Category Archives: தமிழ்

சங்க இலக்கியத்தில் சோழர்களின் உறையூர்

காவிரி ஆற்றின் தென்கரையில் அமைந்துள்ள உறையூர் கி.மு. 3 ஆம் நூற்றண்டில் இருந்தே சங்க காலத்துச் சோழர்களின் தலைநகராகத் திகழ்ந்துள்ளது. தித்தன், கரிகால் சோழன், ,குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன், குராப்பள்ளி துஞ்சிய பெருந்திருமாவளவன், ஆகிய சோழர் கோமரபைச் சேர்ந்த மன்னர்கள் பல்வேறு காலகட்டங்களில் உறையூரினைத் தொடர்ச்சியாக ஆட்சி செய்து வந்துள்ளதை சங்க இலக்கியங்கள் படம்பிடித்துக் காட்டுகின்றன..இந்நகரம் ஒரு செழிப்பான வணிக மையமாகவும் திகழ்ந்துள்ளது. Continue reading

Posted in சோழர்கள், தமிழ், தொல்லியல், வரலாறு | Tagged , , , , , , , , , | 5 பின்னூட்டங்கள்

அமேசான் கிண்டில் நேரடி வெளியீட்டில் உங்கள் புத்தகத்தை மின்னூலாக வெளியிடுவது எப்படி?

ஒரு புத்தகத்தை, வெளியிடும் தருவாயில்  வைத்துக்கொண்டுள்ள நூலாசிரியர், இரண்டு வழிகளில் வெளியிடலாம்: 1. மரபு வழியில் அச்சிட்டு ஒரு பதிப்பாளர் (publishing house) வாயிலாக வெளியிடுவது; 2. ஆசிரியரே தன் புத்தகத்தைச் சுயமாக அச்சிட்டு வெளியிடுதல் (self-publishing). சில காலத்திற்கு முன்பு வரை சிறந்த எழுத்தாளர்கள் கூட தங்கள் நூல்களை வெளியிட பதிப்பகங்களைத் தேடி அலைய வேண்டியிருந்தது. தற்போது புத்தகத்தை சுயமாக அச்சிட்டு வெளியிடும் முறையே பரவலாகி வருகிறது. சுயமாகப் புத்தகம் வெளியிடுவது பற்றி ஆய்வு மேற்கொண்டோர் அமேசான் கே.டி.பி (Kindle Direct Publishing (K.D.P.) பற்றி எளிதாகத் தெரிந்து கொண்டிருப்பார்கள். கிண்டில் நேரடி வெளியீடு கே.டி.பி. என்றால் என்ன?  தமிழ் நூலாசிரியர்கள் இதனை எவ்வாறு பயன்படுத்திக் கொள்ளலாம்? கிண்டில் நேரடி வெளியீடு பற்றிய நிறை குறைகளையும் கே.டி.பி. செலெக்ட் பற்றியும் இந்தப் பதிவில் தெரிந்துகொள்ளலாம். Continue reading

Posted in இணைய நூலகம், தமிழ் | Tagged , , , , | 4 பின்னூட்டங்கள்

குழந்தைகளுக்குப் பண்டிகைகள் அறிமுகம்: தமிழ் புத்தாண்டு நாள்

தமிழ் புத்தாண்டு சித்திரை மாதம் முதல் நாளன்று, உலகம் முழுவதிலும் வாழ்கின்ற தமிழர்களால், கொண்டாடப்படும் பண்டிகை ஆகும். தமிழர்கள் மிகுதியாக வாழும் இந்தியா, இலங்கை, தாய்லாந்து, கம்போடியா, மியான்மார், லாவோஸ், மலேஷியா, சிங்கப்பூர், அமெரிக்கா, கனடா போன்ற நாடுகளில் இந்தப் பண்டிகை விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. Continue reading

Posted in குழந்தைகள், தமிழ், விழாக்கள் | Tagged , , , , , | 4 பின்னூட்டங்கள்