Category Archives: மேலாண்மை

கிருஷ்ணபட்ணம் சித்தேஸ்வரசுவாமி கோவிலில் ஐந்நூற்றுவர் வணிகக் குழுவினர் பற்றிய விரிவான தகவலுடன் கல்வெட்டுகள்

ஆந்திரப் பிரதேச மாநிலம், எஸ்.பி.எஸ்.ஆர் நெல்லூர் மாவட்டம், முதுக்கூர் மண்டலில், வங்கக் கடற்கரையை ஒட்டி, அமைந்துள்ள சிறு கிராமம் கிருஷ்ணபட்ணம் (Telugu: కృష్ణ పట్నం) பின் கோடு 524344 ஆகும். இவ்வூர் தனியாரால் கட்டமைக்கப்பட்டுத் தனியாருக்குச் சொந்தமான கிருஷ்ணபட்ணம் துறைமுகம் ஆகும். Krishnapatnam Port Company Limited (KPCL) என்ற பெயரில் பிரபலமாக அறியப்படும் இத்துறைமுகம், ஆழமிக்கதும் எல்லாப் பருவநிலைகளுக்கும் ஏற்றதுமான துறைமுகம் ஆகும்.

இந்தக் கிராமம், ஒரு காலத்தில் பன்னாட்டுத்  துறைமுகபட்டணமாகத் திகழ்ந்தது என்பதை நம்புவது சற்று கடினம்தான். தூர கிழக்கு நாடுகள் (far-eastern) மற்றும் தென்கிழக்கு ஆசியா நாடுகளில் நிலைபெற்றிருந்த பேரரசுகளுடன் (south-eastern Asian empires) விரிவான வணிகம் மேற்கொண்ட  பன்னாட்டு வணிகர் குழுவினரின் (International Merchant-Guilds) துறைமுகப்பட்டணமாகக் கிருஷ்ணபட்ணம் விளங்கியது என்பது சற்று வியப்பான செய்திதான். இவ்வூரில் சித்தேஸ்வரருக்கு  அர்ப்பணிக்கப்பட்ட, கி.பி. 16 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சிவன் கோவில் அமைந்துள்ளது. மனும சித்தேஸ்வரம் (Manuma-Siddhisvaram) என்ற பெயருடன் இக்கோவில் திகழ்ந்துள்ளது. Continue reading

Posted in தொல்லியல், மேலாண்மை, வரலாறு | Tagged , , , , , , , | 7 பின்னூட்டங்கள்

ஜோஹாரி விண்டோ மூலம் உங்களை நீங்களே பார்த்துக் கொள்ளுங்கள்

ஓர் அலுவலகம் அல்லது ஒரு தொழிற்சாலையில் என்ன நடக்கிறது என்று பார்ப்போமா? இங்கு நீங்கள் வேலை செய்கிறீர்கள். உங்களுடைய நண்பர் அல்லது ஒரு சக பணியாளர் நீங்கள் ஒரு குறிப்பிட்ட வழியில் செயல்படுவதைப் பற்றிய கருத்தினை உங்களுக்குச் சொல்வதாக வைத்துக் கொள்வோம். இந்தச் சமயங்களில் நீங்கள் அவர்களுடன் உடன்படுவதுண்டா? சரி! அவ்வாறெனில் இது போன்ற கருத்துப் பரிமாற்றங்கள் உங்களுடன் அடிக்கடி நிகழ்வதுண்டா? உங்கள் நடவடிக்கைகளைப் பற்றி உங்களுக்கு எவ்வளவு தெரியும்? உங்கள் நடவடிக்கை குறித்து மற்றவர்கள் உங்களை எப்படிப் பார்க்கிறார்கள்? உங்கள் அலுவலகத்திலோ தொழிற்சாலையிலோ நீங்கள் பெரும்பாலான சக ஊழியர்களைப் போல  இருந்தால், உங்கள் சக ஊழியர்களோ நண்பர்களோ உங்களைப்பற்றி உங்களுக்கு நிறையச் சொல்வதற்கு வாய்ப்புள்ளது. நீங்கள் இவற்றைச் சரி என்று ஒப்புக்கொள்ளலாம் அல்லது மறுக்கலாம்.

இவ்வாறு அலுவலகம், தொழிற்சாலை போன்ற இடங்களில் ஒரு குழுவாக இணைந்து இயங்கும் தனிநபர்களிடையே சுய-விழிப்புணர்வு மற்றும் பரஸ்பரப் புரிதல் ஆகியவற்றை விளக்கவும் மேம்படுத்தவும் ஒரு மேலாண்மை உத்தியைப் (Management Technique) பயன்படுத்துகிறார்கள். இதற்கு ஜோஹாரி விண்டோ மாதிரி அல்லது ஜோஹாரி ஜன்னல் மாதிரி (Johari Window Model) என்று பெயர். Continue reading

Posted in மேலாண்மை | Tagged , , , , | 5 பின்னூட்டங்கள்