Category Archives: குழந்தைகள்

ஆயிஷா நடராஜன்: பலராலும் நன்கு அறியப்பட்ட குழந்தைகள் எழுத்தாளர்

ஆயிஷா இரா.நடராஜன் என்னும் இரா.நடாராஜன் புகழ் பெற்ற குழந்தைகள் எழுத்தாளர் ஆவார். இவருடைய குழந்தைகளுக்கான சிறு கதைகள் உலகளாவிய வாசகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றன. தமிழ் மொழியில் இவரால் எழுதப்பட்ட பல சிறுகதைகள் ஆங்கிலம், ஃபிரெஞ்ச், இந்தி, தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. இவர் எழுதிய சில கதைகள் உலகச் சிறுகதைத் தொகுப்புகளில் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இவருடைய நான்கு கதைகள் குறும்படமாக எடுக்கப்பட்டு பன்னாட்டுத் திரைப்பட விழாக்களில் விருதுகளும் பெற்றுள்ளன. Continue reading

Posted in இலக்கியம், குழந்தைகள் | Tagged , , , , | 4 பின்னூட்டங்கள்

சாம்பாரின் கதை: குழந்தைகளுக்குச் சின்னச் சின்ன வரலாறு

சாம்பார் தென்னிந்தியாவின் உணவில் இரண்டறக் கலந்துவிட்ட துணைக்கறி ஆகும். சாம்பார் இல்லாத விருந்தையோ அன்றாடச் சமையலையோ தமிழர்கள் கற்பனைகூடச் செய்து பார்க்க இயலாது. தமிழர்களின் வாழ்க்கையில் இன்றியமையாத இடம்பிடித்துள்ள சாம்பார் தமிழ் மரபு சார்ந்த துணைக்கறி உணவு என்று பலர் பெருமைப்பட்டுக்கொண்டிருந்தனர். இனி அவ்வாறு பெருமைப்பட்டுக்கொள்ள முடியாது. இந்த சாம்பார் மராத்தியர்கள் தமிழகத்திற்கு மராத்தியர்கள் அளித்த கொடை என்று தஞ்சை மராத்தியர் வரலாறு பதிவு செய்துள்ளது. முதலாம் சாஹூஜி போன்சலே காலத்தில் தான் தஞ்சை அரச மாளிகையின் சாரு விலாச போஜன சாலையில் சாம்பார் முதன் முதலாகச் சமைக்கப்பட்டது. இந்தக் கதை மிகவும் சுவாரஸ்யமானது. எப்படிச் சாம்பார் சமைக்கப்பட்டது என்று பார்ப்போமா? Continue reading

Posted in உணவு, குழந்தைகள், சிறுவர் கதைகள், வரலாறு | Tagged , , , , , , , , , | 6 பின்னூட்டங்கள்

குழந்தைகளுக்கு மகாபாரதக் கதைகள் 4: பீஷ்மரின் பிறப்பு

முற்பிறவியில் பிரம்மலோகத்தில் பிரம்மாவிடம் பெற்ற சாபத்தின் விளைவாக மகாபிஷக் பூவுலகில் சந்தனுவாகவும், கங்காதேவி மானுடப் பெண்ணாகவும் குரு தேசத்தில் பிறப்பெடுத்தனர். இவர்களுக்கு ஏழு குழந்தைகள் பிறந்தன. கங்காதேவி ஒவ்வொன்றாக அக்குழந்தைகளைக் கங்கை நீரில் மூழ்கடித்தாள். இதன் மூலம் ஏழு அஷ்ட வசுக்கள் சாபவிமோசனம் பெற்றனர். சந்தனு எதுவும் கேட்கக் கூடாது என்பது கங்காதேவி விதித்த நிபந்தனை. எட்டாவது அஷ்ட வசுவான பிரபாசன் குழந்தையாகப் பிறப்பெடுத்தான். அந்த எட்டாவது குழந்தையையும் இவள் மூழ்கடிக்க முயற்சிக்கையில் சந்தனு தடுத்துக் கேள்வி கேட்டான். அதனால் அக்குழந்தை உயிர் தப்பியது. இக்குழந்தைக்குத் தேவவிரதன் என்று பெயர் சூட்டினர். பின்னாளில் இவர் மேற்கொண்ட சாபததத்தின் காரணமாக இவர் பீஷ்மர் என்று பெயர் பெற்றார். Continue reading

Posted in குழந்தைகள், சிறுவர் கதைகள் | Tagged , , , , , , , , | 5 பின்னூட்டங்கள்