நட்ஜ் மீ: உங்கள் ஸ்மார்ட் போனில் ஆங்கிலத் திறனை மேம்படுத்த உதவும் கூகுள் அன்ராய்டு செயலி

நட்ஜ்.மீ என்பது ஆன்ராய்டு மொபைல் செயலியாகும். இந்தச் செயலியைக் கூகுள் பிளே ஸ்டோரிலிருந்து பதிவிறக்கிக் கொள்ளலாம். ஆங்கிலத்தை எளிதாகவும், சுவையாகவும், திறம்படவும் கற்றுக் கொள்ளவும் மேம்படுத்தவும் இந்தச் செயலி உங்களுக்கு உதவுவது திண்ணம்.

நட்ஜ்.மீ | லேர்ன் ஸ்மார்ட்லி (Knudge.me | Learn Smartly! ) என்பது, ஆங்கிலச் சொல்லகராதி (English Vocabulary), இலக்கணம் (Grammar), சொல் விளையாட்டுகள் (Word Games) மூலம் ஆங்கிலத் திறனைச் சிறப்பாக மேம்படுத்திக் கொள்ள உதவும் ஆன்ராய்டு செயலி (Android Application) ஆகும். இதனைப் பயன்படுத்திக் கணிதத்திலும் திறம்படப் பயிற்சி பெற இயலும். கூகுள் பிளே ஸ்டோரில் (Google Playstore) இந்தச் செயலி கிடைக்கிறது.

கூகுள் பிளே ஸ்டோரிலிருந்து பதிவு செய்த வாடிக்கையாளர்கள் தங்களுக்குத் தேவையான மென்பொருள் செயலியைத் பதிவிறக்கிக் கொள்ளலாம். இதற்காகவே கூகுள் பிளே ஸ்டோர் சுமார் ஏழு இலட்சம் மென்பொருள் செயலிகளை (Software Applications) சேமித்துவைத்துள்ளது. ஆப்பிள் நிறுவனத்தின் ஆப்பிள் ஸ்டோரிலும் இதுபோலப் பல இலட்சம் செயலிகள் உள்ளன. பெரும்பாலான அன்ராய்டு செயலிகள் ஆன்ராய்டு இயக்கமுறைமையைப்  (Android Operating System) பயன்படுத்தியே இயங்குகின்றன.

நவீன வாழ்கையில் மொபைல் போன்கள் நமக்கு இன்றியமையாத துணையாகிவிட்டன. கையடக்கமான ஸ்மார்ட் போன் வகை மொபைல் போன்கள், ஒரு கம்ப்யூட்டர் செய்யத்தக்க அனைத்துப் பணிகளையும் திறம்படத் செய்து முடித்து விடுகின்றன. ஆங்கிலத் திறனை மேம்படுத்திக்கொள்ளும் செயலியும் நம் ஆங்கில மொழித் திறனை மேம்படுத்தும் நோக்கிலேயே வடிவமைக்கப்பட்டுள்ளது. ஆன்ராய்டு இயக்கமுறையைப் பயன்படுத்தி ஸ்மார்ட் போனில் இயங்கும் இந்த நட்ஜ்.மீ | லேர்ன் ஸ்மார்ட்லி செயலி ஆங்கிலத் திறனை மேம்படுத்திக் கொள்ள விழைவோருக்கான நல்வரவு எனலாம்.

மொபைல் கற்றல் தளமாகிய நட்ஜ்.மீ | லேர்ன் ஸ்மார்ட்லி செயலி ஆங்கிலம் கற்றுக்கொள்ளும் நடைமுறையினை (Process of English Learning) எளிமைப் படுத்தியுள்ளது. இன்ஃபோ கிராஃபிக்ஸ் (Infographics = தகவல் மற்றும் தரவுகளைக் காட்சியாகப் பிரதிநிதித்துவப்படுத்தும் வழிமுறைகளைக் கொண்ட துறை (a field that visually represent information or data),  கேமிஃபிகேஷன் (Gamification = விளையாட்டு இயக்கவியலை (Game Mechanics) ஒருங்கிணைக்கும் செயல்முறை ஆகும்), தனிப்பயனுடைய மாற்றியமைக்கதக்க கற்றல் முறை (Personalized Adaptive Learning) இடைவிட்டுக் கற்றல் முறை (Spaced Learning) போன்ற மாறுபட்ட கற்பித்தல் வழிமுறைகளைப் பயன்படுத்திகொண்டு இந்தச் செயலி செயல்படுவது இதன் சிறப்பு எனலாம்.

