Tag Archives: அருவி

கூர்க் (குடகு) சுற்றுலா

கூர்க் என்று அழைக்கப்படும் குடகு (கொடகு) மாவட்டம் கர்நாடக மாநிலத்தில் அமைந்துள்ளது. குடகு என்ற மலைப்பிரதேசத்தில் பனி படர்ந்த மலைமுகடுகள், பச்சைப்பசேலென்ற பள்ளத்தாக்குகள், பசுமையான காடுகள், மனம் கமழும் பரந்த தேயிலை மற்றும் காஃபித் தோட்டங்கள், ஆரஞ்சுப் பழத்தோட்டங்கள், அழகான நீர்வீழ்ச்சிகள், சலசலவென ஓடும் ஓடைகள் நிறைந்த, மனதிற்கினிய சில்லென்ற பருவநிலை நிலவும் இந்தச் சுற்றுலாத்தலம் “இந்தியாவின் ஸ்காட்லாந்து” என்றும் அழைக்கப்படுகிறது. கர்நாடக மாநிலம் ஹாசன், தட்சிண கன்னடா மற்றும் மைசூர் போன்ற மாவட்டங்களைச் சேர்ந்தவர்களும், கேரள மாநிலம் வயநாடு மற்றும் கண்ணூர் பகுதியைச் சேர்ந்தவர்களும் குடகு மலைப்பிரதேசத்திற்கு ஒரு சில நாட்களுக்குச் சுற்றுலா செல்லப் பொருத்தமான மலை வாசஸ்தலம் ஆகும்.   குடகு மலையின் மேற்கு மற்றும் கிழக்குப் பக்கச் சரிவுகளில் அமைந்த ஆரவாரமில்லாத, மிதமான வேகத்தில் நகரும் சிறிய நகரங்களையும், இயற்கை அழகு கொஞ்சும் அமைதியான கிராமப்புறங்களையும் காணலாம்.  இம்மலை மாவட்டம் இந்தியாவின் ஸ்காட்லாந்து என்று பொருத்தமாகப் பெயரிடப்பட்டுள்ளது. இம்மலைப் பிரதேசத்தின் வித்தியாசமான தட்பவெப்பநிலையையும்,வியக்கத் தக்க எழிலையும், பசுமையான வனப்பையும் காண விரும்பினால் ஒருமுறை குடகுக்கு நேரில் சென்று வாருங்களேன்! ஒருமுறை சென்றால் ஆண்டுதோறும் அங்கே சென்று வருவீர்கள் என்பது உறுதி.
Continue reading

Posted in சுற்றுலா | Tagged , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

தடா அருவி (உப்பலமடுகு நீர்வீழ்ச்சி அல்லது கம்பகம் அருவி), ஆந்திரப் பிரதேசம்

ஆந்திரப் பிரதேச மாநிலம், தடா மண்டல் (థాడా మంటల్), ஸ்ரீ பொட்டி ஸ்ரீ ராமுலு (எஸ்.பி.எஸ்.ஆர்.) நெல்லூர் மாவட்டம், தடா (థాడా) பின் கோடு 524121 நகரம் அருகில் உள்ள ஸ்ரீசிட்டிக்கு (శ్రీ సిట్టి) வடக்கே தடா அருவி (తడ వస్తుంది)(உப்பலமடுகு நீர்வீழ்ச்சி அல்லது கம்பகம் அருவி) அமைந்துள்ளது. கம்பகம் வனப்பகுதிக்குள் அமைந்துள்ள தடா அருவி என்னும் உப்பலமடுகு நீர்வீழ்ச்சியைக் கல்லிவேட்டு வழியாக அடையலாம். மலையேற்றம் தொடங்கும் இடம் வரை, சுமார் 7 கி.மீ தூரத்திற்கு மட்டுமே சாலை அமைக்கப்பட்டுள்ளது. தடா நீர்வீழ்ச்சிக்குச் செல்வதற்கு அக்டோபர் முதல் ஃபிப்ரவரி வரை ஏற்ற பருவகாலம் (season) ஆகும். நீர்வரத்து அதிகம் இருக்கும் காலம் இது. மகாசிவராத்திரியன்று இங்கு ஏராளமான மக்கள் குறுகியகாலச் சுற்றுலாவாக வந்து அருவியில் குளித்துக் கொண்டாடுகிறார்கள். தடா அருவி ஓர் இயற்கையான அருவி. அதிகம் அறியப்படாத அற்புதமான சுற்றுலாத்தளங்களில் தடா அருவியும் ஒன்று. Continue reading

