Category Archives: தமிழ்

கனியும் மணியும் மின்னூல் செயலி: குழந்தைகளுக்கு எளிமையாகத் தமிழ் கற்பிக்கவும் வசிக்கும் பழக்கத்தை மேம்படுத்தவும் உதவுகிறது

தமிழ் கற்றுக் கொள்ள விரும்புபவர்கள் எளிய முறையிலும் மகிழ்ச்சியான சூழலிலும் கற்றுக் கொள்ள ஊடாடும் படங்கள் (Interactive images), அசையும் படங்கள் (Animated images), கலந்துரையாடல் (Discussion) எனப் பல வேறுபட்டக் கோணங்களில் தமிழைக் கற்பிக்கும் “கனியும் மணியும்”: மின்னூல் செயலி ஆகும். இந்த மின்னூலின் முதல் பதிப்பில் சிறுவர்களுக்கான 6 கதைகள் இடம் பெற்றுள்ளன. இந்தச் செயலி கடந்த ஜனவரி 17, 2019 ஆம் தேதி அன்று சிங்கப்பூரின் கேம்பல் லேன் சாலையில் நடைபெற்ற பொங்கல் விழாக் கொண்டாட்டத்தின்போது சிங்கப்பூர் அரசின் கல்வி அமைச்சகத்தில் செயல்படும் ‘தமிழ் மொழி கற்றல் வளர்ச்சிக் குழுவின்’ தலைவரும், செம்பவாங் நாடாளுமன்ற உறுப்பினருமான விக்ரம் நாயர் வெளியிட்டார். இந்தச் செயலிக்கான உள்ளடக்க உருவாக்கத்தில் மலேசிய நாட்டைச் சேர்ந்த கனியியலாளரான முரசு நெடுமாறனும் ஆசிரியையான கஸ்தூரி இராமளிங்கமும் இணைந்து பணியாற்றியுள்ளனர்.
Continue reading

Posted in குழந்தைகள், கைபேசி, சிறுவர் கதைகள், தமிழ் | Tagged , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

அரும்பு: குழந்தைகளுக்குத் தமிழ் மொழியைப் பயிற்றுவிக்க ஏற்ற ஆன்ட்ராய்டு செயலி

வெளிநாடுகளில் வாழும் தமிழர்களின் குழந்தைகள் கைபேசியைப் (செல்போன்) பயன்படுத்தி எளிய முறையில் தமிழ் கற்க வேண்டுமா? கூகுள் பிளே ஸ்டோரில்  (Google Play Store) உள்ள அரும்பு லைட் (Arumbu Lite) பதிப்பு 1.00 என்ற செயலி உங்களுக்கு உதவும். தஞ்சாவூர் தமிழ் பல்கலைக் கழகமும் ஏசிஇ (எஸ்) பிரைவேட் லிமிடெட் நிறுவனமும் இணைந்து அரும்பு லைட் என்ற செயலியை 2017 ஆம் ஆண்டு அறிமுகம் செய்துள்ளனர். இந்தச் செயலியைப் பயன்படுத்திப் படிப்படியாகத் தமிழ் கற்பது என்பது விளையாட்டுத்தனமான செயலாகும். இந்தச் செயலியைத் தரவிறக்கி நிறுவிக்கொள்வதன் மூலம் உங்கள் குழந்தைகள், உயிர் எழுத்துக்கள், மெய் எழுத்துக்கள், உயிர்மெய் எழுத்துக்களை விளையாட்டாகவும் ஈர்ப்புடனும் கற்றுக்கொள்வார்கள். மேலதிக செய்திகளுக்குப் பதிவைப் படியுங்கள். உங்கள் கருத்துக்களையும் பின்னூட்டத்தில் பதிவிடுங்கள்.. Continue reading

Posted in கல்வி, கைபேசி, தமிழ் | Tagged , , , , , , | 4 பின்னூட்டங்கள்

எயிற்பட்டினம் என்னும் மரக்காணம்: ஆழ்கடலில் மூழ்கிய சங்ககாலத் துறைமுகத்தில் கடல்சார் ஆய்வுகள்

மரக்காணம் (English: Marakkanam), விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் வட்டம், மரக்காணம் பேரூராட்சியில் அமைந்திருந்த துறைமுகமும் நகர்ப்புற மையமுமாகும் (Seaport and Urban Center). இந்நகரம் பண்டைக் காலத்திலிருந்து எயிற்பட்டினம் (Eyirpattinam), சோபட்டினம் (Sopattinam), சோபட்மா (Sopatma), மனக்கானம் (Manakkanam), போன்ற பல்வேறு பெயர்களால் அழைக்கப்பட்டுள்ளது. “மதிலொடு பெயரியப் பட்டினம்” என்று சிறுபாணாற்றுப்படை சுட்டும் இந்தச் சங்ககாலத் துறைமுகப் பட்டணம் பாலாறு வங்கக் கடலுடன் சங்கமிக்கும் கழிமுகத்தில் அமைந்திருந்தது. இந்தப் பதிவில் ஆழ்கடலில் மூழ்கிய இத்துறைமுகத்தில் மேற்கொள்ளப்பட்ட கடல்சார் ஆய்வாளர்கள் கண்டறிந்த  மதிற்சுவர் பற்றியும், சிறுபாணாற்றுப்படை காட்டும் ஓவியர் குடிப்பிறந்த நல்லியக்கோடன் ஆண்ட ஒய்மா நாடு, அதன் தலைநகரான நன்மாவிலங்கை பற்றியும், கிடங்கில், ஆமூர், வேலூர், எயிற்பட்டினம்  ஆகிய ஊர்கள் பற்றியும் விவரிக்கப்பட்டுள்ளன. Continue reading

Posted in இலக்கியம், தமிழ், தொல்லியல் | Tagged , , , , , , , , , , , | 4 பின்னூட்டங்கள்