Category Archives: நூலறிமுகம்

அழகர்கோயில், தொ.பரமசிவன். நூலறிமுகம்

‘அழகர் கோயில்’ என்னும் பண்பாட்டாய்வு நூலை, பேராசிரியர் முனைவர் தொ. பரமசிவன் எழுதி வெளியிட்டுள்ளார். மதுரைக் காமராசர் பல்கலைக் கழகத்தின் பதிப்புத்துறையால் வெளியிடப்பட்ட இந்நூல் இவருடைய முனைவர் பட்ட ஆய்வேடாகும். துறைவளர்ச்சித் திட்டத்தின் கீழ் 1976 – 79 ஆம் ஆண்டுகளில் அழகர் கோயில் குறித்து மேற்கொண்ட கள ஆய்வுகள், ஆய்வேடாகச் சமர்ப்பிக்கப்பட்டது.

அழகர்கோயில் குறித்த ஆய்வு குறுக்கு வெட்டுத் தோற்றத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. நாட்டார்களின் வழிபாட்டுச் சடங்குகளையும், நம்பிக்கைகளையும், செவிவழிக் கதைகளையும், வர்ணிப்புப் பாடல்களையும் பண்பாட்டுக் கூறுகளாகப் பார்க்கும் ஆய்வு முறைமை வரலாற்றாய்விற்குப் புதியது. கோயில் சமூகத்தோடு கொண்டிருந்த தொடர்பு குறிப்பிட்ட சாதிகளை முன்னிறுத்தி ஆராயப்பட்டது. மண்ணின் வரலாற்றையும், பண்பாட்டின் வரலாற்றையும் இணைத்துக் கோயில் வரலாற்றாய்வுகளை மேற்கொள்ளும் ஆய்வு முறைமை புதுமையானதும் முழுமையானதும் ஆகும். கோயில் ஆய்வுகளுக்கு, பேராசிரியர். தொ.பரமசிவன் அவர்கள் மேற்கொண்ட இந்தக் கள ஆய்வு முன்னோடியாகத் திகழ்கிறது. Continue reading

Posted in கோவில், தமிழ்நாடு, நூலறிமுகம், விழாக்கள் | Tagged , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

தமிழகத்தில் லகுலீச பாசுபதம். மங்கை ராகவன், சி. வீரராகவன், சுகவன முருகன் (நூலறிமுகம்)

மங்கை ராகவன், சி. வீரராகவன், சுகவன முருகன்  ‘தமிழகத்தில் லகுலீச பாசுபதம்’  என்ற தலைப்பில் எழுதி வெளியிட்டுள்ளார்கள்.  தமிழகத்தில் பாசுபத சைவம் எவ்வாறு பரவியது? தமிழகத்தில் பாசுபத சைவத்தின் தாக்கம் என்னென்ன விளைவுகளை ஏற்படுத்தியது? பாசுபத சைவம் எவ்வாறு தமிழ்நாட்டில் ஏற்றுக்கொள்ளப்பட்டது? இது போன்ற கேள்விகளை முன்வைத்து ஆய்வுகள் மேற்கொள்வது கட்டாயம் ஆகும். இந்த அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு நூல் இது. இந்நூல் தமிழக சைவ வரலாற்றுக்கு மிக மிக இன்றியமையாத நூலாகும். இந்நூலை இயற்ற இவர்கள் பயன்படுத்திய படங்கள் நம்மை வியப்பில் ஆழ்த்துகின்றன. இந்த ஆய்வினால் இதுகாறும் இருண்டிருந்த தமிழ் சமயம் மட்டுமல்ல, கலை வரலாறு கூட ஒளிபெற்றுள்ளது. Continue reading

Posted in நூலறிமுகம் | Tagged , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

நல்ல தமிழில் எழுதுவோம். என்.சொக்கன். நூலறிமுகம்

தமிழ் இலக்கணத்தை எளிமையாகக் கற்றுத் தரும் நூல்கள் தமிழில் குறைவாகவே காணப்படுகின்றன. என்.சொக்கனின் நல்ல தமிழில் எழுதுவோம் என்ற இந்த நூல் ஒவ்வொருவரும் வாசிக்கவேண்டிய நூல் எனலாம். இந்த நூலில் எளிமையாகக் கையாளப்பட்டுள்ள தமிழ் இலக்கண விளக்கங்களை ஊன்றிப் படித்து நினைவில் இருத்திக் கொண்டாலே பிழையற்ற தமிழ் கைகூடும்.
Continue reading

Posted in தமிழ், நூலறிமுகம் | Tagged , , | பின்னூட்டமொன்றை இடுக