வெளிநாடுகளில் வாழும் தமிழர்களின் குழந்தைகள் கைபேசியைப் (செல்போன்) பயன்படுத்தி எளிய முறையில் தமிழ் கற்க வேண்டுமா? கூகுள் பிளே ஸ்டோரில் (Google Play Store) உள்ள அரும்பு லைட் (Arumbu Lite) பதிப்பு 1.00 என்ற செயலி உங்களுக்கு உதவும். தஞ்சாவூர் தமிழ் பல்கலைக் கழகமும் ஏசிஇ (எஸ்) பிரைவேட் லிமிடெட் நிறுவனமும் இணைந்து அரும்பு லைட் என்ற செயலியை 2017 ஆம் ஆண்டு அறிமுகம் செய்துள்ளனர். இந்தச் செயலியைப் பயன்படுத்திப் படிப்படியாகத் தமிழ் கற்பது என்பது விளையாட்டுத்தனமான செயலாகும். இந்தச் செயலியைத் தரவிறக்கி நிறுவிக்கொள்வதன் மூலம் உங்கள் குழந்தைகள், உயிர் எழுத்துக்கள், மெய் எழுத்துக்கள், உயிர்மெய் எழுத்துக்களை விளையாட்டாகவும் ஈர்ப்புடனும் கற்றுக்கொள்வார்கள்.
வெளிநாடுகளில் வாழும் தமிழர்களின் குழந்தைகள் எளிய முறையில் தமிழ் கற்க வேண்டுமா? கூகுள் பிளே ஸ்டோரில் (Google Play Store) உள்ள அரும்பு லைட் (Arumbu Lite) என்ற செயலி உங்களுக்கு உதவும். தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகம் இந்தச் செயலியை கடந்த 13 ஏப்ரல் 2017 ஆம் தேதியன்று வடிவமைத்து வெளியிட்டது.
உலக நாடுகளில் செயல்பட்டுவரும் தமிழ் அமைப்புகள், தமிழ்க் குழந்தைகள் கைபேசியைப் (செல்போன்) பயன்படுத்தி எளிமையான முறையில் தமிழ் கற்பதற்காக ஒரு செயலியை உருவாக்கித் தருமாறு தஞ்சைத் தனிழ் பல்கலைக் கழகத்தை வலியுறுத்தி வந்தனர். இந்த வேண்டுகோளை ஏற்று அரும்பு லைட் என்ற செயலியை இப்பல்கலைக்கழகம் வடிவமைத்துள்ளது, இந்தச் செயலியைப் பயன்படுத்திப் படிப்படியாகத் தமிழ் கற்பது என்பது விளையாட்டுத்தனமான செயல் ஆகும். இந்தச் செயலியில், நடைமுறையில் தமிழ் பயிற்றுவிக்கும் முறையில் உள்ள குறைபாடுகள் களையப்பட்டுள்ளன. இலாபத்திற்கு இடம்தராமல் இலவசமாகத் தமிழ் பயிற்றுவிக்கும் நோக்கிலேயே இச்செயலி உருவாக்கப்பட்டுள்ளது.
அரும்பு’ செயலியை ஏசிஇ டெக்னாலஜிஸ் லிமிட்டெட் (ACE NURA (S) PTE LTD), கோயம்புத்தூர் (முதன்மை அலுவலகம், சிங்கப்பூர்) என்ற மென்பொருள் நிறுவனமும் தஞ்சைத் தமிழ் பல்கலைக் கழகமும் இணைந்து வடிவமைத்துள்ளனர். ‘அண்மைப் பதிப்பு (Latest version) 1.00. இதனை நிறுவ உங்கள் மொபைலின் நினைவகத்தில் 33 மெகாபைட் அளவில் நினைவக இடம் தேவைப்படும். மொபைலில் அன்ட்ராய்டு 4.1 இயக்க முறைமை மென்பொருள் நிறுவியிருக்கவேண்டும். செயலி வெளியிட்ட தேதி 26 மே 2015. இது இலவசக் கல்வி வழங்கல் வகையைச் சேர்ந்த செயலி ஆகும். இந்தச் செயலியை இதுவரை 10000 க்கும் மேற்பட்டோர் தரவிறக்கம் செய்துள்ளனர். இவர்களுடைய தமிழர் அல்லாதவருக்குத் தமிழ் (Tamil for Non-Tamils (TNT) என்ற செயலி தமிழ் கற்க விழைவோரிட்ம் பெரும் புகழ் பெற்றுள்ளது.
இந்தச் செயலியைத் தரவிறக்கி நிறுவிக்கொள்வதன் மூலம் குழந்தைகள், உயிர் எழுத்துக்கள், மெய் எழுத்துக்கள் மற்றும் உயிர்மெய் எழுத்துக்களை விளையாட்டாகவும் ஈர்ப்புடனும் கற்றுக்கொள்வார்கள். ஒலிப்பு முறையின் (phonetics) மூலமும் எழுத்துப் பயிற்சி மூலமும்.குழந்தைகள் தமிழ் கற்க இந்தச் செயலி பெரிதும் உதவுகிறது. ஒவ்வொரு எழுத்துக்கும் உரிய அடிப்படைச் சொற்களை ஒலிக்குறிப்புடன் இந்த அரும்பு செயலி அறிமுகம் செய்கிறது. ஆனால் சில எழுத்துக்கள் மட்டுமே இதற்காக எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளன. விளையாட்டு மூலமாகவும் குழந்தைகள் தமிழ் எழுத்துக்களைக் கற்றுக்கொள்ளலாம்.
விண்டோஸ் பி.சி. வகைக் கணனிக்கு இணக்கமான அரும்பு செயலியையும் இந்நிறுவனமே வெளியிட்டுள்ளது.
தமிழ்ப் பல்கலைக்கழகம் சார்பில் உருவாக்கப்பட்ட இந்தச் செயலியை, தேசிய மென்பொருள் மற்றும் சேவை அமைப்புகளின் கூட்டமைப்பின் (நாஸ்காம்) முதுநிலை இயக்குநர் புருஷோத்தமன் தொடங்கிவைத்தார். விழாவுக்குத் தலைமை வகித்துத் தமிழ்ப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் க.பாஸ்கரன் அவர்கள் ஆற்றிய உரையின் காணொளி:
பயனுள்ள செயலியை அறிமுகப்படுத்தியமைக்கு நன்றி ஐயா
LikeLike
கருத்திற்கு நன்றி ஐயா..
LikeLike
பெருமைக்குறிய விசயம் நன்றி நண்பரே…
LikeLike
வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி ஐயா
LikeLike