Category Archives: மதுரை

திருப்பரங்குன்றம் குகைத்தளங்கள், குடைவரைக் கோவில்கள்: தொல்லியல் மற்றும் வரலாற்றுப் பார்வை

திருப்பரங்குன்றம் என்னும் ஆன்மீகச் சுற்றுலா நகரம், சமணம் மற்றும் சைவ மதத்தைச் சேர்ந்த பல வழிபாட்டுத் தலங்களையும் தொல்லியல் நினைவுச்சின்னங்களையும் உள்ளடக்கியுள்ளது. சங்ககாலம் முதல், வரலாறு மற்றும் தொல்லியல் ரீதியாக முக்கியத்துவம் பெற்றுள்ள இவ்வூர் மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் வட்டத்தில் அமைந்துள்ளது. எண்பெருங்குன்றங்கள் என்னும் சமணர்கள் வாழ்ந்த குன்றுகளில் ஒன்று திருப்பரங்குன்றம் ஆகும். லிங்க வடிவில் அமைந்த இம்மலையின் வடமேற்குப் பகுதியில் உள்ள அமண்பாழி அருகே உள்ள ஒரு குகைததளத்தில் சமணர் கற்படுக்கைகளும், மூன்று தமிழ் பிராமி கல்வெட்டுகளும் கண்டறியப்பட்டுள்ளன.

மலையடிவாரத்தில் உள்ள பழனியாண்டவர் கோவிலருகில் அமைந்துள்ள சுனையை ஒட்டியுள்ள பாறையில் மூன்று சமண தீர்த்தங்கரர்களின் உருவங்கள் புடைப்புச் சிற்பங்களாகச் செதுக்கப்பட்டுள்ளன. மலையுச்சியில், காசி விசுவநாதர் கோவிலையொட்டி அமைந்துள்ள மச்சமுனி சன்னதி அருகேயுள்ள பாறையில் கி.பி 8 – 9 ம் நூற்றாண்டைச் சார்ந்த இரண்டு சமண தீர்த்தங்கரர்களின் உருவங்கள் செதுக்கப்பட்டுள்ளன. அருகில் தமிழ் பிராமி கல்வெட்டு ஒன்றும் கண்டறியப்பட்டுள்ளது.

மலையின் தென்பகுதியில் (தென்பரங்குன்றம்), உமை ஆண்டார் குடைவரைக் கோவில் உள்ளது. சுப்பிரமணிய சுவாமி கோவிலின் கருவறை, ஒரு குடைவரைக் கோவிலாகும். இங்கு குடைவரைகள் அகழப்பட்டு, சுப்பிரமணிய சுவாமி,, துர்காதேவி, கற்பக விநாயர், சத்தியகிரீஸ்வரர், பவளக்கனிவாய்ப் பெருமாள் ஆகிய ஐந்து தெய்வங்களுக்குச் சன்னதிகள் அமைக்கப்பட்டுள்ளன. பாண்டிய மன்னன் பராந்தக நெடுஞ்சடையனின் (கி.பி. 765-815) படைத்தலைவனான சாத்தன் கணபதி என்பவன் இக்குடைவரைக் கோவிலைச் சிவனுக்காக எழுப்பியதாக ஒரு கல்வெட்டுச் செய்தி பதிவு செய்துள்ளது.
Continue reading

Posted in குடைவரைக் கோவில், சமண சமயம், தொல்லியல், மதுரை, வரலாறு | Tagged , , , , , , , , , , , , | 8 பின்னூட்டங்கள்

ஜெயலலிதா விடுதலைக்காக மதுரையை ஸ்தம்பிக்க வைத்த காவடி திருவிழா

மக்களிடம் இவர்களது செல்வாக்கை காட்டுவதற்காகவும், முக்கியமாக பெங்களூருவில் சிறையிலிருக்கும் ஜெயலலிதா,  இவர்களுடைய விசுவாசத்தைத் தெரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காகவும் அ.தி.மு.க. அமைச்சர்களும், எம்.எல்.ஏ.க்களும் பல நூதனமான நிகழ்ச்சிகளை அரங்கேற்றி வருகிறார்கள். Continue reading

Posted in அரசியல், தமிழ்நாடு, மதுரை | Tagged , , | பின்னூட்டமொன்றை இடுக