Tag Archives: அருவி

சிவசமுத்திரம் நீர்வீழ்ச்சி, பீமேஸ்வரி சாகச விளையாட்டு மற்றும் இயற்கை முகாம்: கர்நாடகாவில் காவிரிக்கரை சுற்றுலா

காவிரியை அதன் கரையோரமாகவே சென்று முழுவதும் பார்த்துவிட வேண்டும் என்ற அவாவில் உந்தப்பட்டு, தி ஜானகிராமன், சிட்டி (பெ.கோ. சுந்தரராஜன்) ஆகிய இரண்டு எழுத்தாளர்கள் தலைக்காவிரி நோக்கிக் காரில் பயணம் மேற்கொண்டனர். இவர்களுடைய பயண அனுபவங்களைக் கட்டுரை நூலாகத் தொகுத்து “நடந்தாய்; வாழி, காவேரி!” என்ற தலைப்பில் காலச்சுவடு பதிப்பகம் வெளியிட்டுள்ளது. இந்த நூலை வாசித்த பின்னர் எப்படியாவது இந்த சிவசமுத்திரம் நீர் வீழ்ச்சியைப் பார்த்துவிடவேண்டும் என்ற வேட்கையில் ஒருநாள் பயணமாகச் சிவசமுத்திரம் நீர்வீழ்ச்சி, பீமேஸ்வரி காவிரி வனவிலங்கு சரணாலயம் மற்றும் மீன்பிடி முகாம் ஆகிய சுற்றுலாத் தலங்களுக்குச் சென்று வந்தோம். இந்தப் பயணம் பற்றிய பதிவு இதுவாகும். Continue reading

Posted in சுற்றுலா | Tagged , , , , , | 4 பின்னூட்டங்கள்

அரக்கு பள்ளத்தாக்கு சுற்றுலா 2: சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் இடங்கள்

அரக்கு பள்ளத்தாக்கிற்கு நீங்கள் சாலை வழியாகச் சென்றாலும் சரி இரயில் மூலமாகச் சென்றாலும் சரி இந்த மலைவாழிடத்தில் பல சுற்றுலாத் தலங்களைக் காணலாம். போரா குகைகள் உங்கள்  அரக்கு பள்ளத்தாக்குப் பயணத்தை அசாதரணமான பயணமாக்குவது உறுதி. தடிபுடி நீர்த்தேக்கம் (Tadi Reservoir), டைடா ஜங்கிள் பெல்ஸ் இயற்கை முகாம் (Tyda Jungle Bells Nature Camp) (38.7 கி.மீ.),  சங்க்டா அருவி (Sangda Falls) (20 கி.மீ.), அனந்தகிரி குன்று காப்பித் தோட்டங்கள் (Ananthagiri Hills Coffee Plantations) (19 கி.மீ.),  கலிகொண்டா காட்சிக் கோணம் (Galikonda Viewpoint) (2௦.5 கி.மீ), சாபாறை  அருவி (Chaaparai Water Cascade) (12.5 கி.மீ.), பத்மபுரம் தாவரவியல் பூங்கா (Padmapuram Botanical Garden), பழங்குடியினர் அருங்காட்சியகம் (Tribal Museum) ஆகியவை  அரக்கு பள்ளத்தாக்கின் சிறந்த சுற்றுலாத்  தலங்களாகும்.

சாலை வழியில் செல்லும்போது கலிகொண்டா காட்சிக் கோணம் என்னும் இடத்தில் பசுமை கொஞ்சும் மலைச் சரிவையும், அரக்கு பள்ளத்தாக்கையும் கண்டு ரசிக்கலாம். சங்கர்மதா (Sankarmatha) என்ற சந்தை பழங்குடியின மக்களுக்காக நடத்தப்படுகிறது.  கடிக்கி அருவி (Katiki Waterfalls), அரக்கு அருவி (Araku Waterfalls), தடிமடா அருவி (Tadimada Waterfalls) போன்ற அருவிகளும் அரக்கு பள்ளத்தாக்கில் உள்ள கண்கவர் அருவிகளாகும். மூங்கில் கோழிக்கறி (Bamboo Chicken) இங்கு புகழ்பெற்ற சாலையோர உணவு (Street Food) ஆகும். இத்தொடரின்  இரண்டாம் பதிவு இதுவாகும்.   Continue reading

Posted in குகைகள், சுற்றுலா | Tagged , , , , , , , , | 4 பின்னூட்டங்கள்

அரக்கு பள்ளத்தாக்கு சுற்றுலா 1: ஈர்க்கும் இடங்களுக்குப் பயணம் செல்வோமா?

நகரத்தின் இயந்திர வாழ்க்கையிலிருந்து விலகி அழகு ததும்பும் மலைவாழிடங்களுக்குச் சுற்றுலா செல்வது என்பது ஒரு சிறந்த தேர்வாகும். அரக்கு பள்ளத்தாக்கு (Telugu: అరకు వ్యాలీ; English: Araku Valley) ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் உள்ள மலைவாழிடங்களில் அதிகம் அறியப்படாத சுற்றுலா தலமாகும். மேகம் வருடிச் செல்லும் மலைத்தொடர்கள், வெள்ளியை உருக்கி வார்த்தது போல மலையிலிருந்து கொட்டும் அருவிகள், இதமான குளிருடன் மயக்கும் சூழல், காற்றில் காஃபி மணம் தவழ்ந்து வர கண்ணிற்கினிய பசுமையான காஃபித் தோட்டங்கள் சூழ்ந்த நிலப்பரப்பு, இனிமையாய்ப் பழகும் மலைவாழ் மக்கள் என்று பல சுற்றுலா அம்சங்கள் நிறைந்த ரம்மியமான பள்ளத்தாக்கு இதுவாகும். இது அரக்கு பள்ளத்தாக்குச் சுற்றுலா பற்றிய மூன்று பதிவுகள் கொண்ட தொடர் ஆகும்: 

அரக்கு பள்ளத்தாக்கு சுற்றுலா 1: ஈர்க்கும் இடங்களுக்குப் பயணம் செய்வோமா?
அரக்கு பள்ளத்தாக்கு சுற்றுலா 2: சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் இடங்கள்
அரக்கு பள்ளத்தாக்கு சுற்றுலா 3: போரா குகைகள்

இத்தொடரின்  முதல் பதிவு இதுவாகும். Continue reading

Posted in குகைகள், சுற்றுலா | Tagged , , , , , , , | 10 பின்னூட்டங்கள்