Monthly Archives: நவம்பர் 2018

மதுரா அரசு அருங்காட்சியகமும் மதுரா கலை மரபும்

மதுரா அரசு அருங்காட்சியகம் (Mathura Government Museum) மதுரா கலைமரபைச் (Mathura School of Arts) சேர்ந்த பண்டைய சிற்பங்களுக்குப் புகழ்பெற்றது. இஃது உத்தரப் பிரதேச மாநிலத்தின் முக்கிய அருங்காட்சியகம் ஆகும். குஷான வம்சத்தவர்களின் (Kushan Dynasty) (கி.பி. 1 – 2 ஆம் நூற்றாண்டு) மதுரா கலை மரபைச் சேர்ந்த தொல்பொருட்கள், மிகப்பெரிய அளவில், இங்கு காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. செம்பு, தங்கம் மற்றும் வெள்ளி நாணயங்களும் இந்த அருங்காட்சியகத்தின் அரிய சேகரிப்புகள் ஆகும். சுடுமண் பொம்மைகள் (Terracota Images), பண்டைய மண்பாண்டங்கள் (Ancient Pottery), களிமண் முத்திரைகள் (Clay Seals), ஓவியங்கள் மற்றும் பல பொருட்களை இங்கு காணலாம்.

கி.பி. முதல் நூற்றாண்டைச் சேர்ந்த ஏகமுக சிவலிங்கம், புத்தரின் தலை, கனிஷ்கரின் தலையற்ற உருவம், விருக்ஷா தேவி, யக்ஷி போன்ற குஷானர் காலத்துச் சிலைகள் இந்த அருங்காட்சியகத்தின் விலைமதிப்பற்ற காட்சிப் பொருளாகக் கருதப்படுகிறன. தொன்மைமிக்கத் தாய் தெய்வத்தின் சிற்பமும் (Archaic Mother Goddess), சுங்க வம்சத்தினர் (Sunga Dynasty) காலத்தைச் சேர்ந்த தட்டுகளும் (Plaques of the Sunga period) இந்த அருங்காட்சியகத்தின் சிறப்புக் காட்சிப் பொருட்கள் ஆகும். எனவே இந்த அரசு அருங்காட்சிகம் மதுராவில் கண்டிப்பாகக் காண வேண்டிய சுற்றுலாத் தலம் ஆகும். Continue reading

Posted in தொல்லியல், வரலாறு | Tagged , , , , , , , , | 4 பின்னூட்டங்கள்

அரக்கு பள்ளத்தாக்கு சுற்றுலா 3: போரா குகைகள்

போரா குகைகள் (தெலுங்கு: బొర్రా గుహలు = போரா குஹலு) ஆந்திரப் பிரதேச மாநிலம், அரக்கு பள்ளத்தாக்கில், கடல்மட்டத்திலிருந்து 705 (2,313 அடி) உயரத்தில், அனந்தகிரி மலைத்தொடரில் அமைந்துள்ள இயற்கையான குகைகள் ஆகும்.  குகையின் உட்புறம் (Interior of the Cave) கடல்மட்டத்திலிருந்து 625 மீ. அமைந்துள்ளது. உயரத்தில் போரா என்றால் (Telugu: బొర్రా) தெலுங்கில் மூளை என்று பொருள். ஒரிய மொழியில் போரா என்றால் துளை என்று பொருள். குஹலு என்றால் குகை என்று பொருள். இந்தியாவின் பெரிய குகைகளில் ஒன்றாகக் கருதப்படும் போரா குகைகள் 80 மீட்டர் ஆழம் கொண்டதால், இந்தியாவின் ஆழம் மிகுந்த குகைகளாவும் கருதப்படுகிறது. இதன் நீளம் 200 மீ. ஆகும். இந்தக் குகைகள் 2 கி.மீ. தூர அளவுக்குப் பரந்து விரிந்துள்ளன. நுழைவாயிலோ 100 மீ. அகலமும், 75 மீ. உயரமும் கொண்டது. இக்குகையினுள்ளே ஒருவரால் 350 மீ. தூரத்திற்குப் பயணம் செய்ய (Trekking) இயலும்.

