Category Archives: மலையாளம்

பாலயூர் மகாதேவர் கோவில் (திருச்சூர் மாவட்டம், கேரளா) இடிக்கப்பட்டு அங்கு செயின்ட் தாமஸால், கி.பி. 52 ஆம் ஆண்டு, செயின்ட் தாமஸ் சிரோ-மலபார் கத்தோலிக்க தேவாலயம் கட்டப்பட்டதா?

பாலயூர் மகாதேவா கோவில் (English: Palayur Mahadeva Temple, Malayalam: പാലയൂർ മഹാദേവക്ഷേത്രം) , கேரளாவின் திருச்சூர் மாவட்டம், சாவக்காடு வட்டம் பாலயூரில் (Malayalam: പാലയൂർ) அமைந்திருந்த தொன்மை மிக்க கோவிலாகும். இந்த கோயில் சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்டது. இந்தக் கோவில் சேர மன்னர்களின் ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்டதாக நம்பப்படுகிறது.

ஆனால் இக்கோவில் இன்று இல்லை. இந்தக் கோவில் கிறிஸ்தவர்களால் இடிக்கப்பட்டு, அந்த இடத்தில் புனித தாமஸ் சிரோ-மலபார் கத்தோலிக்க தேவாலயம், கட்டப்பட்டது. இந்தச் சிரிய தேவாலயம் (English: Syrian church) கி.பி 52 ஆம் ஆண்டளவில் இயேசு கிறிஸ்துவின் பன்னிரண்டு சீடர்களில் (அப்போஸ்தலர்களில்) ஒருவரான செயின்ட் தாமஸால் நிறுவப்பட்டதாகக் கிறிஸ்தவர்களால் நம்பப்படுகிறது. இது குறித்த விரிவான பதிவு இதுவாகும்.
Continue reading

Posted in கேரளா, கோவில், சுற்றுலா, மதம், மலையாளம் | Tagged , , , , , , | 2 பின்னூட்டங்கள்

‘அக்னிசாட்சி (புதினம்), ‘அந்தர்ஜனம் – ஒரு நம்பூதிரிப் பெண்ணின் நினைவுகள்’ : கேரளத்து நம்பூதிரிகள் இனத்தில் நிலவிய பெண்ணடிமைத்தனம் பற்றி விவரிக்கும் இரண்டு நூல்கள் அறிமுகம்

பெண்ணடிமைத்தனத்திற்கு எதிராகப் பெண்ணியவாதிகள், வரலாற்றின் எல்லாக் காலகட்டங்களிலும் குரல் எழுப்பியுள்ளனர். கேரளாவில் நிலவிய பெண்ணடிமைத்தனத்தைப் பற்றிப் பேசும்போது, நம்பூதிரி (கேரளத்துப் பிராமணர்கள்) இனத்தில் நிலவிய பெண்ணடிமைத்தனத்தைப் பற்றியும் ஆணாதிக்க சமுதாயம் விதித்த எண்ணற்ற அடக்குமுறைக் கட்டுப்பாடுகள் பற்றியும் கட்டாயம் பேசத்தான் வேண்டும். இளம் விதவைகள் உள்ளிட்ட நம்பூதிரிப் பெண்களின் உரிமை எவ்வாறெல்லாம் மறுக்கப்பட்டது? முதலில் இவர்கள் பெண்கள் என்பதானாலும் கேரளத்தின் உயர்ந்த வகுப்பைச் சேர்ந்தவர்கள் என்பதனாலும் வீட்டிற்குள்ளேயே அடக்கி வைத்து அடிமைப்படுத்திக் கொடுமை செய்யப்பட்டார்கள்.

கீழ்ககாணும் இரண்டு நூல்களும் ஆணாதிக்கம் மிகுந்த நம்பூதிரி வகுப்பில் நிலவிய பெண்ணடிமைக் கொடுமைகள் குறித்த விரிவான தகவல்களைப் பதிவு செய்துள்ளன.

1. லலிதாம்பிகா அந்தர்ஜனம் எழுதி, 1976 ஆம் ஆண்டு, வெளியிடப்பட்ட புதினமான ‘அக்னிசாட்சி,’ (അഗ്നിസാക്ഷി) (ஆங்கில மொழிபெயர்ப்பு வசந்தி சங்கரநாராயணன்) வெளியீடு Oxford University Press, 1980 பக். 208.
2. தேவகி நிலையங்கோடு எழுதி 2011 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட வாழ்க்கை நினைவுக் குறிப்பான ‘அந்தர்ஜனம்: ஒரு நம்பூரிப் பெண்ணின் நினைவுகள்’ (അന്തർജനം: ഒരു നമ്പൂതിരി സ്ത്രീയുടെ ഓർമ്മക്കുറിപ്പുകൾ) (ஆங்கில மொழிபெயர்ப்பு, இந்திரா மேனன் மற்றும் ராதிகா மேனன்) வெளியீடு Oxford University Press, 2012. பக். 111

‘அக்னிசாட்சி’ என்ற புதினமும் ‘அந்தர்ஜனம்’ என்ற வாழ்க்கை நினைவுக் குறிப்பும் அக்காலத்தில் நிலவிய பெண்ணடிமை முறையினை விவரிக்கும் நேரடி சாட்சிகளாகும். நம்பூதிரிகள், சாதியின் பெயரால் தன் இனத்துப் பெண்களின் மீது விதித்த கடுமையான சாதிக்கட்டுப்பாடுகளும் அடக்குமுறையும், பெண்ணடிமை வாழ்க்கை குறித்த சமூகப் பிரச்சனைகளையும் இவர்களுடைய எழுத்துக்களில் நாம் காணலாம். Continue reading

Posted in கேரளா, பெண் விடுதலை, மலையாளம் | Tagged , , , , , , , | 6 பின்னூட்டங்கள்

ஆளும்மூட்டில் மாளிகை: மணிச்சித்ரத்தாழு மலையாளத் திரைப்படத்திற்கான கதைக்கரு வழங்கிய பேய் மாளிகை

‘ஆளும்மூட்டில் மேடா,’ என்ற தறவாட்டு மாளிகையின் (பண்டைய கேரளாவின் பாரம்பரிய வீடு) (Tharavad), காரணவர் பொறுப்பிலிருந்த கொச்சு குஞ்சு சாணார் என்ற ஈழவ நிலச்சுவான்தார் அவருடைய மருமகனால் படுகொலை செய்யப்படுகிறார். திருவிதாங்கூர் மன்னர்களின் ஆட்சிக் காலத்தில், நிகழ்ந்த கொடூரமான படுகொலையும், பேய் நடமாட்டம் உள்ளதாக நம்பப்படும் மர்ம மாளிகையும் ஒரு பிரபல மலையாளப் படத்தின் திரைக்கதையாகப் புனையப்பட்டுள்ளது. மது முட்டம் (Madhu Muttom) என்ற திரைக்கதை ஆசிரியர் எழுதி, ஃபாசிலின் இயக்கத்தில் படமாக்கப்பட்ட ‘மணிசித்திரதாழு’ என்ற உளவியல் அடிப்படையிலான மலையாளத் திகில் திரைப்படம், இங்கு நடைபெற்ற மர்மமும் சோகமும் நிறைந்த நிகழ்வுகளை அடிப்படையாகக் கொண்டதாகும். Continue reading

Posted in கேரளா, மலையாளம், வரலாறு | Tagged , , , | பின்னூட்டமொன்றை இடுக