) தெலுங்கில் மூளை என்று பொருள். ஒரிய மொழியில் போரா என்றால் துளை என்று பொருள். குஹலு என்றால் குகை என்று பொருள். இந்தியாவின் பெரிய குகைகளில் ஒன்றாகக் கருதப்படும் போரா குகைகள் 80 மீட்டர் ஆழம் கொண்டதால், இந்தியாவின் ஆழம் மிகுந்த குகைகளாவும் கருதப்படுகிறது. இதன் நீளம் 200 மீ. ஆகும். இந்தக் குகைகள் 2 கி.மீ. தூர அளவுக்குப் பரந்து விரிந்துள்ளன. நுழைவாயிலோ 100 மீ. அகலமும், 75 மீ. உயரமும் கொண்டது. இக்குகையினுள்ளே ஒருவரால் 350 மீ. தூரத்திற்குப் பயணம் செய்ய (Trekking) இயலும்.

இந்த இயற்கைக் குகைக்கனிமப் படிவுகள் (Speleothems) நாட்டின் மிகப்பெரிய ஸ்டலக்டைட் (Stalactite) மற்றும் ஸ்டலக்மைட் (Stalagmite) படிவங்களால் ஆன குகைகள் ஆகும். “Speleothems” என்றால் குகைக்கனிமப் பதிவு என்று பொருள். Spēlaion என்ற கிரேக்க வார்த்தைக்கு “குகை’ என்று பொருள். “Thema” என்ற சொல்லுக்குப் படிமம் (Deposit) என்று பொருள். குகைக்கனிமப் படிவு (Speleothem) என்ற சொல்லை ஜி.டபிள்யூ. மூர் (G.W. Moore). (1952) என்ற அறிஞர் அறிமுகப்படுத்தினாராம்.  Continue reading

Posted in குகைகள், சுற்றுலா | Tagged , , , , , , , , | 8 பின்னூட்டங்கள்