Category Archives: புனைகதை

எர்னெஸ்ட் ஹெமிங்வே: புகழ்பெற்ற அமெரிக்க நாவலாசிரியர்

எர்னெஸ்ட் ஹெமிங்வே ஒரு அமெரிக்க புனைகதை எழுத்தாளர். இருபதாம் நூற்றாண்டின் தலைசிறந்த எழுத்தாளர்களில் ஒருவர். தனித்தன்மை வாய்ந்த எழுத்துநடை, மிகக் குறைவான சொற்களைப் பயன்படுத்தி எழுதுதல் போன்றவை இவருக்கு நிறைய வாசகர்களைப் பெற்றுத் தந்தன. இந்த அமெரிக்கர் எழுதிய  ஏழு நாவல்கள், ஆறு சிறுகதைத் தொகுப்புகள் மற்றும் இரண்டு கட்டுரைத் தொகுப்புகள் புகழ் பெற்றவை. இவர் இறந்த பின்பும் இவருடைய சில படைப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. ஹெமிங்வேயுடைய கதைகளின் மாபெரும் வெற்றிக்குக் என்ன காரணம்?  இந்த எழுத்தாளருடைய புனைகதைப் பாத்திரப் படைப்புகள் தனித்தன்மையுடன் கட்டமைக்கப்பட்டுள்ளது என்பது விமர்சகர்கள் கருத்தாகும்.

இவருடைய கதைகளில், காதல் (Love), போர் (War), இறப்பு (Death), வனாந்திரம் (Wilderness), பற்றிய இவருடைய அனுபவங்களே பிரதிபலித்தன. நவீன கலாசாரத்தின் மீது அதிருப்தியுடன் (Dissatisfaction on Modern Culture) இருந்துள்ளார். இவருடைய The Old Man and the Sea  (கிழவனும் கடலும்) என்ற புதினம் (நாவல்) 1953 ஆம் ஆண்டிற்கான புலிட்சர் (Pulitzer) பரிசையும் 1954 ஆம் ஆண்டுக்கான நோபல் பரிசையும் (இலக்கியம்) பெற்றது. இந்த நாவல் 1958 ஆம் ஆண்டு திரைப்படமாகவும் வெளிவந்து பெரும்புகழ் பெற்றது. இவருடைய எல்லாப் படைப்புகளுமே ஆங்கிலப் புனைகதை இலக்கியப் பரப்பில் செம்மொழித் தகுதி பெற்றனவாகும். Continue reading

Posted in அமெரிக்கா, ஆங்கில இலக்கியம், இலக்கியம், புனைகதை | Tagged , , , , , , | 7 பின்னூட்டங்கள்