Posted in சுற்றுலா | Tagged , , , , | பின்னூட்டமொன்றை இடுக

வயநாடு கேரளா

வயநாடு என்பது மலைமேடுகள், பள்ளத்தாக்குகள், அடர்ந்த குளிர்ச்சியான இலையுதிர் காடுகள், பச்சைபசேலென்ற கிராமப்புறங்கள், அழகான நீர்வீழ்ச்சிகள், டீ மற்றும் காஃபித் தோட்டங்கள், வனவிலங்குகளின் சரணாலயங்கள், ஏரிகள் நிறைந்த, மனதிற்கினிய சில்லென்ற பருவநிலை நிலவும், சுற்றுலாத்தலமாகும். தனது இயற்கை அழகை நிலைநிறுத்தி வைத்துள்ள மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியின் மலைமாவட்டமான வயநாடு, புகழ்பெற்ற சுற்றுலாத்தலங்களான ஊட்டி மற்றும் மைசூருக்கு நடுவில் அமைந்துள்ளது. இம்மாவட்டம் சுற்றுலாப்பயணிகள் சொர்க்கம் எனலாம். இம்மலைப் பிரதேசம் எத்தகைய எழில்மிக்கது என்பதைக் காண விரும்பினால் ஒருமுறை வயநாட்டுக்கு நேரில் சென்று வாருங்களேன்! இதன்பிறகு ஆண்டுதோறும் அங்கே போய்வருவீர்கள் என்பது உறுதி.

வயநாட்டில் சுற்றிப்பார்க்க வேண்டிய இடங்கள் பல உள்ளன. முதன்முறையாக வயநாட்டுக்கு வருவோர் வயநாட்டில் ஒரு பகுதியிலிருந்து மற்ற பகுதிக்குச் செல்லும் தூரம் அதிகம் என்பது தெரிந்திருக்காது. இதனால்தான் இவர்கள் பயணத்தில் நிறைய நேரம் சாலைகளிலேயே கழிந்துவிடுகிறது. சுற்றுலா மையங்களில் குறைவான நேரத்தை மட்டும் செலவிட வேண்டியுள்ளது. இவர்கள் செல்ல விரும்பும் சுற்றுலாத் தலங்களுக்கு அருகிலேயே ஹோட்டல் அல்லது ரெஸார்ட்டைத் தேர்ந்தெடுக்காமல் தொலைவில் தேர்ந்தெடுப்பதால் நிறைய நேரம் விரயமாகிறது. வயநாடு சுற்றுலாவிற்குத் திட்டமிடும்போதே வயநாட்டின் மனத்தைக் கவரும் எழில்மிகு சுற்றுலாத் தலங்கள் மற்றும் இவற்றின் அருகில் அமைந்துள்ள தங்கும் விடுதிகள், ஹோட்டல்கள், ரிஸார்ட்டுகள் பற்றியெல்லாம் தெரிந்துகொண்டால் நேர விராயத்தைத் தவிர்க்கலாம்.

இந்தப் பதிவில் வயநாட்டின் சுற்றுலாத்தலங்கள் அமைந்துள்ள இடங்களைக் கருத்தில் கொண்டு மூன்று முக்கியப் பகுதிகளாகப் பிரித்துத் தந்துள்ளேன். முதலாவது பகுதி சுல்தான் பத்தேரி – இங்குத் திப்புச் சுல்தானால் அழிக்கப்பட்ட சமணர்களின் ஜீனாலயம், அம்புகுத்தி மலையில் கற்காலத்தின் உன்னத நினைவு சின்னமாய்க் காட்சியளித்துக் கொண்டிருக்கும் எடக்கல் குகைகள் போன்ற வரலாற்றோடு தொடர்புடைய இடங்கள் உள்ளன. இரண்டாவது பகுதி கல்பேட்டா – இங்கிருந்து மீன்முட்டி அருவி, சூச்சிப்பாரா அருவி, கந்தப்பாரா அருவி, செம்பாரா சிகரம், பூக்கோட் ஏரி, பானாசுர சாகர் அணை எல்லாம் அருகருகே அமைந்துள்ளன. மூன்றாவது பகுதி மானந்தவாடி – பழசி ராஜாவின் மண்டபம் ஒன்று இந்நகரின் மையத்தில் அமைந்துள்ளது. Continue reading

Posted in சுற்றுலா | Tagged , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக