Category Archives: அறிவுத்திறன்

இரண்டு கைகளையும் பயன்படுத்தி ஒரே நேரத்தில் எழுதும் திறன் (Ambidextrous Writing Skills): அசத்தும் மத்தியப்பிரதேசத்துப் பள்ளி மாணவர்கள்.

நம்மில் பெரும்பாலோனோர் வலது கையைப் பயன்படுத்தி எழுதி வருகிறோம். இது மிகவும் பொதுவானது தானே. இதில் என்ன புதுமை இருக்கிறது? என்றுதானே கேட்க வருகிறீர்கள். உலகின் மொத்த மக்கள் தொகையில், 13 சதவீதம் பேர், இடது கை பழக்கம் உடையவர்களாக இருக்கிறார்கள் என்று ஐ.நா., அறிக்கை தெரிவிக்கிறது.  இவர்கள் இடது கையை மட்டும் பயன்படுத்தி எழுதி வருகிறார்கள். இடது கைப்பழக்கம் உள்ளவர்களுடைய மூளை விரைவாகச் செயல்படுமாம். ஐ.க்யூ லெவல் 140 க்கும் மேலே உள்ளவர்கள் எல்லோரும் இடது கைப்பழக்கம் உள்ளவர்கள்தான் என்று ஒரு ஆய்வு பதிவு செய்துள்ளது.  

மத்திய பிரதேச மாநிலம், சிங்க்ருளி மாவட்டம், புதேல என்னும் கிராமத்தில் உள்ள வீணாவாதினி பள்ளியில் பயிலும் மாணவ மாணவியர் அனைவரும் இரண்டு கைகளையும் பயன்படுத்தி ஒரே நேரத்தில் எழுதுகிறார்கள் என்பது தான் வழக்கத்துக்கு மாறுபட்ட வினோதமான வியப்பான செய்தி. இந்தக் குழந்தைகளைப் பற்றி இந்தப் பதிவில் சொல்லப்போகிறேன். கொஞ்சம் கேட்டுவிட்டு உங்கள் கருத்தைப் பின்னூட்டத்தில் கட்டாயம் பதிவு செய்யுங்கள்.
Continue reading

Posted in அறிவுத்திறன், கற்பிக்கும் கலை, கல்வி, குழந்தைகள், மூளை வளர்ச்சி | Tagged , , , , , , , , , , | 4 பின்னூட்டங்கள்

ஹோவர்ட் கார்டனரின் பல்திறன் கொள்கை குழந்தைகளின் திறமையை கண்டறிய உதவுமா?

நம் குழந்தைகள் எல்லா விஷயத்திலும் புத்திசாலிகளாக இருக்க வேண்டும் என்று அவசியமில்லை என்கிறார் டாக்டர் ஹோவர்டு கார்டனர் (Dr.Howard Gardner) என்ற அமெரிக்க காக்னிட்டிவ் சைக்காலஜிஸ்ட். அமெரிக்காவில் பென்சில்வேனியா நகரைச் சேர்ந்த ஹோவர்டு கார்டனரை ‘பல்திறன் கொள்கை’ (Multiple Intelligence) என்ற உளவியல் கொள்கை மூலம் பலருக்கு நன்றாக தெரியும். முதலில் Frames of Mind (1983) என்ற கட்டுரையில் ஏழு திறன்களை உலகுக்கு அறிவித்தார். பின்னாளில் இக்கோட்பாடு நீட்டிக்கப்பட்டு Intelligence Reframed (1999) என்ற கட்டுரையில் மாற்றியமைக்கப்பட்டது. கார்டனரின் பல்திறன் கோட்பாடு ஆசிரியர்களையும் (teachers) , பள்ளியின் தலைவர்களையும் (school leaders), சிறப்பு கல்வியாளர்களையும் (special educators) கவர்ந்தது. குழந்தைகளும், பருவ வயதினரும் பலவழிகளில் நுண்ணறிவாளனாய் இருக்க முடியும் என்று இவர்கள் புரிந்து கொண்டார்கள். ஐ.கியூ. டெஸ்ட் எனப்படும் அளவிடல் முறையைப் பயன்படுத்தி குழந்தைகளின் ஒன்றிரண்டு அறிவை மட்டுமே சோதிக்க முடியும். இந்த ஐ.கியூ டெஸ்டை வைத்து ஒரு குழந்தையின் நுண்ணறிவினை துல்லியமாக மதிப்பிட முடியாது என்பது இவர் வாதம்.

ஐ.கியூ. டெஸ்ட்டுக்குப் பதிலாக கார்டனர் விவரித்தது சற்று சிக்கலான கொள்கையாகும். மனித அறிவுத்திறன் (human intelligence) என்பது தன்னாளுகைக்கு உட்பட்ட, ஒன்றிற்கொன்று தொடர்புடைய, அறிவுசார்ந்த கொள்திறன்களாகும் (relatively autonomous intellectual capacities). இவற்றின் எண்ணிக்கை எட்டு அல்லது அதற்கு மேல்.

Continue reading

Posted in அறிவுத்திறன், உளவியல், கற்பிக்கும் கலை, பெற்றோர்கள் | Tagged , , | பின்னூட்டமொன்றை இடுக

லுமோசிட்டி: ஆன்லைன் விளையாட்டுக்கள் மற்றும் மனப்பயிற்சிகள் அறிவுத்திறனை அதிகரிக்க உதவுமா?

  லுமோசிட்டி பற்றி சிறப்பாகச் சொல்ல வேண்டுமென்றால் அறிவாற்றல் பயிற்சி குறித்த வலைத்தளம் (Website).  சரி லுமோசிடியில் அப்படி என்னதான் இருக்கிறது? லுமோசிட்டி ஒருவருக்குத் தேவையான அறிவுத்திறன் குறித்து பயிற்சியளிக்கும் (cognitive-training) விளையாட்டுக்களின் தொகுப்பு (series of games)  மற்றும் மனப்பயிற்சிகள் (mental exercises). லுமோசிட்டி, கலிபோர்னியா மாநிலம், சான்பிரான்சிஸ்கோ நகரில் அமைந்துள்ள ஒரு இணையதள … Continue reading

Posted in அறிவுத்திறன், உளவியல், பயிற்சி, வலைத்தளம் | பின்னூட்டமொன்றை இடுக