மிகச் சிறந்த கல்வெட்டு எழுதியல் அறிஞரான பத்மஸ்ரீ ஐராவதம் மகாதேவன் அவர்கள் சென்னை ஆதம்பாக்கத்தில் உள்ள அவரது இல்லத்தில் இன்று (நவம்பர் 26 2018) அதிகாலை 4 மணி அளவில் காலமானார். .
இவர் நீண்ட நாள்களாகவே உடல்நலம் இல்லாமல் சிகிச்சை பெற்று வந்தார். இவரது இறுதிச் சடங்கு, சென்னை பெசன்ட் நகர் மின் மயானத்தில் நவம்பர் 26 2018 ஆம் தேதி மாலை நடைபெறுகிறது.
இவர் மிகச் சிறந்த களப்பணியாளர் தமிழகத்தில் நடைபெற்ற தொல்லியல் ஆய்வுகளில் இவர் ஆற்றிய பணிகள் போற்றுதற்குரியது. தமிழ் பிராமி ஆய்வுகளில் முன்னோடியாகத் திகழ்ந்த இவர் பல கட்டுரைகளையும் எழுதியுள்ளார். சிந்துசமவெளி எழுத்துகளுக்கும் திராவிட மொழி குடும்பத்துக்கும் உள்ள உறவை சொன்னவர் பத்மஸ்ரீ ஐராவதம் மகாதேவன் ஆவார். இவரது மறைவு தமிழுக்கும் தொல்லியலுக்கும் ஈடு செய்ய முடியாத இழப்பாகும்.
கல்வெட்டு அறிஞர் ஐராவதம் மகாதேவன்: PC: இந்து தமிழ்
வாழ்க்கை வரலாற்றுக் குறிப்புகள்
பிறப்பு: அக்டோபர் 2, 1930
ஊர்: திருச்சி அருகேயுள்ள மணச்சநல்லூர்
இறப்பு: நவம்பர் 26, 2018. அதிகாலை. வீட்டு முகவரி: எண். B1, நறுமுகை அடுக்குமாடிக் குடியிருப்பு, பிருந்தாவன் நகர் விரிவு, ஆதம்பாக்கம், சென்னை 600 088
குடும்பம்
மனைவி: கௌரி மகாதேவன் தேசியப் பாதுகாப்பு நிதிக்காக தன் நகைகளை அளித்தவர். 1955 ஆம் ஆண்டு இவர் மறைந்தார்.
மகன்கள்: வித்யாசாகர் மகாதேவன், ஸ்ரீதர் மகாதேவன். மூத்த மகன் வித்யாசாகர் விபத்தில் உயிரிழந்தார். இரண்டாவது மகன் ஸ்ரீதர் அமெரிக்கப் பல்கலைக் கழகத்தில் கல்விப் பணியில் உள்ளார்
பேரன் / பேத்தி: இருவர் வினய் வித்யாசாகர் மற்றும் வந்தனா வித்யாசாகர்
கல்வி
பள்ளிக் கல்வி : தூய வளனார் பள்ளி திருச்சி (SSLC தேர்வில் பள்ளியின் முதல் மாணவராகத் தேர்ச்சி பெற்றார்) (1945)
பட்டப்படிப்பு: விவேகானந்தா கல்லூரி, சென்னை B.Sc வேதியல் (1949)
சட்டப்படிப்பு: சட்டக்கல்லூரி சென்னை B.L (1952)
சட்டப் பயிற்சி: மாவட்ட மற்றும் அமர்வு நீதிமன்றம், திருச்சி (1953)
இந்திய ஆட்சிப்பணி: சென்னை மாகாணத்தின் முதல் மாணவராக I.F.S இல் தேர்வு (1953). பின்பு வேண்டுதலின் பேரில் 1954 ஆம் ஆண்டு I.A.S ஆக மாற்றிக்கொண்டார்.
இந்திய ஆட்சிப்பணி
இந்திய ஆட்சிப் பணியில் அதிகாரியாகப் பணி புரிந்தது .1954 முதல் 1980 வரை ஆகும். முழு நேரக் கல்விப்பணி புரிவதற்காக இந்திய ஆட்சிப் பணியிலிருந்து தன்னார்வ ஒய்வு (Voluntary Retirement)பெற்றுக் கொண்டார். (1980)
தினமணி பத்திரிகை ஆசிரியர்: 1987 முதல் 1991 வரை
ஆய்வுப்பணிகள்
நாணயவியலாளர்: சிறிது காலம் ஆய்வு மேற்கொண்டார்.
கல்வெட்டு ஆய்வு: தன் இறுதிக் காலம் வரை புகழ்பெற்ற கல்வெட்டு அறிஞராகத் திகழ்ந்தார்.
தமிழ் பிராமி ஆய்வு: இத் துறையில் முன்னோடியாகக் கருதப்படுபவர்.
முதற்கட்டம் 1961 – 1968;
- அழகர்மலை முதல் களப்பணி (1965).
- புகழூர் ஆறுநாட்டார் மலையில் பொறிக்கப்பட்டிருந்த தமிழ் பிராமிக் கல்வெட்டில் பதிவு செய்துள்ள சேர அரசர்களின் பெயர்கள் மற்றும் பிற செய்திகளை வெளிக்கொணர்ந்தார் (1 பிப்ரவரி 1965).
