ஆயிஷா நடராஜன்: பலராலும் நன்கு அறியப்பட்ட குழந்தைகள் எழுத்தாளர்

ஆயிஷா இரா.நடராஜன் என்னும் இரா.நடாராஜன் புகழ் பெற்ற குழந்தைகள் எழுத்தாளர் ஆவார். இவருடைய குழந்தைகளுக்கான சிறு கதைகள் உலகளாவிய வாசகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றன. தமிழ் மொழியில் இவரால் எழுதப்பட்ட பல சிறுகதைகள் ஆங்கிலம், ஃபிரெஞ்ச், இந்தி, தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. இவர் எழுதிய சில கதைகள் உலகச் சிறுகதைத் தொகுப்புகளில் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இவருடைய நான்கு கதைகள் குறும்படமாக எடுக்கப்பட்டு பன்னாட்டுத் திரைப்பட விழாக்களில் விருதுகளும் பெற்றுள்ளன. 

இவர் எழுதிய ஆயிஷா எனும் குறுநாவல் இவருக்கு ஆயிஷா இரா.நடராஜன் என்ற பெயரைப் பெற்றுத்தந்துள்ளது. ஆயிஷா என்ற பள்ளிக்கூடச் சிறுமியின் துயரக்கதை

கதைச்சுருக்கம்:

அறிவியல் ஆர்வம் மிகுந்த ஆயிஷா என்ற குழந்தையைப் பற்றிய கதை இது. இக்கதை ஆயிஷாவின் அறிவியல் ஆசிரியையின் பார்வையில் சொல்லப்பட்டுள்ளது. தன் ஆசிரியர்களிடம் கேள்வி கேட்பதை ஆயிஷா வழக்கமாக்கிக் கொண்டிருந்தாள். ஒரு வகுப்பில் காந்தவியல் பாடம் நடத்தியபோது கேள்விகளைக் கேட்டு அசத்திய ஆயிஷாவைக் கண்டு அவள் மேல் வியப்பையும் அன்பையும் காட்டுகிறாள் அந்த அறிவியல் ஆசிரியை.

“அந்த நிமிடத்தில் ஆயிஷா என்னை முழுமையாக வென்றுவிட்டாள். எப்பேர்ப்பட்ட சந்தர்ப்பத்திலும் அதன்பின் நான் அவளை வெறுத்ததே இல்லை…. ஆயிஷா குழந்தையில்லை. அவள் யாரோ மனுஷிகூட இல்லை. வேறு ஏதோ பிறவி, கடவுளே

“பள்ளிக்கூடங்கள் பலிகூடங்கள் ஆகிவிட்டன… எல்லாமே முன் தயாரிக்கப்பட்டவை. ரெடிமேட் கேள்விகள், அவற்றிற்கு நோட்ஸ்களில் ரெடிமேட் பதில்கள். வகுப்பறையில் ஆசிரியர்கள் ஓய்வெடுக்கிறார்கள். வெறும் மனப்பாடம் செய்யும் இயந்திரமாய் (அதுவும் முக்கிய கேள்விகளுக்கு மட்டும்) மாணவர்கள் உருமாற்றம் அடைந்துவிட்டனர்…”

“ஒரு கேள்விவை எழுப்பிக் கொள்வது, பிறகு அதற்கு விடை தெரியும்வரை ஓயாது தேடுதல் என்ற தேர்ந்த விஞ்ஞானியின் தகுதி ஆயிஷாவிடம் இயல்பிலேயே இருந்தது.”

“இந்தக் கேள்வி கேட்கும் மாபெரும் வித்தையை அவள் (ஆயிஷா) எங்கேயிருந்து கற்றாள்? அது அவள் உதிரத்தில் உள்ளதா?”

இந்த ஆயிஷா ஒரு நாள் நைட்ரஸ் ஆக்சைடு கரைசலை வைத்து எக்ஸ்பரிமென்ட் செய்துள்ளாள்.

என்ன எக்ஸ்பரிமென்ட்?

மருந்து மிஸ் … மரத்துப்போற மருந்து…

மருந்தை எனக்கு ஊசி போட்டுக்கிட்டேன்.

இனிமே யார் அடிச்சாலும் எனக்கு வலிக்காது மிஸ் … எப்படி வேணுமினாலும் அடிச்சுக்கிடட்டும்..

வேதியில் ஆய்வுக்கூடத்தின் பின்னால் ஆயிஷா விழுந்துகிடந்தாள்.. ஒரு மாலைமாதிரி விழுந்து கிடந்தாள்.

ஆட்டோவில் ஆஸ்பத்திரிக்குப் போவதற்குள் ஆயிஷா பிரிந்துவிட்டாள். எப்பேர்பட்ட ஆயிஷா.

தன் விஞ்ஞானக் கனவுகளை நாள்தோறும் அடுப்பு நெருப்பில் போட்டு சாமபலாக்கிவிடும் அந்த நூற்றுக்கணக்கான ஆயிஷாக்களுக்கு இந்தப் புத்தகத்தைக் கண்ணீரோடு சமர்ப்பிக்கிறேன். இந்த நூலை வாசிப்பவர்கள் அதை ஒரு பத்துப் பெண்களுக்காவது இரவல் கொடுப்பார்களா? அவர்களில் ஓர் ஆய்ஷாவாவது இருப்பாளா? என் பொக்கிஷமே ஆயிஷா..

கண்களைக் குளமாக்கிவிடும் குறுநாவல் இது.

ஆயிஷா குறுநாவல்: பிற செய்திகள்

இக்குறுநாவல் 1996 ஆம் ஆண்டில் கணையாழி நடத்திய குறுநாவல் போடடியில் முதல் பரிசு பெற்றது. இக்குறுநாவலை சென்னையில் உள்ள பாரதி புத்தகாலயம் என்ற பதிப்பகம் 2011 ஆம் ஆண்டில் புத்தகமாக வெளியிட்டுள்ளது. ஒரு லட்சம் பிரதிகள் விற்றுச் சாதனை படைத்த இந்நூல் எட்டு மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.

சில வாசகர்கள் இக்கதையினைக் கணையாழி வழியாக நகல் (xerox) எடுத்து விநியோகித்ததன் மூலம் பல்லாயிரக் கணக்கானோர் வாசிப்பதற்கு உதவினர். ஸ்நேகா பதிப்பகம் இரண்டு ரூபாய் விலையில் ஒரு சிறு தனிநூலகப் பதிப்பித்தனர். ஒரே வருடத்தில் ஒன்பது பதிப்புகள் வெளியிடப்பட்டன. வேறு சில அமைப்புகளும் இக்கதையைத் தனிநூலாகப் பதிப்பித்து பரவலாக விநியோகித்தனர். அனைவருக்கும் கல்வி திட்டம் வாயிலாக தமிழ்நாடு அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு அளிக்கப்பட்ட பயிற்சியில் ஆயிஷா கட்டாய பாடமாக கற்பிக்கப்பட்டது. ஏழு தன்னதிகாரக் கல்லூரிகள், மூன்று பல்கலைகழகங்கள் ஆயிஷாவைப் பாடமாக வைத்துள்ளன. வீதி நாடகமாக நடிக்கப்பட்டது மட்டுமின்றிக் குறும்படமாகவும் எடுக்கப்பட்டது. (இதோ அந்தக் குறும்படம்:

மதுரை மற்றும் கோயம்புத்தூர் நகரங்களில் வாழும் கிராமப்புற குழந்தைகள் ஆயிஷா மன்றங்களைத் தொடங்கி இதன் மூலம் அறிவியல் ஆய்வுகளை நிகழ்த்தி வருகின்றனர். Free Tamil Ebooks தளத்திலிருந்து பதிவிறக்கச் சுட்டிhttp://freetamilebooks.com/ebooks/ayesha/ இது

இவர் எழுதி வெளியிட்ட புத்தகங்கள்:

 1. இரா. நடராசன் சிறுகதைகள். பாரதி புத்தகாலயம். 2011. பக். 336. இரா.நடராஜனால் எழுதப்பட்ட அனைத்துச் சிறுகதைகளும் (50 சிறுகதைகள்) அடங்கியது. (இரா. நடராசன் சிறுகதைகள் – தமிழ் விக்கிப்பீடியா)
 2. இது யாருடைய வகுப்பறை…? பாரதி புத்தகாலயம். 2013. பக். 208 – கற்றல், கற்பித்தல், குழந்தைகள் உளவியல் குறித்த நூல். கட்டாயம் படிக்க வேண்டும்.
 3. வன்முறையில்லா வகுப்பறை. பாரதி புத்தகாலயம். 2016. பக். 112. கல்வியாளர்கள் வழியேதண்டனையில்லாத பயிற்றுமுறை வன்முறையில்லாத வகுப்பறைநோக்கி ஆசிரியர் புதியபாதை அமைக்கிறார்.
 4. டார்வின் ஸ்கூல். பாரதி புத்தகாலயம். 2014. பக். 112. இது சிறு குழந்தைகளுக்கு ஒரு அருமையான புத்தகம். இது போன்ற ஒரு அரிய புத்தகம் தமிழில் இதுவே. 7 ஆம் வகுப்பு முதல் 9 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு இந்த புத்தகத்தை பரிசளிக்கலாம்.
 5. உலகக் கல்வியாளர்கள். ed 3. Books for Children. 2013. பக். 48. உலகம முழுகக கலவி அமைபபு முறையில குறிபபிடததகக மாறறஙகளைச செயத எடடுக கலவியாளரகளைப பறறிய சுருககமான அறிமுகஙகளைக கொணட புததகம இது.
 6. விஞ்ஞான விக்கிரமாதித்தன் கதைகள் ed 4. Books for Children. 2014. பக். 96. பால சாகித்திய அக்காடெமி விருது பெற்ற கதை
 7. ஹிக்ஸ் போசான் வரை இயற்பியலின் கதை. Books for Children. 2012. பக். 208. இயற்பியலின வரலாற்றைத் தொடககம் முதல் சமகாலம் வரை கதைபோல விவரிக்கும் நூல்.
 8. உலகை மாற்றிய சமன்பாடுகள். Books for children 2012. பக். 80.கணித உலகை புரடடிப போடட முககியமான சமனபாடுகள குறிதத நுடபமான செய்திகள்.
 9. விண்வெளிக்கு ஒரு புறவழிச்சாலை. Books for Children. 2013. பக். 64. உலக விஞ்ஞானச் சிறுகதைகள்.
 10. ஹென்றி போர் முனைக்கு சென்ற சிறுவன் (மொழிபெயர்ப்பு). Books for Children. 2019. பக். 80.
 11. அயல்மொழி அலமாரி. பாரதி புத்தகாலயம். 2013. பக். 96. இதுவரை தமிழுலகம் அறிந்திராத பல அயல்மொழி புத்தகங்களைப் பற்றிய அறிமுகம்.
 12. விஞ்ஞானச் சிந்தனையின் வளர்ச்சி. 2015.
 13. மலாலா கரும்பலகை யுத்தம். பக், 64
 14. சீனிவாச ராமானுஜன்
 15. கணிதத்தின் கதை
 16. நம்பர் பூதம்
 17. 10 எளிய இயற்பியல் சோதனைகள்
 18. 10 எளிய வேதியியல் சோதனைகள்
 19. 10 எளிய உயிரியல் சோதனைகள்
 20. ஒரு தோழனும் மூன்று நண்பர்களும்

வாழ்க்கைக் குறிப்பு:

ஆயிஷா இரா. நடராஜன் அவர்கள் இயற்பியல், கல்வியியல், உளவியல், ஆங்கில இலக்கியம் ஆகிய துறைகளில் முதுகலைப் பட்டம் பெற்றவர். 1986 ஆம் ஆண்டில் அறிவியல் / மொழியியல் ஆசிரியராகத் தன் பணியைத் துவக்கிய இவர், 1996 ஆம் ஆண்டில் சென்னையின் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி ஒன்றில் முதல்வராகப் பதவியில் அமர்ந்தார். 1999 ஆம் ஆண்டு முதல் தற்போது வரை கடலூர கிரூஷணசாமி நினைவு மெடரிக மேலநிலைபபளளியில் முதல்வராகப் பணியாற்றி வருகிறார்.

எழுத்துப்பணி

கடந்த இருபதாண்டுகளாக குழந்தைகளுக்கான கதைகள் மற்றும் குழந்தைகள் கல்வி குறித்து நிறையப் புத்தகங்களைத் தமிழில் எழுதியுள்ளார். தமிழக அரசின் தமிழ் வளர்ச்சி துறை விருது இவருடைய “கணிதத்தின் கதை’ என்ற நூலுக்கு வழங்கப்பட்டுள்ளது. சிறுகதைகள், புதினங்கள், மொழிபெயர்ப்பு, அறிவியல் ஆகிய அனைத்துக் களங்களிலும் தன்னுடைய படைப்புகளை இவர் வெளியிட்டுள்ளார். என்றாலும் இவர் குழந்தைகள் எழுத்தாளராகவே புகழ் பெற்றுள்ளார். இவர் கதைகள் தெலுங்கு, மலையாளம், இந்தி, ஆங்கிலம், பிரஞ்சு ஆகிய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. கடந்த 12 ஆண்டுகளாக தொடர்ந்து புத்தகங்களுக்காவே வெளிவரும் ‘புத்தகம் பேசுது’ மாத இதழின் ஆசிரியர் இவர்.

குறிப்புநூற்பட்டி

 1. இரா. நடராசன் – தமிழ் விக்கிப்பீடியா
 2. இரா. நடராசன் சிறுகதைகள் – தமிழ் விக்கிப்பீடியா
 3. ஆயிஷா நடராஜனுக்கு சிறுவர் இலக்கியத்துக்கான சாகித்ய அகாதமி விருது! – மாற்று
 4. Bal Sahitya Akademi winner dedicates award to book-loving children
 5. SAHITYA : Akademi Awards ::..

YOUTUBE

About முத்துசாமி இரா

புதுக்கோட்டை மாவட்டம் இராமச்சந்திரபுரத்தைப் பிறப்பிடமாகவும், சென்னை சைதாப்பேட்டையை வசிப்பிடமாகவும் கொண்ட இரா.முத்துசாமி, காரைக்குடி அழகப்பா கல்லூரியிலும், சென்னைப் பல்கலைக்கழகத்திலும் பயின்றவர். இவர் 1975ஆம் ஆண்டு தொடங்கி சி.வி.ஆர்.டி.இ (டி.ஆர்.டி.ஓ) ஆவடி, சென்னையில் பணியாற்றி ஒய்வு பெற்றவர். தமிழ் இலக்கியத்திலும், தமிழக வரலாற்றிலும் ஈடுபாடு கொண்டவர்.
This entry was posted in இலக்கியம், குழந்தைகள் and tagged , , , , . Bookmark the permalink.

4 Responses to ஆயிஷா நடராஜன்: பலராலும் நன்கு அறியப்பட்ட குழந்தைகள் எழுத்தாளர்

 1. ஸ்ரீராம்  சொல்கிறார்:

  அந்த ஒரே கதை சாதனை படைத்துள்ளதே…    இவரைப் பற்றி அறியத் தந்ததற்கு நன்றி.  

  Like

 2. Dr B Jambulingam சொல்கிறார்:

  குழந்தை எழுத்தாளரைப் பற்றி அரிய செய்திகளை அறிந்தேன். நன்றி.

  Like

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.