டேராடூனைச் சேர்ந்த ஜுனைத் அஹமது (Zunaid Ahmed of Dehradun), பாட்னாவைச் சேர்ந்த புஷ்ப் ராஜ் சௌரப் (Pushp Raj Saurabh of Patna) மற்றும் ஷரன்பூரைச் சேர்ந்த உதித் ஜெயின் (Udit Jain from Saharanpur) ஆகிய மூன்று நண்பர்களின் கூட்டு முயற்சியில் உருவான மென்பொருள் செயலி இதுவாகும். தனிப்பட்ட முறையில் தங்களுடைய ஆங்கிலம் கற்றல் திறனைப் பற்றியும் ஆங்கிலம் கற்றலில் உள்ள குறைகளைப் பற்றியும் இவர்கள் நன்கு உணர்ந்திருந்தார்கள். ஜுனைத் அஹமதுவிற்கு ஆங்கிலம் தெரிந்திருந்தாலும் அவரால் சரளமாக ஆங்கிலத்தில் பேச முடியவில்லை.

நாங்கள் எல்லோருமே இரண்டாம் அல்லது மூன்றாம் தரவரிசையிலிருந்த நகரங்களிலிருந்து வந்துள்ளோம். எங்களைப் போலவே பலரும் பெரிய நகரங்களை நோக்கிச் சென்றுள்ளனர். இவர்கள் எல்லோருமே ஆங்கிலத்தில் உரையாடலை மேற்கொள்ள முடியாத சூழலில் உள்ளது வருந்த தக்கது என்று ஜுனைத் அஹமது கூறினார்.

இத்தனைக்கும் ஜுனைத் அஹமதுவும்  உதித் செயினும் அஹமதாபாத் IIIT யிலும் புஷ்ப் ராஜ் சௌரப் தபார் பல்கலைக்கழகத்திலும் பயின்ற பொறியியல் பட்டதாரிகள் ஆவர். பொறியியல் பட்டப்படிப்பிற்குப் பின்னர் இவர்கள் தொடக்கக் காலங்களில் டைனி அவுல் (TinyOwl), ஃபிலிப் கார்ட் (Flipkart), கிராஃப்ட்ஸ் வில்லா (Craftsvilla), வால்மார்ட் ஆய்வகம் (Walmart Labs) போன்ற பெரிய நிறுவனங்களில் பணியாற்றியுள்ளனர். பின்னர் இவர்கள் பெங்களூரில் தொடங்கிய எட்டெக் நிறுவனம் (Edtech, No 154, Workshaala Spaces, 2nd floor Sector 5- HSR layout, Next to Devi Eye Hospital, Bengaluru, Karnataka 560102), நட்ஜ்.மீ | லேர்ன் ஸ்மார்ட்லி செயலியை உருவாக்கி உலகளாவிய எட்டெக் தளத்தில் (Global Edtech Platform) வெளியிட்டது.

இந்தச் செயலியை உருவாக்கியவர்கள், பயிற்சியினைச் சிறுசிறு பாடங்களாகப் பிரித்துக் (bite sized lessons) கட்டமைத்துள்ளது இங்கு குறிப்பிடத்தக்கது. இந்தக் கட்டமைப்பு கற்போரின் முழுக்கவனத்தையும் ஈர்க்க வல்லது. ஒருவரின் ஆங்கில இலக்கணப் புலமையை மேம்படுத்த வல்ல விளையாட்டு (Games for learning Grammar), சொல்லகராதி உருவாக்கம் (Vocabulary Building), ஓர் ஒலி பல்பொருள் பயன்பாடு (Homonym) எ.கா.: Pear (Fruit) -Pair (Couple) மற்றும் ஒப்பெழுத்து (Homograph) ஒரே சொல் பல்வேறு பொருள்களை அளிக்கக் கூடியது. எ.கா. Fair (Public Event) – Fair (Honest) – Fair (Pale Complexion); Cricket (Game) – Cricket (Insect), போன்ற சிறப்பியல்புகள் இச்செயலியில் இடம்பெற்றுள்ளது.

