Category Archives: மொழி

நட்ஜ் மீ: உங்கள் ஸ்மார்ட் போனில் ஆங்கிலத் திறனை மேம்படுத்த உதவும் கூகுள் அன்ராய்டு செயலி

நட்ஜ்.மீ என்பது ஆன்ராய்டு மொபைல் செயலியாகும். இந்தச் செயலியைக் கூகுள் பிளே ஸ்டோரிலிருந்து பதிவிறக்கிக் கொள்ளலாம். ஆங்கிலத்தை எளிதாகவும், சுவையாகவும், திறம்படவும் கற்றுக் கொள்ளவும் மேம்படுத்தவும் இந்தச் செயலி உங்களுக்கு உதவுவது திண்ணம். Continue reading

Posted in கணிதம், கற்பிக்கும் கலை, மொழி | Tagged , , , , , , , | 4 பின்னூட்டங்கள்

கல்வெட்டு எழுத்தியல் அறிஞர் பத்மஸ்ரீ ஐராவதம் மகாதேவன் மறைந்தார்

மிகச் சிறந்த கல்வெட்டு எழுதியல் அறிஞரான பத்மஸ்ரீ ஐராவதம் மகாதேவன் அவர்கள் சென்னை ஆதம்பாக்கத்தில் உள்ள அவரது இல்லத்தில் இன்று (நவம்பர் 26 2018) அதிகாலை 4 மணி அளவில் காலமானார். .

இவர் நீண்ட நாள்களாகவே உடல்நலம் இல்லாமல் சிகிச்சை பெற்று வந்தார். இவரது இறுதிச் சடங்கு, சென்னை பெசன்ட் நகர் மின் மயானத்தில் நவம்பர் 26 2018 ஆம் தேதி மாலை நடைபெறுகிறது. 

இவர் மிகச் சிறந்த களப்பணியாளர் தமிழகத்தில் நடைபெற்ற தொல்லியல் ஆய்வுகளில் இவர் ஆற்றிய பணிகள் போற்றுதற்குரியது. தமிழ் பிராமி ஆய்வுகளில் முன்னோடியாகத் திகழ்ந்த இவர் பல கட்டுரைகளையும் எழுதியுள்ளார். சிந்துசமவெளி எழுத்துகளுக்கும் திராவிட மொழி குடும்பத்துக்கும் உள்ள உறவை சொன்னவர் பத்மஸ்ரீ ஐராவதம் மகாதேவன் ஆவார். இவரது மறைவு தமிழுக்கும் தொல்லியலுக்கும் ஈடு செய்ய முடியாத இழப்பாகும். Continue reading

Posted in தொல்லியல், மொழி, வரலாறு | Tagged , , , , | 8 பின்னூட்டங்கள்

வினோத் ராஜனின் அட்சரமுகம்: இருபது தெற்காசிய லிபிகளுக்கான ஒலிபெயர்ப்பு மென்பொருள்

வினோத் ராஜன் இந்திய மொழியியல், எழுத்துரு (font) மற்றும்  யூனிகோடு சார்ந்த கணினியியலில்  (Computing) அதிக ஆர்வமுடைய இளைஞர். இவர் வடிவமைப்பில் உருவான அட்சரமுகம் என்ற ஒலிபெயர்ப்பு மென்பொருள் (Phonetic Software) பலரின் பாராட்டைப் பெற்றுள்ளது. இவரது தாய்மொழி கூடத் தமிழ் அல்ல. என்றாலும் தமிழ்நாட்டு மக்கள் தமிழ் சார்ந்தவற்றைக் கற்க, ஊக்கப்படுத்த, தமிழில் மொழியியல் சார்ந்த மென்பொருட்கள் பல மென்பொருட்களை உருவாக்கவேண்டும் என்பது இவரது பேரவா. இவர் வடிவமைத்த அனுநாதம் தமிழ் எழுத்துக்களைப்  பன்னாட்டு ஒலிப்பியல் அகரவரிசையில் (International Phonetic Alphabet (IPA) மாற்றும் கருவி ஆகும். மேலும் இவர் வடிவமைத்த அவலோகிதம் – தமிழ் யாப்பு (Tamil Prosody) மொழியியல் சார்ந்த மென்பொருளாகும். தமிழில் மரபுப் பா எழுதுவோருக்கு இந்த  மென்பொருள் பேருதவியளிக்கும். இந்தப் பதிவு அட்சரமுகம் ஒலிபெயர்ப்பு மென்பொருள் பற்றி விவரிக்கிறது. Continue reading

Posted in இந்தியா, தமிழ், மொழி | Tagged , , , , , , , | 5 பின்னூட்டங்கள்