இந்த இயற்கைக் குகைக்கனிமப் படிவுகள் (Speleothems) நாட்டின் மிகப்பெரிய ஸ்டலக்டைட் (Stalactite) மற்றும் ஸ்டலக்மைட் (Stalagmite) படிவங்களால் ஆன குகைகள் ஆகும். “Speleothems” என்றால் குகைக்கனிமப் பதிவு என்று பொருள். Spēlaion என்ற கிரேக்க வார்த்தைக்கு “குகை’ என்று பொருள். “Thema” என்ற சொல்லுக்குப் படிமம் (Deposit) என்று பொருள். குகைக்கனிமப் படிவு (Speleothem) என்ற சொல்லை ஜி.டபிள்யூ. மூர் (G.W. Moore). (1952) என்ற அறிஞர் அறிமுகப்படுத்தினாராம்.  Continue reading

Posted in குகைகள், சுற்றுலா | Tagged , , , , , , , , | 8 பின்னூட்டங்கள்

அரக்கு பள்ளத்தாக்கு சுற்றுலா 2: சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் இடங்கள்

அரக்கு பள்ளத்தாக்கிற்கு நீங்கள் சாலை வழியாகச் சென்றாலும் சரி இரயில் மூலமாகச் சென்றாலும் சரி இந்த மலைவாழிடத்தில் பல சுற்றுலாத் தலங்களைக் காணலாம். போரா குகைகள் உங்கள்  அரக்கு பள்ளத்தாக்குப் பயணத்தை அசாதரணமான பயணமாக்குவது உறுதி. தடிபுடி நீர்த்தேக்கம் (Tadi Reservoir), டைடா ஜங்கிள் பெல்ஸ் இயற்கை முகாம் (Tyda Jungle Bells Nature Camp) (38.7 கி.மீ.),  சங்க்டா அருவி (Sangda Falls) (20 கி.மீ.), அனந்தகிரி குன்று காப்பித் தோட்டங்கள் (Ananthagiri Hills Coffee Plantations) (19 கி.மீ.),  கலிகொண்டா காட்சிக் கோணம் (Galikonda Viewpoint) (2௦.5 கி.மீ), சாபாறை  அருவி (Chaaparai Water Cascade) (12.5 கி.மீ.), பத்மபுரம் தாவரவியல் பூங்கா (Padmapuram Botanical Garden), பழங்குடியினர் அருங்காட்சியகம் (Tribal Museum) ஆகியவை  அரக்கு பள்ளத்தாக்கின் சிறந்த சுற்றுலாத்  தலங்களாகும்.

சாலை வழியில் செல்லும்போது கலிகொண்டா காட்சிக் கோணம் என்னும் இடத்தில் பசுமை கொஞ்சும் மலைச் சரிவையும், அரக்கு பள்ளத்தாக்கையும் கண்டு ரசிக்கலாம். சங்கர்மதா (Sankarmatha) என்ற சந்தை பழங்குடியின மக்களுக்காக நடத்தப்படுகிறது.  கடிக்கி அருவி (Katiki Waterfalls), அரக்கு அருவி (Araku Waterfalls), தடிமடா அருவி (Tadimada Waterfalls) போன்ற அருவிகளும் அரக்கு பள்ளத்தாக்கில் உள்ள கண்கவர் அருவிகளாகும். மூங்கில் கோழிக்கறி (Bamboo Chicken) இங்கு புகழ்பெற்ற சாலையோர உணவு (Street Food) ஆகும். இத்தொடரின்  இரண்டாம் பதிவு இதுவாகும்.   Continue reading

Posted in குகைகள், சுற்றுலா | Tagged , , , , , , , , | 4 பின்னூட்டங்கள்