நட்ஜ்.மீ | லேர்ன் ஸ்மார்ட்லி செயலி எவ்வாறு கட்டமைக்கப்பட்டுள்ளது? கீழ்காணும் பத்திகள் இது பற்றி விவரிக்கின்றன.

1. சொல்லகராதி உருவாக்கி – புகுமுக நிலை (Vocabulary Builder – Easy):

எப்படி ஒரு சிறந்த சொற்களஞ்சியம் உருவாக்குவது என்று கற்றுக்கொள்வது ஒருவருடைய கருத்தைச் சிறந்த முறையில் ஆங்கிலத்தில் வெளியிடும் ஆற்றலைத் தரவல்லது. இதன் மூலம் ஒருவரது ஆங்கிலப் பேச்சு மற்றும் எழுத்துத் திறன்கள் மேம்படும். நட்ஜ்.மீ | லேர்ன் ஸ்மார்ட்லி செயலி சொல்லகராதி உருவாக்கத்திற்கான சிறந்த செயலியாக ஆன்ராய்டு தளத்தில் செயலாற்ற வல்லது. இதில் மேம்பட்ட சொல்லகராதி உருவாக்கத்திற்கான அனைத்துச் சிறப்பியல்புகளும் வடிவமைக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் எளிதாகவும், அறிவியல்பூர்வமாகவும், செயல்பாட்டிற்குகந்த சொல்லகராதியை உருவாக்க முடியும்.

2. சொல்லகராதி உருவாக்கி – இடைநிலை (Vocabulary Builder – Intermediate):

நட்ஜ்.மீ | லேர்ன் ஸ்மார்ட்லி செயலியின் இடைநிலை சொல்லகராதி உருவாக்கியில் இணைக்கப்பட்டுள்ள கற்றுக்கொண்டே ஆக வேண்டும் என்று கருதத்தக்க சொற்களின் பட்டியல் (“must-learn Word-list”) ஒருவரின் சொல்லகராதிப் புலமையை மிகப்பெரிய அளவில் மேம்படுத்தும். இந்தச் சொற்களை ஒருவர் சிறந்த முறையில் கற்றுத் தேர்ந்தால் அவருடைய ஆங்கில மொழியறிவு மேம்படும். CAT, GRE, GMAT, IELTS, TOEFL போன்ற நுழைவுத் தேர்வுகளில் நல்ல மதிப்பெண் பெற்றுத் தேர்ச்சியடையவும் உதவும்.

3. சொல்லகராதி உருவாக்கி – சிறப்பு நிலை (Vocabulary Builder – Advanced):

நட்ஜ்.மீ | லேர்ன் ஸ்மார்ட்லி செயலியின் சிறப்பு நிலை சொல்லகராதி உருவாக்கியில் இணைக்கப்பட்டுள்ள மேம்பட்ட சொற்பட்டியல் CAT, IELTS, TOEFL, GRE, GMAT, MAT, XAT, NMAT, SNAP, SAT, SSC, CGL, Bank PO, CET, GATE, IAS, IBPS, IES, UPSC, JKSSB, PTE, DU JAT, TOEIC, NIFT, JBPS, CFE போன்ற நுழைவுத் தேர்வுகளில் நல்ல மதிப்பெண்களுடன் தேர்ச்சியடைய உதவும்.

4. ஆங்கில மரபுத் தொடர்கள் (English Idioms):

நட்ஜ்.மீ | லேர்ன் ஸ்மார்ட்லி செயலியின் ஆங்கில மரபுத் தொடர்கள் மொழி பயிற்சியில் (English Idiom Course) அதிக எண்ணிக்கையில் பரிந்துரைக்கப்பட்டுள்ள பொதுவான ஆங்கில மரபுத் தொடர்கள் (common English Idioms) சரியான சூழலில் சரியான மரபு மொழியைப் பயன்படுத்த அறிவுறுத்தும்.

5. சொற்றொடர் வினைச்சொற்கள் (Phrasal Verbs):

விரிவான விளக்கம் கொண்ட நட்ஜ்.மீ | லேர்ன் ஸ்மார்ட்லி செயலியின் சொற்றொடர் வினைச்சொற்கள் பயிற்சி வடிமைப்பில் அதிகப் பயன்பாட்டில் உள்ள ஆங்கிலச் சொற்றொடர் வினைச் சொற்கள் இடம்பெற்றுள்ளன. பயிற்சி பெறுவோர் சொற்றொடர் வினைச்சொற்களை வாக்கியத்தில் அமைத்துப் பயன்படுத்தும் வழிமுறை அறிவுறுத்தப்படுகிறது. இந்தச் செயலியின் பயிற்சி CAT, XAT, NMAT, GRE ஆகிய நுழைவுத் தேர்வுகளில் சிறப்பான முறையில் தேர்ச்சி யடையும்படியாக ஒருவரின் மொழித் திறன் மேம்படும்.

