Category Archives: சமண சமயம்

திருநந்திக்கரை குடைவரைக் கோவில், கன்னியாகுமரி மாவட்டம்

திருநந்திகரை குகைக் கோவில், ஒரு குடைவரைக் கோவிலாகும். இது நந்தியாற்றங்கரையில் அமைந்துள்ள திருநந்திக்கரை நந்தீஸ்வரர் கோவிலின் ஒரு பகுதியாகும். இக்குடைவரைக் கோவில் கன்னியாகுமரி மாவட்டம்; கல்குளம் வட்டம், திருநந்திக்கரை கிராமத்தில் அமைந்துள்ளது. இது மிகவும் தொன்மையான குடைவரைக் கோவிலாகக் கருதப்படுகிறது. கி.பி. 8 ஆம் ஆண்டில் அகழப்பட்டதாகக் கருதப்படும் இக்கோவில், சமண மதத்தின் தொன்மைமிக்க கோவிலாகவும் கருதப்படுகிறது. இக்குடைவரை முகப்பு, மண்டபம், முகமண்டபம், உள்மண்டபம், கருவறை ஆகிய பகுதிகளைக் கொண்டுள்ளது.இக்குடைவரையில் நான்கு வட்டெழுத்துக் கல்வெட்டுகள் கண்டறியப்பட்டு, படியெடுக்கப்பட்டுள்ளன.

கி.பி. 7 ஆம் நூற்றாண்டில் சமணர்களால் அகழப்பட்ட இக்குடைவரை பிற்காலத்தில் பிராமணீய இந்துக் கோவிலாக மாற்றப்பட்டது. கி.பி. எட்டாம் நூற்றாண்டில் வீரநந்தி என்ற சமண முனிவர் இந்தக் கோவிலில் தங்கி சமண சமயப்பணி ஆற்றியுள்ளார். முதலாம் இராஜராஜ சோழன் முட்டம் என்ற ஊரைக் கைப்பற்றி அதற்கு மும்முடி சோழ நல்லூர் என்று பெயர் மாற்றம் செய்வித்தான். கி.பி. 1003 ஆம் ஆண்டு, இம்மன்னன் இக்கோவிலில் தங்கித் தன் பிறந்தநாளைக் கொண்டாடியுள்ளான் Continue reading

Posted in குடைவரைக் கோவில், சமண சமயம், தொல்லியல், வரலாறு | Tagged , , , , , , | 2 பின்னூட்டங்கள்

கல்லில் பகவதி குகைக் கோவில்: கேரளாவின் எர்ணாகுளம் அருகே மெத்தலாவில் அமைந்துள்ள சமண / புத்த இயற்கைக் குகைதளம்

கல்லில் (English: Kallil Malayalam: കല്ലിൽ) சமணக் குகைக்  கோவில்,  கேரளா மாநிலம், எர்ணாகுளம் மாவட்டம், கூவப்பாடி (Malayalam: കൂവപ്പാടി) வட்டம் , மெத்தலா (Malayalam: മേത്തല) கிராமத்தில் (பின் கோடு 683545) அமைந்துள்ளது. திருச்சூர் மாவட்டத்தில் உள்ள மெத்தலா கிராமத்தை இந்தக்  கிராமத்துடன் இணைத்துக் குழப்பிக்கொள்ள வேண்டாம். இந்தக் குகைக் கோவில், கூவப்பாடியிலிருந்து 10 … Continue reading

Posted in குகைகள், கேரளா, சமண சமயம், பெளத்த சமயம், வரலாறு | Tagged , , , , , | 5 பின்னூட்டங்கள்

பொம்மலகுட்டா சமண யாத்திரைத் தலமும் வரலாற்றுச் சிறப்புமிக்க வேமுலவத சாளுக்கியரின் மும்மொழிக் கல்வெட்டும்

ஆந்திரப்பிரதேச மாநிலம், கரீம்நகர் மாவட்டம் குரிக்கியாலா கிராமத்தில் அமைந்துள்ள பொம்மலகுட்டா குன்றின் மீது, இராஷ்டிரகூட அரசன் மூன்றாம் கிருஷ்ணனின் கீழ் ஆட்சிபுரிந்து வந்த வேமுலவத சாளுக்கிய (Chalukyas of Vemulavada) மன்னன் இரண்டாம் அரிகேசரி (கி.பி. 930-55) காலத்தில் ஆதிகவி பம்பாவின் இளைய சகோதரரான ஜீனவல்லபா,  திரி-புவனா-திலக என்னும் பெயர் தாங்கிய சமண யாத்திரைத் தலத்தை அமைத்துள்ளார். இக்குன்றின் உச்சியில் உள்ள பாறை ஒன்றின் மீது சமண இயக்கி (யட்சி) சக்ரேஸ்வரியின் புடைப்புச் சிற்பமும், இச்சிற்பத்தைச் சுற்றி காயோசர்க்க கோலத்தில் எட்டு சமணர்களின்   புடைப்புச் சிற்பங்களும் நான்கு தொகுப்புகளாகச் செதுக்கப்பட்டுள்ளன. இந்தச் சிற்பத் தொகுப்பிற்கு நேர் கீழே இரண்டாம் அரிகேசரியின் பதினோரு வரிக் கல்வெட்டு தெலுங்கு, கன்னடம், சமஸ்கிருதம் ஆகிய மூன்று மொழிகளில் பொறிக்கப்பட்டுள்ளது. கன்னட மொழியில் சிறந்த கவிஞராகத் திகழ்ந்த பம்பாவின் புரவலர் அரிகேசரி ஆவார். இந்த சமணக் கவிஞரின் பரம்பரை மற்றும் கவித்திறன் பற்றிய சிறப்பான செய்திகளை இந்தக் கல்வெட்டிலிருந்து தெரிந்துகொள்ள முடிகிறது. Continue reading

Posted in சமண சமயம், தொல்லியல் | Tagged , , , , , , | 2 பின்னூட்டங்கள்