பெர்முடா முக்கோணம் (The Bermuda Triangle) அட்லாண்டிக் கடலில் அமைந்துள்ள முக்கோண கடல் பகுதி ஆகும். சாத்தானின் முக்கோணம் (Devil’s Triangle). என்ற பெயரும் இந்த முக்கோணக் கடல் பகுதிக்கு உள்ளது. அட்லாண்டிக் கடலில் அமைந்துள்ள இந்த முக்கோணக் கடல் பகுதியின் எல்லைகளைத் துல்லியமாக வரையறுக்க இயலவில்லை. ஒரு முனையில் அமெரிக்காவின் ஃபுளோரிடா நீரிணை (Florida Strait), மற்றொரு முனையில் பஹாமாஸ் (Bahamas), மூன்றாவது முனையில் அட்லான்டிக் கடல். (Atlantic Ocean) இந்த மூன்று முனைகளையும் இணைத்துத் தோராயமாக வரையப்பட்ட கற்பனை முக்கோணத்தையே பெர்முடா முக்கோணம் என்று பெயர் சூட்டினர். இந்த முக்கோணக் கடல் பகுதிக்குள் மியாமி, சான் ஜூவான் (போர்ட்டோ ரிக்கோ) மற்றும் மத்திய அட்லாண்டிக் கடல் தீவான பெர்முடா ஆகிய பகுதிகள் அடங்கியுள்ளன.
இந்த மர்ம முக்கோணம் பற்றி எங்கேயோ படித்த ஞாபகம் வருகிறதா? இந்த முக்கோண கடல் பகுதியின் வழியாகக் கடந்து செல்ல முயன்ற பல கப்பல்கள் காணாமல் போயிற்று. இதே முக்கோண கடல் பகுதிக்கு மேல் பறந்து சென்ற விமானங்களின் கதி என்னவாயிற்று என்றே தெரியவில்லை. .இந்தக் கப்பல்கள் அல்லது விமானங்களிளின் உடைந்த பாகங்களோ அல்லது பயணித்த பயணிகளின் உடல்களோ கூடக் கிடைக்கவில்லை என்பது வருத்தமான செய்தி. இப்பகுதியில் நிகழ்ந்த மர்மங்களுக்கு இது நாள் வரை விடை தெரியவில்லை. இந்த மர்ம முடிச்சை யாராலும் அவிழ்க்க முடியவில்லை. எவ்விதமான அறிவியல் விதியையும் கொண்டு இந்த மர்மங்களை விளக்க முடியவில்லை. இயந்திரக் கோளாறுகள் அல்லது மனிதன் செய்த தவறுகள் போன்ற எந்தக் காரணங்களையும் சுட்டிக்காட்டி எந்த விஞ்ஞானியாலும் இந்த மர்மத்திற்கு விடை அளிக்க இயலவில்லை. அமானுஷ்யங்கள் நிறைந்த இந்த முக்கோணக் கடல் பகுதியில் அறிவியல் விதிகள் அனைத்தும் செயல்படவில்லை என்பதே உண்மை.. என்ன நடந்தது என்று சற்று விரிவாகப் பார்ப்போமா?
மேரி செலஸ்டி என்ற கப்பல் 1872 ஆம் ஆண்டு காணாமல் போயிற்று, ‘யு.எஸ்.எஸ் சைக்ளோப்ஸ்’ என்ற மற்றொரு கப்பலும் 1918-ம் ஆண்டு காணாமல் போனது. இதில் பயணித்த நூற்றுக்கும் மேற்பட்ட பயணிகளையும் காணவில்லை. அதுபற்றிப் பெரிய அளவிலான தேடுதல் மேற்கொள்ளப்படவில்லை.