- மதுரை அருகே சமணர் நினைவுச் சின்னமான மாங்குளம் பிராமிக் கல்வெட்டின் பொருள் விளக்கம் (1965).
- பிள்ளையார்பட்டி கற்பகவிநாயகர் சன்னதியின் வட்டெழுத்துக் கல்வெட்டில் இடம்பெற்ற புள்ளியைக் கொண்டு இந்த விநாயகரைச் செதுக்கிய சிற்பி எருக்காட்டூர் தச்சன் என்று நிறுவினார்.
- Corpus of the Tamil-Brahmi Inscriptions (Monograph) என்ற நூல் வெளியிடுதல் (1966).
இரண்டாம் கட்டம் 1968 – 1986
- தமிழ் பிராமி எழுத்துக்கள் பற்றிய ஆய்வு (இரண்டாம் கட்டம்)
- திருவாதவூர் பிராமிக் கல்வெட்டு பொருள் விளக்கம் (1992)
- சிந்து சமவெளி எழுத்துக்கள்: இவற்றுடன் திராவிட மொழிக் குடும்பத்துக்கான உறவை வலியுறுத்திச் சொன்னவர். “ரிக் வேத வழியிலான சிந்து சமவெளியின் திராவிடத் தொடர்புகளுக்கான ஆதாரம்” என்ற இவர் கட்டுரை இக்கருத்தை வலியுறுத்தி எழுதப்பட்டது. இன்று வரை சிந்து சமவெளி எழுத்துக்கள் பற்றிய ஆய்வு.
ஆய்வு மையம்
சிந்து வெளி நாகரீக ஆராய்ச்சி மையம் (Indus Research Centre): ரோஜா முத்தையா நூலகம், தரமணி, சென்னை. (2007 ஆம் ஆண்டு நிறுவினார்)
விருதுகள்
- தமிழ்ச் செம்மல் விருது தங்கப் பதக்கம் மதுரை காமராஜர் பல்கலை 1995 ஆம் ஆண்டு
- தாமிர பட்டயம் (Copper Plaque) தொல்லியல் கழகம் 1998 ஆம் ஆண்டு
- பத்மஸ்ரீ விருது: 2009 ஆம் ஆண்டு
- தொல்காப்பியர் விருது: 2009 – 2010 (செம்மொழி ஆய்வு நிறுவனம் வழங்கும் விருது)
நூல்கள்
- The Indus Script : Texts, Concordance and Tables (1977);
- Early Tamil Epigraphy, from the Earliest Times to the Sixth Century A.D First Published by Harvard University. Next published by Cre_A in 2003 (2003) (His Magnum Opus Publication)
அறக்கட்டளை
- வித்யாசாகர் அறக்கட்டளை (இறந்த தன் மகன் நினைவாக)
.:

Studying and Copying the Inscription PC: Varalaru.com
நன்றி
- Iravatham Mahadevan: Fifty years of Historical Research – An Exploration in Pictures Varalaaru.com
- Iravatham Mahadevan – A Profile Varalaaru.com
சிறந்த நிர்வாகி, சிறந்த ஆய்வாளர், முன்னுதாரண அறிஞர். இளம் ஆய்வாளர்கள் அவருடைய பணியை முன்னுதாரணமாகக் கொண்டு ஏதாவது ஒரு துறையில் தடம் பதித்து சாதனை செய்ய முயல வேண்டும்.
LikeLiked by 1 person
தான் பாணியாற்றிய அத்துணை துறைகளிலும் சாதனைகள் புரிந்தவர். இவர் மறைவிற்குப் பின் உருவாகியுள்ள வெற்றிடம் கவலை அளிக்கிறது. நீங்கள் குறிப்பிட்டது போல இளம் ஆய்வாளர்கள் இவருடைய பணியை முன்னுதாரணமாகக் கொண்டு இவர் விட்டுச் சென்ற துறைகளிலேயே தடம் பதித்துச் சாதிக்க முயலவேண்டும். மேலான கருத்திற்கு நன்றி ஐயா..
LikeLiked by 1 person
பேரிழப்பு
ஆழ்ந்த இரங்கல்
LikeLiked by 1 person
கருத்திற்கு நன்றி ஐயா..
LikeLiked by 1 person
சாதனையாளரின் மறைவு ஏற்படுத்தியிருக்கும் வெற்றிடம் நிரப்ப முடியாதது.
LikeLiked by 1 person
தமிழ், வரலாறு, தொல்லியல் மற்றும் பல துறைகளில் இவர் ஆற்றிய பணி எண்ணிலடங்காது. அவர் ஒரு சகாப்தம். இவர் மறைவு உண்மையிலேயே பேரிழப்பாகும். மேலான கருத்திற்கு நன்றி ஐயா.
LikeLiked by 1 person
இவரது குடும்பத்தினருக்கு இரங்கலை தெரிவிப்போம்.
LikeLiked by 1 person
தன் வாழ்நாளில் இவர் நிகழ்த்தியது அனைத்தும் வரலாறானது. இவர் குடும்பம் பெரியது. தமிழ் வரலாறு மற்றும் தொல்லியல் ஆர்வலர்கள் எல்லோரும் இவர் குடும்பத்தினரே.
LikeLiked by 1 person