Category Archives: படிமக்கலை

தஞ்சாவூர் மராத்தா மாளிகை என்னும் தஞ்சாவூர் அரண்மனை

தஞ்சாவூர் மராத்தா மாளிகை என்னும் தஞ்சாவூர் அரண்மனை தமிழ்நாட்டின் தஞ்சாவூர் நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ளது. இந்த அரண்மனை, சுமார் 480 ஆண்டுகளுக்கு முன்பு தஞ்சையை ஆண்ட நாயக்க மன்னர் சேவப்ப நாயக்கரால் தொடங்கப்பட்டு விஜயராகவ நாயக்கரால் கட்டி முடிக்கப்பட்டது. விஜய ரகுநாத நாயக்கர் காலத்தில் “விஜய விசாலம்” என்றும் “இரகுநாத விலாசம்” என்றும், விஜயராகவ நாயக்கர் காலத்தில் “விஜயராகவா விலாசம்” என்றும் இந்த அரண்மனைக்குப் பெயர் சூட்டியிருந்தனர். சாகித்ய ரத்னாகரம், ரகுநாத நாயக்கப் யூத யமு, மன்னாருதாச விலாசம், போன்ற பண்டைய நூல்கள் இந்த அரண்மனை பற்றிய செய்திகளைப் பதிவு செய்துள்ளன. சுமார் 400 ஆண்டுகளுக்கு மேலான வரலாறு கொண்ட இந்த அரண்மனை, காலத்தால் அழிக்க முடியாத வரலாற்றுச் சின்னமாகக் காட்சியளிக்கிறது. இந்தப் பதிவு தஞ்சாவூர் மராத்தா மாளிகையின் வரலாறு, நினைவுச் சின்னங்கள், சுற்றுலா உள்ளிட்ட எல்லாத் தகவல்களையும் இந்தப்பதிவு விவரிக்கிறது. Continue reading

Posted in சுற்றுலா, தொல்லியல், படிமக்கலை, வரலாறு | Tagged , , , , , , | 8 பின்னூட்டங்கள்

மஸ்ரூர் ஒற்றைக் கற்றளிகள்: நாகரா பாணி குடைவரைக் கோவில் வளாகம்

இமயமலையின் தௌலதார் மலைத்தொடரின் பியாஸ் நதி பாயும் நிலப்பரப்பில் உள்ள ஓர் அழகிய குன்றின் உச்சியில் மஸ்ரூர் ஒற்றைக் கற்றளிகள் என்னும் வகையிலான குடைவரைக் கோவில்கள் (Masrur Monolithic Rock-cut Temples, also known as Masroor Monolithic Rock-cut Temples) அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குடைவரைக் கோவில் ஒற்றைக்கல்லில் அகழப்பட்ட கோவில் தொகுதி ஆகும். இக்கோவில் அருமை அழகுடன் உங்களைக் கவர்ந்திழுக்கும் ஓர் இடமாகும். இஃது இமயமலையின் பிரமிடு என்று, இப்பகுதி மக்களால், அன்புடன் அழைக்கப்படுகிறது.

இக்கோவில்கள் இந்தோ-ஆரிய கலைப்பாணியில் (Indo-Aryan Style), நாகரா கட்டடக்கலை மரபில் (Nagara Architectural Tradition) அகழப்பட்ட 15 குடைவரைக் கோவில்களின் தொகுதி (Group of 15 Rock-cut Temples) ஆகும். இமாச்சல பிரதேசத்தின் காங்க்ரா மாவட்டத்தில் மிகவும் அறியப்படாத கோவில்களில் ஒன்றான இது, தனித்துவம் மிக்க ஒற்றைக்கல் கட்டுமானம் ஆகும். இஃது இந்தியாவின் முக்கியமான குடைவரைக் கோவில்களில் ஒன்றாக எண்ணப்படுகிறது. மாமல்லபுரத்தின் ஐந்து இரதங்கள் (ஒற்றைக்கல் மண்டபங்கள்), இராஷ்டிரகூட மன்னன் முதலாம் கிருஷ்ணனால் அகழப்பட்ட எல்லோரா 16 ஆம் குகை எண் கொண்ட கைலாசநாதர் கோவில், தர்மநாத் கோவில், தம்மர் (Dharmanath temple at Dhammar) (இராஜஸ்தான்) போன்ற குடைவரைக் கோவில்களுக்கு இணையாக மஸ்ரூர் கோவில் தொகுதி   எண்ணப்படுகிறது. Continue reading

