இராமோஜி ஃபிலிம் சிட்டி, ஹைதராபாத்

நீங்கள் உங்கள் வார விடுமுறையை முழுமையாகச் செலவிட்டு ஓய்வெடுக்கவோ அல்லது நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் அற்புதமான நேரத்தைச் செலவிடவோ அல்லது உங்கள் புது மனைவியுடன் தேன்நிலவு செல்லவோ விரும்புகிறீர்களா? ராமோஜி ஃபிலிம் சிட்டியில், உங்களுடைய எதிர்பார்ப்பிற்கு மேலாகவே, நீங்கள் விரும்பிய எல்லாவற்றையும் சிறப்பாக அனுபவித்து மகிழலாம்.

இராமோஜி ஃபிலிம் சிட்டி அல்லது இராமோஜி திரைப்பட நகரம் (Ramoji Film City) 1996 ஆம் ஆண்டில் இராமோஜி குழுமத்தால் (Ramoji Group of Companies) திட்டமிட்டு அமைக்கப்பட்ட மிகப்பெரிய திரைப்பட நகரம் ஆகும். ஹைதராபாத் நகரிலிருந்து 30 கி.மீ. தொலைவில், 674 ஹெக்டேர் (1666 ஏக்கர்) பரப்பளவில், உலகத் தரத்துடன் கூடிய திரைப்படத் தயாரிப்பு வசதிகளுடன், பரந்து விரிந்த இந்தத் திரைப்பட நகரம் மில்லியன் கனவுகள் நகரம் (Land of Million Dreams) என்று விவரிக்கப்படுகிறது. ஆரவாரமிக்க பகட்டான அமைவிடம், அழகான நிழற்சாலைகள், தத்ரூபமான திரைப்படச் செட்டுகள் மற்றும் தலைசிறந்த உள்கட்டமைப்புகளுடன் கூடிய சாலைகள் மற்றும் பல தலைப்புகளில் அமைந்த பூங்காக்கள் (Theme Parks on Various Subjects) எல்லாம் இந்த வளாகத்தைத் திரைப்படத் தயாரிப்பளர்களின் மிகப்பெரிய சொர்க்கம் என்றும் சித்தரிக்கிறார்கள்.

இந்தச் செல்லுலாய்டு வளாகத்தில் நுழைந்தால் கனவுகள், கற்பனை உலகங்கள், எல்லாம் உருமாற்றம் பெற்றுத் திரைப்படங்களாக்கும் வித்தையை நேரிடையாகக் காணலாம். உங்களுடைய குழந்தை உள்ளமும், ரசிகத்தன்மையையும், உங்களுக்குள் உறங்கிக் கொண்டிருக்கும் திரைப்படம் தயாரிக்கும் ஆர்வமும் இங்குள்ள பல திரைப்படச் செட்டுகளுடன் ஒன்றுவதை நீங்கள் நிச்சயம் உணர்வீர்கள். சுற்றுலாப் பயணிகள் மற்றும் சினிமா இரசிகர்களை ஈர்க்கும் வண்ணம் பல இந்த அற்புதமான இடங்களை நீங்கள் இந்த வளாகத்தில் காணலாம். Continue reading

Advertisements
Posted in சுற்றுலா, திரைப்படம் | Tagged , , , , , , , | 6 பின்னூட்டங்கள்

சமஸ்கிருதத்தில் K எழுத்துடன் தொடங்கும் திராவிடச் சொற்கள்: சிந்து மொழியில் சில பூர்வாங்கமான புரிதல்கள். முனைவர். நா.கணேசன் (ஹூஸ்டன், டெக்சாஸ், யு.எஸ்) சென்னையில் ஆற்றிய சொற்பொழிவு

அமெரிக்க நாட்டின், டெக்சாஸ் மாநிலம், ஹூஸ்டன் நகரில் விண்வெளி இயங்கியல் (Space Dynamics) பொறியாளராகப் பணியாற்றி வரும் முனைவர் நா.கணேசன் கடந்த டிசம்பர் 15, 2018 ஆம் தேதியன்று மாலை 05:30 மணியளவில் சென்னை, தரமணி, 3 ஆம் குறுக்குச் சாலை, சி.பி.டி வளாகத்தில் அமைந்துள்ள ரோஜா முத்தையா நூலகத்தில்:

சமஸ்கிருதத்தில் K எழுத்துடன் தொடங்கும் திராவிடச் சொற்கள்: சிந்து மொழியில் சில பூர்வாங்கமான புரிதல்கள். (Some K Initial Dravidian Loan  Words in Sanskrit: Preliminary Observation on the Indus Language).

என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார்.

முதலை ஒரு சின்னமாகச் சிந்து சமவெளி நாகரிகம் (Indus Valley civilisation) மற்றும் பண்டைய தமிழர் நாகரிகங்களில் (ancient Tamil Civilization) பயன்படுத்தப்பட்டது பற்றி இவருடைய உரை அமைந்தது. Continue reading

Posted in தொல்லியல், வரலாறு | Tagged , , , , , , , | 8 பின்னூட்டங்கள்

பிரான்மலை கொடுங்குன்றநாதர் கோவில்: திசையாயிரத்து ஐந்நூற்றுவர் வணிகக் குழுவினர் கல்வெட்டு

கொடுங்குன்றநாதர் கோவில் சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி வட்டம், பிரான்மலை பின் கோடு 630502 கிராமத்தில் அமைந்துள்ளது. பாண்டிய நாட்டுத் தேவாரப் பதிகளில் ஐந்தாவதாகக் கருதப்படும் கொடுங்குன்றநாதர் கோவில் சிவனுக்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. சங்க காலத்தில் கடையெழு வள்ளல்களில் புகழ்பெற்ற வேள்பாரி என்ற வேளிர் குடிப்பிறந்த குறுநிலமன்னன் ஆட்சி செய்த இப்பகுதிக்குப் பறம்பு நாடு என்று பெயர். இவன் பறம்பு மலையைத் தலைமையிடமாகக் கொண்டு ஆண்டுவந்தான். பறம்பு மலை என்ற பெயர் மருவி பிரான்மலை ஆயிற்று.

திசையாயிரத்து ஐந்நூற்றுவர் என்ற புகழ்பெற்ற வணிகக் குழுவினர் இப்பகுதியில் வணிகம் புரிந்துள்ளனர். அழகிய திருசிற்றம்பலமுடைய நாயனார் (கொடுங்குன்றநாதர்) கோவிலில் அமைந்திருந்த திருக்காவனத்தில் ஐந்நூற்றுவரின் பதினோரு  குழுக்கள் (Eleven Groups of Ainurruvar) கூடினர். தங்கள் வணிகப் பொருட்களின் மீது, சுமைக்கேற்றவாறு குறிப்பிட்ட தொகையைப் பட்டணப் பகுடியாக விதித்தனர். இதன் மூலம் வசூலாகும் தொகையைக் கோவில் திருப்பணிகளுக்கு அளிப்பதாக ஒரு மனதாக ஒப்புக்கொண்டனர். இந்தச் செய்தியினை இங்குள்ள கி.பி. 13 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கல்வெட்டு ஒன்று பதிவு செய்துள்ளது. Continue reading

Posted in தமிழ், தொல்லியல், வரலாறு | Tagged , , , , , , , , | 6 பின்னூட்டங்கள்