Category Archives: உடல் நலம்

நாம் உண்ணும் உணவு நம் உடலில் எப்படி செரிமானம் ஆகிறது?

நமது செரிமான மண்டலம் ஒரு விந்தையான உறுப்பு எனலாம். உதட்டிலிருந்து தொடங்கி ஆசனவாயில் வரை நீளும் நமது செரிமான மண்டலத்தின் நீளம் எவ்வளவு தெரியுமா? சுமார் இருபத்தெட்டு அடி நீளம் கொண்ட செரிமான பாதை (Digestive Tract) ஆகும். உணவு மற்றும் திரவங்கள் இந்த செரிமானப் பாதை வாயிலாகக் கடந்து சென்று செரித்த பின்னர் சத்துக்களாக மாற்றப்பட்டு இரத்த ஓட்டத்தில் கலக்கின்றன. இப்பாதையின் வாயிலாகவே கழிவுகளும் அகற்றப்படுகிறது. Continue reading

Posted in உடல் நலம், உணவு, மருத்துவம், லைப் ஸ்டைல் | Tagged , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

பீடோமீட்டரும் பத்தாயிரம் அடிகள் நடைப்பயிற்சி இலக்கும் உங்கள் உடல்நலத்தை மேம்பாடுத்துமா?

நாம் ஏன் நடைப்பயிற்சியினை மேற்கொள்ள வேண்டும்? ஒரு நாளைக்கு எவ்வளவு தூரம் நடக்க வேண்டும்? எப்படி நடக்க வேண்டும்? எப்போது நடக்க வேண்டும்? இப்படிப் பல கேள்விகள் நமக்குள் எழுகின்றன. நடைபயிற்சி என்பது சிறந்த உடற்பயிற்சிகளில் ஒன்றாகும் என்று அமெரிக்கன் ஹார்ட் அசோசியேஷன் கருத்துத் தெரிவித்துள்ளது. .உங்கள் உடலை நோயில்லாமல் வைத்துக்கொள்ள வேண்டுமா? உங்கள் உடல் எடை குறைந்து கச்சிதமான உடல் வாகுடன் திகழ வேண்டுமா? நடைப்பயிற்சி செய்யுங்கள் என்று நம் ஊர் மருத்துவர்களும் வலியுறுத்தி வருகிறார்கள். உடல் உழைப்பு முற்றிலும் காணமல் போய்விட்ட இன்றைய வாழ்க்கை முறையில், விறுவிறுப்பான நடைப்பயிற்சி (Brisk Walking) அனைத்து வயதினருக்கும் ஏற்ற உடற்பயிற்சி ஆகும். பத்தாயிரம் அடிகள் என்பது எப்படி நடைப்பயிற்சி இலக்கானது?  பீடோமீட்டர் என்னும் மின்னணுக் கருவிகள் எவ்வாறு இந்த நடைப்பயிற்சி இலக்கை அடைய உதவுகிறது? இது போன்ற வினாக்களுக்கான விடைகள் இப்பதிவில் விரிவாக விவரிக்கப்பட்டுள்ளன. Continue reading

Posted in உடல் நலம், வாழ்க்கை முறை, Uncategorized | Tagged , , , , | 2 பின்னூட்டங்கள்

உடல் கொழுப்பு: எவ்வாறு கெட்ட கொழுப்பை இழப்பது நல்ல கொழுப்பைப் பெருக்குவது?

கொழுப்பு பற்றி நாம் மோசமான கருத்தே கொண்டுள்ளோம் என்றாலும், கொழுப்பு என்பது உடலின் இயக்கத்திற்குத் தேவையான இன்றியமையாத பெரு ஊட்டச்சத்து ஆகும். உடல் நலத்தைச் சிறந்த முறையில் பராமரிக்கச் சரியான அளவில், சரியான வடிவில் கொழுப்பு உணவை உண்ண வேண்டும் என்று வல்லுனர்கள் கருதுகிறார்கள். செறிவுற்ற கொழுப்பு அமிலங்கள் (saturated fatty acids), செறிவற்ற கொழுப்பு அமிலங்கள் (unsaturated fatty acids) என்று இரண்டு வகைக் கொழுப்பு அமிலங்களால் விளையும் நன்மை தீமை பற்றி விரிவாக விவாதிக்கப்பட்டுள்ளது.

ட்ரை கிளிசரைடு, கொலஸ்ட்ரால், ஆகிய கொழுப்புகள் மனித உடலில் காணப்படுகின்றன. கல்லீரல் இவற்றை எவ்வாறு உற்பத்தி செய்கிறது? ட்ரை கிளிசரைடு எப்படிக் கொழுப்பாக நம் உடலில் தேங்கி, நாம் குண்டாகிறோம்? எது கெட்ட கொலஸ்ட்ரால்? எது நல்ல கொலஸ்ட்ரால்? இவை நம் உடலில் எந்த அளவு இருக்க வேண்டும்? கெட்ட கொழுப்பை நீக்க என்னென்ன உணவுகளை உண்ண வேண்டும்? என்னென்ன உணவுகளைத் தவிர்க்க வேண்டும்? இந்தக் கேள்வுகளுக்கான விடையினைத் தெரிந்துகொள்ள விரும்புகிறீர்களா? இந்தப் பதிவு உங்களுக்கு விடை தருகிறது. படித்துவிட்டு உங்கள் கருத்துகளைப் பின்னூட்டத்தில் எழுதுங்கள். Continue reading

Posted in உடல் நலம், உணவு, மருத்துவம், வாழ்க்கை முறை | Tagged , , , , , , | 1 பின்னூட்டம்