Posted in குடைவரைக் கோவில், கோவில், சுற்றுலா, படிமக்கலை | Tagged , , , , , , , | 8 பின்னூட்டங்கள்

தொண்டூர்: பஞ்சனாப்பாடி குன்றில் சமணர் குகைத்தளங்கள், பல்லவர் கால விண்ணாம்பாறை விஷ்ணு சிற்பம்

விழுப்புரம் மாவட்டத்தில் சமணம் செழித்தோங்கியது. இம்மாவட்டத்தில் கி.மு. முதல் நூற்றாண்டு தொடங்கிப் பல சமண சமயச் சான்றுகள் கிடைத்துள்ளன. செஞ்சி வட்டத்தில் உள்ள மலைக்குன்றுகளில் 2000 ஆண்டுகள் பழமையான சமணர் குகைத் தளங்களும், கற்படுக்கைகளும், தமிழ் பிராமிக் கல்வெட்டுகளும், பாறைகளில் செதுக்கப்பட்ட சமண தீர்த்தங்கரர்களின் புடைப்புச் சிற்பங்களும் காணக்கிடைக்கின்றன.

தொண்டூர் கிராமத்தின் அருகே பஞ்சனாப்பாடி என்ற மலைக்குன்றில் அமைந்துள்ள இயற்கையான சமணர் குகைத் தளம், கற்படுக்கைகள், 23 ஆம் தீர்த்தங்கரரான பார்சுவனாதரின் புடைப்புச் சிற்பம் மற்றும் தமிழ் பிராமிக் கல்வெட்டு ஆகியவற்றைக் காணலாம். கல்வெட்டு கி.பி. 3 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது என்றும் பார்சுவனாதரின் புடைப்புச் சிற்பம் கி.பி. 8 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது என்றும் கணிக்கப்பட்டுள்ளன. இந்தச் சமணர் குகைத்தளம் தொல்லியல் துறையினரின் பராமரிப்பில் இல்லாதது வியப்புக்குரியது.  பராமரிப்பு இல்லாமல் பாழடையும் இந்த நினைவுச் சின்னத்தைப் பாதுகாக்க வேண்டியது மிகவும் இன்றியமையாதது ஆகும். 

தொண்டூர் அருகே வயல் வெளியில், விண்ணாம்பாறை என்று அழைக்கப்படும் தனிப் பாறையில் புடைப்புச் சிற்பமாகச் செதுக்கப்பட்டுள்ள சிற்பத் தொகுதியில் விஷ்ணு வலமிருந்து இடமாகப் பள்ளிகொண்ட கோலத்தில் அனந்தசயன விஷ்ணுவாக யோக நித்திரையில் காட்சி தருகிறார். மூன்றாம் நந்திவர்ம பல்லவன் காலத்தில் செதுக்கப்பட்ட இந்த அனந்தசயன விஷ்ணுவின் நீண்ட கிரீடமகுடம் கம்போடிய படிமவியல் கலைப்பாணியை நினைவுபடுத்துகிறது.    கம்போடியா நாட்டுடன் பல்லவர்கள் கொண்டிருந்த தொடர்புக்கு சான்றாக அமைந்துள்ளதாக வரலாற்று அறிஞர்கள் கருதுகிறார்கள். Continue reading

Posted in சமண சமயம், தொல்லியல், படிமக்கலை, வரலாறு | Tagged , , , , , , , , , , | 12 பின்னூட்டங்கள்