1945-ம் ஆண்டுடிசம்பர் 5 ஆம் தேதி அன்று ஃப்ளீட்-19 என்ற அமெரிக்கக் கடற்படையின் குண்டு வீசும் ஐந்து விமானங்கள் ஒரு பயிற்சி நடவடிக்கையின்போது காணாமல் போயிற்று. இதில் 14 நபர்கள் பயணம் செய்துள்ளனர். இந்த 5 விமானங்களையும், 14 பேரையும் தேடுவதற்காக, 13 பேருடன் அனுப்பப்பட்ட மற்றொரு விமானமும் மாயமாக மறைந்து போயிற்று. அமெரிக்கா பெர்மூடா கடற்பகுதியில் மிகப்பெரிய தேடுதல் வேட்டை மேற்கொள்ளப் பெரும் அளவில் முயற்சி மேற்கொண்டது. அறுபது விமானங்களுடன் அமெரிக்கக் கடற்படையின் சாலமன்ஸ் என்ற விமானம் தாங்கிக் கப்பல், நான்கு போர்க்கப்பல்கள் (Destroyer), எட்டு எல்லைப்புற ரோந்துக் கப்பல்கள், பல நீர்மூழ்கிக் கப்பல்கள், தனியாருக்குச் சொந்தமான பல நூறு சிறு கப்பல்கள், அமெரிக்க விமானப் படையைச் சேர்ந்த 240 விமானங்கள் என்று பெரிய அளவில் தேடுதல் வேட்டை மேற்கொள்ளப்பட்டது. பஹாமா தீவுகள் மற்றும் மேற்கிந்தியத் தீவுகளின் சார்பாகப் பிரிட்டனின் ராயல் விமானப் படையின் விமானங்களும் இந்தத் தேடுதல் வேட்டையில் பங்கேற்றன. இந்தத் தேடுதல் வேட்டை 2 லட்சத்து 80ஆயிரம் சதுர மைல்கள் கொண்ட கடற்பரப்பளவுக்குள் மேற்கொள்ளப்பட்டது. ஒவ்வொரு மைலும் தேடுதலுக்கு உட்படுத்தப்பட்டது.
மொத்தம் ஆறு விமானங்களும், அதில் பயணித்த 27 நபர்களும் மாயமாக மறைந்து போன இடம் இன்றளவும் தெரிவில்லை. மாபெரும் தேடுதல் வேட்டைக்குப் பின்னர் அமெரிக்க அரசாங்கம் விமானம் காணமல் போனது பற்றி ஆராய வல்லுனர்கள் பங்குபெற்ற ஓர் உயர்மட்டக் குழுவினை அமைத்தது. இந்தக் குழு விமானங்கள் காணமல் போனதற்கான பல்வேறு சாத்தியக்கூறுகளைத் தங்கள் அறிக்கையில் கொடுத்தார்கள்.
பெர்முடா முக்கோணக் கடற்பகுதியில் விமானகளும் பயணிகளும் காணமல் போனது பற்றிய செய்தியை முதன்முதலாக ஈ.வி.டபிள்யூ. ஜோன்ஸ் என்பவர் செப்டம்பர் 16,1950 அன்று வெளியிட்டார். இதன் பிறகுதான் இந்தப் பெர்மூடா முக்கோணத்தின் மீது உலகம் தன் பார்வையைப் பதித்தது. ஜார்ஜ் எக்ஸ். சாண்ட் என்பவர் ‘நமது கொல்லைப் புறத்தில் கடல் மர்மம்’ என்ற சிறு கட்டுரையை ஃபேட் என்ற இதழில் வெளியிட்டார். பெர்மூடா மர்மங்கள் பற்றிப் பலரும் தங்கள் கட்டுரைகள் மூலம் விவாதித்தார்கள். மர்மம், அமானுஷ்யம் ஆகிய தலைப்புகளில் பெர்மூடா முக்கோணம் பற்றி விரிவாக விளக்கம் சொன்னார்கள்..
1949 ஆம் ஆண்டில் இந்தப் பகுதியில் பறந்த ஜமைக்கா நாட்டுக்குச் சொந்தமான பயணிகள் விமானம் 39 பயணிகளுடன் மாயமாக மறைந்து போனது.
இதனாலேயே இந்த முக்கோணக் கடல்பகுதி முக்கியத்துவம் பெற்று வந்துள்ளது. பெர்மூடாவின் விளங்காத மர்மம் பற்றி எழுதப்பட்ட பல புத்தககங்களும்,.படமாக்கப்பட்ட சில திரைப்படங்களும் கோடிக்கணக்கான பணத்தை ஈட்டிக் கொடுத்துள்ளன..
குறிப்புநூற்பட்டி
பெர்முடா முக்கோணம் விக்கிபீடியா
அருமையான பதிவு,பெர்முடா முக்கோணம் குறித்து நான் சமீப காலத்தில்தான் புரிந்து கொண்டேன்.
LikeLike
நன்றி
LikeLike
அருமையான பதிவு….. வரலாற்று அதிசயங்களில் ஒன்று. எப்போது படித்தாலும் அலுக்காது. என்றும் வியப்பினைத் தரும்.
LikeLike
உண்மை… தங்கள் கருத்திற்கு மிக்க நன்றி..
LikeLike