Monthly Archives: ஏப்ரல் 2019

இரண்டு கைகளையும் பயன்படுத்தி ஒரே நேரத்தில் எழுதும் திறன் (Ambidextrous Writing Skills): அசத்தும் மத்தியப்பிரதேசத்துப் பள்ளி மாணவர்கள்.

நம்மில் பெரும்பாலோனோர் வலது கையைப் பயன்படுத்தி எழுதி வருகிறோம். இது மிகவும் பொதுவானது தானே. இதில் என்ன புதுமை இருக்கிறது? என்றுதானே கேட்க வருகிறீர்கள். உலகின் மொத்த மக்கள் தொகையில், 13 சதவீதம் பேர், இடது கை பழக்கம் உடையவர்களாக இருக்கிறார்கள் என்று ஐ.நா., அறிக்கை தெரிவிக்கிறது.  இவர்கள் இடது கையை மட்டும் பயன்படுத்தி எழுதி வருகிறார்கள். இடது கைப்பழக்கம் உள்ளவர்களுடைய மூளை விரைவாகச் செயல்படுமாம். ஐ.க்யூ லெவல் 140 க்கும் மேலே உள்ளவர்கள் எல்லோரும் இடது கைப்பழக்கம் உள்ளவர்கள்தான் என்று ஒரு ஆய்வு பதிவு செய்துள்ளது.  

மத்திய பிரதேச மாநிலம், சிங்க்ருளி மாவட்டம், புதேல என்னும் கிராமத்தில் உள்ள வீணாவாதினி பள்ளியில் பயிலும் மாணவ மாணவியர் அனைவரும் இரண்டு கைகளையும் பயன்படுத்தி ஒரே நேரத்தில் எழுதுகிறார்கள் என்பது தான் வழக்கத்துக்கு மாறுபட்ட வினோதமான வியப்பான செய்தி. இந்தக் குழந்தைகளைப் பற்றி இந்தப் பதிவில் சொல்லப்போகிறேன். கொஞ்சம் கேட்டுவிட்டு உங்கள் கருத்தைப் பின்னூட்டத்தில் கட்டாயம் பதிவு செய்யுங்கள்.
Continue reading

Posted in அறிவுத்திறன், கற்பிக்கும் கலை, கல்வி, குழந்தைகள், மூளை வளர்ச்சி | Tagged , , , , , , , , , , | 4 பின்னூட்டங்கள்

சிவசமுத்திரம் நீர்வீழ்ச்சி, பீமேஸ்வரி சாகச விளையாட்டு மற்றும் இயற்கை முகாம்: கர்நாடகாவில் காவிரிக்கரை சுற்றுலா

காவிரியை அதன் கரையோரமாகவே சென்று முழுவதும் பார்த்துவிட வேண்டும் என்ற அவாவில் உந்தப்பட்டு, தி ஜானகிராமன், சிட்டி (பெ.கோ. சுந்தரராஜன்) ஆகிய இரண்டு எழுத்தாளர்கள் தலைக்காவிரி நோக்கிக் காரில் பயணம் மேற்கொண்டனர். இவர்களுடைய பயண அனுபவங்களைக் கட்டுரை நூலாகத் தொகுத்து “நடந்தாய்; வாழி, காவேரி!” என்ற தலைப்பில் காலச்சுவடு பதிப்பகம் வெளியிட்டுள்ளது. இந்த நூலை வாசித்த பின்னர் எப்படியாவது இந்த சிவசமுத்திரம் நீர் வீழ்ச்சியைப் பார்த்துவிடவேண்டும் என்ற வேட்கையில் ஒருநாள் பயணமாகச் சிவசமுத்திரம் நீர்வீழ்ச்சி, பீமேஸ்வரி காவிரி வனவிலங்கு சரணாலயம் மற்றும் மீன்பிடி முகாம் ஆகிய சுற்றுலாத் தலங்களுக்குச் சென்று வந்தோம். இந்தப் பயணம் பற்றிய பதிவு இதுவாகும். Continue reading

Posted in சுற்றுலா | Tagged , , , , , | 4 பின்னூட்டங்கள்

குழந்தைகளுக்கு மகாபாரதக் கதைகள் 3: யயாதி

தேவயானியின் தோழி சர்மிஷ்டை. இருவரும் சேடிகள் புடைசூழ நீராடச் செல்கிறார்கள். ஒருவர் உடையை ஒருவர் மாற்றி அணிந்து கொண்டதால் சண்டை போட்டுக் கொள்கிறார்கள். சண்டை முற்றியதால், தேவயானியை சர்மிஷ்டை ஒரு பாழுங்கிணற்றில் தள்ளி விட்டாள். அங்கு வேட்டைக்கு வந்த யயாதி மன்னன் தேவயானியைக் காப்பாற்றினான். பின்னாளில் யயாதி தேவயானியைத் திருமணம் செய்து கொண்டான். சர்மிஷ்டை தன் சேடிகள் புடைசூழ யயாதியின் நாட்டிற்குச் சென்று தேவயானிக்குச் சேவை செய்து வந்தாள். யயாதி – தேவயானி இணைக்கு இரண்டு ஆண் குழந்தைகள் பிறந்தன. யயாதி சர்மிஷ்டையையும் இரகசியமாகத் திருமணம் செய்துகொண்டான். இவர்களுக்கு மூன்று குழந்தைகள் பிறந்தனர்.. தேவயானி இவர்களுடைய இரகசியத் திருமணம் பற்றித் தெரிந்து மிகவும் கோபம் அடைந்தாள். தன் தந்தை சுக்கிராச்சாரியாரிடம் முறையிட்டாள். சுக்கிராச்சாரியாரும் யயாதி தன் இளமையை இழந்து தொண்டுக் கிழவனாக ஆகும்படி சாபமிட்டார் யயாதியின் வேண்டுகோளை ஏற்று, சுக்கிராச்சாரியார் தான் இட்ட சாபத்திற்குப் பரிகாரமும் சொன்னார். யயாதி தான் இழந்த வாலிபத்தை மீண்டும் பெற்றாரா? இழந்த அரச பதவியும், இல்லற சுகமும் யாதியை எப்படி மாற்றின. இந்தக் கதையின் முடிவை அறிந்து கொள்ள இந்தப் பதிவை ஆழ்ந்து படியுங்கள். கருத்துக்களைப் பின்னூட்டத்தில் பதிவு செய்யுங்கள். Continue reading

Posted in குழந்தைகள், சிறுவர் கதைகள் | Tagged , , , , , , | 9 பின்னூட்டங்கள்