6. பொதுவாகக் குழப்பும் சொற்கள் (Commonly Confused Words) :

பொதுவான குழப்பும் சொற்களுடன் கூடிய சிக்கலான பயிற்சிமுறையில் இருநூற்றுக்கும் மேலான பல ஒலி ஒரு சொற்களையும் (Homonym), ஒப்பொலிச் சொற்களையும் (Homophone) மற்றும் பல குழப்பும் சொற்களையும் ஒருவர் கற்றுக்கொள்ள முடியும்.

சிறு பிரிவு – புதிய பயிற்சிகள் (Minis Section – New Courses)

நட்ஜ்.மீ | லேர்ன் ஸ்மார்ட்லி செயலி புதிய ஊடாடும் பயிற்சிகளை  (interactive courses) ஆங்கிலம் மற்றும் கணிதம் ஆகிய இரண்டு தலைப்புகளில் வழங்குகிறது. ஆங்கில இலக்கணம், பழமொழி (Proverbs),   முன்னிடைச்சொல் (Prepositions), நிறுத்தற்குறிகள் (punctuation marks), இணையிடைச்சொல் (conjunctions) போன்றவற்றில் இப்பயிற்சி கவனம் செலுத்துகிறது. இப்பயிற்சி IELTS, GRE போன்ற நுழைவுத் தேர்வுகளை மேற்கொண்டு சிறந்த முறையில் தேர்ச்சியடைய உதவும். கணிதக் குறிப்புகள் (Mathematics Tips), யுக்திகள் (Tricks), விகிதம் மற்றும் விகித சமம் (ratio and proportion), விழுக்காடுகள் (percentages), நிரலளவுகள் (averages), விருத்திகள் (progressions) ஆகிய கணிதச் சிறப்பியல்புகளும் உங்கள் கணிதத் திறன்களை  மேம்படுத்தும்.

விளையாட்டுகள் (Games)

  1. வார்த்தைகள் சரிபார்ப்பி (Words Checker): வேடிக்கை நிறைந்த இந்தச் சொல்லகராதி விளையாட்டை விளையாடுவதன் மூலம் ஒருவரின் வாசிப்புத் திறனை மேம்படுத்த உதவும்.
  2. இடைவெளியைத் தொடருதல் (Space Pursuit): பொதுவாகக் குழப்பும் ஆங்கிலச் சொற்களைப் புரிந்து கொள்வதன் மூலம் ஒருவரின் எழுத்துத் திறன் மேம்படும்.
  3. உயரப் பறத்தல் (Fly High): ஒரு பொருட்பன்மொழிகளைப் (Synonym) புரிந்துகொள்வதன் மூலம் ஒருவரின் சொல்லகராதி உருவாக்கம் மேம்படும்.
  4. வாசகர் தொகுப்பு (Reader’s Digest):  வேகம், துல்லியம் மற்றும் புரிந்துகொள்ளுதல் போன்றவற்றில் கவனம் செலுத்துவதன் மூலம் ஒருவரின் படிக்கும் திறனை மேம்படுத்திக் கொள்ளலாம்.
  5. எதிரொலி (Echo):  ஆங்கில சொல் தேர்வு விளையாட்டில் (English dictation game) சொற்களை சரியான எழுத்துக்கூட்டுதல்   (accurately spelling words) மூலம் பேச்சு மற்றும் எழுத்துத் திறனை மேம்படுத்திக் கொள்ளலாம்..
  6. ஜெல்லி ஃபிஸ்( Jelly Fizz): சொற்றொடர் வினைச் சொற்களைச் (phrasal verbs) சுவைபடப் புரிந்துகொள்வதன் மூலம் பேச்சுத் திறனை வளர்த்துக் கொள்ளலாம்..
  7. பண்டாவின் அடிச்சுவடு (Panda’s Trail): கவனமாக வடிவமைக்கப்பட்ட இந்த விளையாட்டின் மூலம் ஒருவரின் ஆங்கில இலக்கணத் திறனைச் செம்மைப் படுத்தும்.
  8. கடற்பயணம் (Sea Voyage): ஒருங்கிணைந்த விளையாட்டை விளையாடுவதன் மூலம் ஒருவரின் படிக்கும் வேகத்திற்கும் புரிந்து கொள்ளும் திறனுக்கும் சவால் விடலாம்.
  9. சொற்புதிர் (Word Maze): இந்த சொல்லகராதி விளையாட்டை விளையாடுவதன் மூலம் சொல்வள அறிவுக்கும் (vocabulary knowledge) சடுதியில் சிந்திக்கும் ஆற்றலுக்கும் (quick-thinking ability) சவால் விடலாம்.
  10. கவனமாக எழுத்துக்கூட்டு (Spell Safe): குழப்பமான எழுத்துக்கூட்டல் (confusing spellings) சொற்களை சரியாக எழுத்துக்கூட்டக் (spell words) கற்றுக் கொள்ளலாம்.
  11. முனைவு (Polarity): சொற்களுள் (words) பொதிந்துள்ள நேர்மறை மற்றும் எதிர்மறைப் பொருளைக் (positive and negative shades of meaning) கற்றுக்கொள்ளலாம்.
  12. வார்த்தைகளின் பந்தயம் (Words Race): படிக்கும் திறன் மற்றும் துல்லியம் ஆகிய இரண்டையும் மேம்படுத்திக் கொள்ளலாம்.

