Category Archives: கோவில்

புதுக்கோட்டை மாவட்ட வரலாறு, தொல்லியல் நினைவுச் சின்னங்கள் மற்றும் சுற்றுலா

புதுக்கோட்டையின் வரலாறு தென்னிந்திய வரலாற்றிற்கு ஒரு எடுத்துக்காட்டாகும். இம்மாவட்டத்தின் மேற்குப் பகுதிகளில் நார்த்தாமலை, செவலூர் மலை மற்றும் அன்னவாசல் மலை ஆகிய மலைகளும் (Hills) தனிக்குன்றுகளும் (Knolls) ஆங்காங்கே காணப்படுகின்றன.. இங்கிருந்து நிலப்பரப்பு தட்டையாக கிழக்கு நோக்கிச் சரிகிறது. கிழக்கில் கழிமுகங்களும் நீண்ட கடற்கரையும் அமைந்துள்ளது.

புதுக்கோட்டை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் பெருங்கற்கால ஈமக்குழிகள் கண்டறியப்பட்டுள்ளன. சமணர்களின் தொன்மைமிக்க பல நினைவுச் சின்னங்கள் இந்த மாவட்டத்தில் சிதறிக் கிடக்கின்றன. இம்மாவட்டத்தில் அமைந்துள்ள சோழர்கள் – பாண்டியர் கலைப்பாணியில் அமைந்த கருங்கற்றளிகள் தனித்தன்மை வாய்ந்தவை. ஒரே பதிவில் இந்த மாவட்டத்தின் சிறப்புகளைப் பதிவு செய்வது மிகவும் கடினமான பணி. இதன் காரணமாகவே இந்தப் பதிவு சற்று விரிவாக அமைந்துள்ளது. Continue reading

Posted in குகைகள், குடைவரைக் கோவில், கோவில், சமண சமயம், சுற்றுலா, தமிழ்நாடு, தொல்லியல், வரலாறு | Tagged , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

கோவில்களில் நுந்தா விளக்கெரிப்பதற்கு முதலாம் இராஜராஜ சோழன் ஏற்படுத்திய, “சாவா-மூவா-போராடு” திட்டம்

நந்தா விளக்கு என்றால் விளக்கின் திரி தூண்டாமல் இரவும் பகலும் அணையாமல் எரியும் விளக்கு என்று பொருள். நந்தா விளக்குகள் குறித்த பல செய்திகள் சங்க இலக்கியங்களில் காணப்படுகின்றன. சோழர்கள் காலத்தில் பொறிக்கப்பட்ட கல்வெட்டுகளில் இவ்வகை விளக்குகள் நுந்தா விளக்கு என்றும் திருநுந்தா விளக்கு என்றும் நொந்தா விளக்கு என்றும் தூண்டாமணி விளக்கு என்றும் குறிப்பிடப்பட்டுள்ளன. பொதுமக்கள் அளித்த சிறு சிறு நிவந்தங்கள் கோவில் உண்ணாழிகைகளில் ஒன்றுக்கு மேற்பட்ட நந்தா விளக்குகள் ஏற்றப் பயன்பட்டன.

சாவா மூவா பேராடுகள் என்றால் சாவினாலோ மூப்பினாலோ எண்ணிக்கை குறையாத ஆடுகள் என்று பொருள். முதலாம் இராஜராஜனின் ஆட்சிக் காலத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றே சாவா மூவா பேராடு என்ற திட்டம் உருவாக வழிவகுத்தது. இந்தப் பதிவு .சாவா மூவா பேராடுகள் திட்டம் பற்றி விரிவாக அலசுகிறது.
Continue reading

Posted in கோவில், சோழர்கள், தொல்லியல், வரலாறு, Uncategorized | Tagged , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

நிசும்பசூதினி கோவில்கள், தஞ்சாவூர்: விஜயாலய சோழன் நிறுவிய சோழர்களின் போர்க்கடவுள்

தஞ்சாவூர் நகரில் கீழவாசல் பகுதியில் இரண்டு நிசும்பசூதினி கோவில்கள் அமைந்துள்ளன. திருபுறம்பியம் போரில் வெற்றிபெற்றுத் தஞ்சாவூர் நகரைக் கைப்பற்றிய பின்னர் விஜயாலய சோழன் இந்த நிசும்பசூதினி கோவிலை நிறுவினான். இந்த நிகழ்வினை திருவாலங்காட்டுச் செப்பேடு பதிவு செய்துள்ளது. இந்தப் பதிவு சோழர் வரலாறு, திருப்புறம்பியம் போர், நிசும்பசூதினி வழிபாடு, தஞ்சாவூரின் இரண்டு நிசும்பசூதினி கோவில்கள்  பற்றி விரிவாக விவரிக்கிறது. Continue reading

Posted in கோவில், சோழர்கள், வரலாறு | Tagged , , , , , , , , , | 16 பின்னூட்டங்கள்