Tag Archives: அரசியல்

பார்த்திவசேகரபுரம் செப்பேடு: ஆய் மன்னன் கோகருந்தடக்கன் நிறுவிய பார்த்தசாரதி கோவிலும் சாலையும் (குருகுலமுறை உயர்கல்வி நிறுவனம்)

பார்த்திவசேகரபுரம் பார்த்தசாரதி கோவில் (விஷ்ணுவின் கிருஷ்ண அவதாரம்), தமிழ்நாட்டின் கன்னியாகுமரி மாவட்டம், முஞ்சிறை வட்டம், பார்த்திவபுரத்தில் அமைந்துள்ளது. ஆய்குல மன்னன் கருநந்தடக்கன் என்னும் கோகருநந்தடக்கன் (கி.பி. 857–885) 28 ஆண்டுகள் ஆட்சி செய்தான். இம்மன்னன் முஞ்சிறை கோவில் ஊராளர் சபையினரிடம் நெல் வயலுக்கு ஈடாகக் கொடுத்து பரிவர்த்தனை வாயிலாகக் கோவில் கட்டுவதற்காகப் பெற்ற நிலத்தில், கி.பி. 857 ஆம் ஆண்டு, பார்த்தசாரதிக்குக் கோவில் கட்டினான். “ஸ்ரீ வல்லபன்”, “பார்த்திவசேகரன்” ஆகிய பட்டங்களைச் சூடிக்கொண்டிருந்த கோகருநந்தடக்கன், இந்த கிராமத்திற்கு பார்த்திவசேகரபுரம் என்று தன் பட்டப்பெயரையே சூட்டினான். காந்தளூர் சாலை சட்டதிட்டங்களை முன்மாதிரியாகக் கொண்டு தொண்ணூற்றைந்து சட்டர்க்கு (மாணவருக்கு) ஒரு சாலையையும் (குருகுலமுறை உயர்கல்வி நிறுவனம்) உருவாக்கினான். வேதப் பயிற்சி தவிர, ஆயுதப் பயிற்சியும் இங்கு வழங்கப்பட்டது. கோவில் மற்றும் சாலை ஆகியவற்றை அமைத்த பின்னர், அவை முறையாக நடைமுறைப் படுத்துவதற்காக இம்மன்னன் திட்டமிட்டு உருவாக்கிய நிர்வாக விதிமுறைகள் ஹுஸுர் அலுவலக (பார்த்திவபுரம்) செப்பேட்டில் விரிவாகத் தரப்பட்டுள்ளன. அந்தக் காலத்தில் சாலைகள் (கல்வி நிறுவனங்கள்) எவ்வாறு செயல்பட்டன என்பதை இச்செப்பேட்டில் இருந்து அறியலாம்.
Continue reading

Posted in கற்பிக்கும் கலை, கல்வி, கேரளா, சமஸ்கிருதம், தொல்லியல், வரலாறு | Tagged , , , , , , , , , , , | 6 பின்னூட்டங்கள்

பல்லவர்கள் பேணிக் காத்த காஞ்சிக் கடிகை

தென்னிந்தியாவில் கடிகைகள் வடமொழிக் கல்விச் சங்கங்களாகத் (Academy) திகழ்ந்தன. கி.பி. நான்காம் நூற்றாண்டிலிருந்து காஞ்சிக் கடிகை பல்லவர்களின் முடியாட்சி (Monarchy), இறைமாட்சி, ஆட்சி அமைப்பு முறை (Polity), அரசியல் (Politics), அமைச்சு (Ministry), படையியல் (Military), குடியியல் (Civics) போன்ற துறைகளில் செல்வாக்குப் பெற்றிருந்தது. மன்னரைச் சேர்ந்து ஒழுகல் என்று குறள் கூறும் நெறிகளுக்கேற்ப பல்லவ மன்னர்களின் அவையில் இடம்பெற்றிருந்த  கடிகையார் மிகவும் இன்றிமையாத தருணங்களில், அரசின் சிக்கல்களுக்குத் தீர்வளிக்கும் அங்கமாக இருந்தனர். காஞ்சிபுரம், கட்டடக்கலைக்கு மட்டுமல்லாமல், தட்சஷீலா (கி.மு. 5 – கி.பி. 5 நூற்றாண்டு, பஞ்சாப், பாகிஸ்தான்) , நாளந்தா (கி.பி. 5 – கி.பி. 12, நூற்றாண்டு, பீகார்), விக்ரமஷிலா (கி.பி. 8 – 13 நூற்றாண்டு, பீகார்),   போன்ற புகழ்பெற்ற கல்வி நிறுவனங்களைப் போலவே, ஒரு வேதாகமப் பல்கலைக்கழகமாகவும் புகழ் பெற்றிருந்தது. காஞ்சிக் கடிகை காஞ்சிபுரத்தின் மேம்பட்ட வேதக் கல்வி மையம் (Advanced Vedic Education Centre) என்று பரவலாக மதிக்கப்பட்டது. இஃது இந்தியாவின் பல பகுதிகளிலிருந்தும் அறிஞர்களைத் தன்பால் ஈர்த்தது. நாளந்தாவில் இருந்த புத்தமத அறிஞரும் துறவியுமானர் தர்மபால காஞ்சியில் இருந்து வந்தவர் ஆவார். Continue reading

Posted in கற்பிக்கும் கலை, கல்வி, சமஸ்கிருதம், தொல்லியல், வரலாறு | Tagged , , , , , , , , , , , | 11 பின்னூட்டங்கள்

சூரியன் கிழக்கில் மறைந்தது: கலைஞர் கருணாநிதிக்கு அஞ்சலி

இந்தியத் திருநாட்டின் முதிர்ந்த இராஜதந்திரியும் (Statesman), திராவிட முன்னேற்றக் கழகத்தின் நீண்டநாள் (50 ஆண்டுகள்) தலைவரும், ஐந்து முறை தமிழ் நாட்டை ஆண்ட முதலமைச்சருமான கலைஞர் முத்துவேல் கருணாநிதி 2018 ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 07 தேதி செவ்வாய்கிழமையன்று மாலை 6.10 மணிக்கு உடல்நலக்குறைவால் காவேரி மருத்துவமனையில் காலமானார். இவர் பிறந்த நாளும் செவ்வாய்கிழமைதான்.  கடந்த ஜூன் மாதம் 03 தேதியன்று 94 வயதை நிறைவு செய்த இவர் அதே ஜூன் மாதம் 27 ஆம் தேதியன்று திமுகவின் தலைவராகப் பொறுப்பேற்றுக் கொண்ட  ஐம்பதாவது ஆண்டு விழாவையும் நிறைவு செய்தார். தமிழக அரசியலில் இரண்டு நூற்றாண்டுகளாக மாபெரும் சக்தியாக விளங்கியவர் கலைஞர். Continue reading

Posted in அரசியல் | Tagged , , , , | 9 பின்னூட்டங்கள்