நட்ஜ்.மீ | லேர்ன் ஸ்மார்ட்லி செயலியை இலவசமாகப் பதிவிறக்குக உங்களுடைய ஆங்கிலத் திறனையும் மேம்படுதிக் கொள்வதுடன் கணிதத்திலும் போதிய பயிற்சி மேற்கொள்ளுங்கள். உங்களுடைய மொபைலைப் பயன்படுத்தி எளிதாகக் கற்றுக்கொள்ளுங்கள்.

இந்தச் செயலிக்கு கூகுள் பிளே ஸ்டோரில் (Google PlayStore) ஐந்து இலட்சத்திற்கும் மேலான பதிவுபெற்ற பயனர்கள் (Registered Users) உள்ளனர். ஐம்பது இலட்சத்திற்கும் மேலான சிறுசிறு பாடங்கள் (bite-sized lessons) பயன்படுத்தப்பட்டுள்ளன. நான்கு இலட்சத்திற்கும் மேலான விளையாட்டுக்கள் இந்தச் செயலியில் விளையாடப்பட்டுள்ளன.

About முத்துசாமி இரா

புதுக்கோட்டை மாவட்டம் இராமச்சந்திரபுரத்தைப் பிறப்பிடமாகவும், சென்னை சைதாப்பேட்டையை வசிப்பிடமாகவும் கொண்ட இரா.முத்துசாமி, காரைக்குடி அழகப்பா கல்லூரியிலும், சென்னைப் பல்கலைக்கழகத்திலும் பயின்றவர். இவர் 1975ஆம் ஆண்டு தொடங்கி சி.வி.ஆர்.டி.இ (டி.ஆர்.டி.ஓ) ஆவடி, சென்னையில் பணியாற்றி ஒய்வு பெற்றவர். தமிழ் இலக்கியத்திலும், தமிழக வரலாற்றிலும் ஈடுபாடு கொண்டவர்.
This entry was posted in கணிதம், கற்பிக்கும் கலை, மொழி and tagged , , , , , , , . Bookmark the permalink.

4 Responses to நட்ஜ் மீ: உங்கள் ஸ்மார்ட் போனில் ஆங்கிலத் திறனை மேம்படுத்த உதவும் கூகுள் அன்ராய்டு செயலி

  1. கரந்தை ஜெயக்குமார் சொல்கிறார்:

    பயனுள்ள செயலியைப் பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி ஐயா

    Like

  2. Dr B Jambulingam சொல்கிறார்:

    அனாவசியமாக அலைபேசியில் நேரத்தைக் கழிப்போர் இச்செயலியை பதிவிறக்கம் செய்து பலவற்றைக் கற்றுக்கொள்ளலாம். மாணவர்களுக்கு மட்டுமன்றி அனைவருக்கும் பயனுள்ள செயலியை அறிமுகப்படுத்தியமைக்கு நன்றி.

    Like

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.