Tag Archives: இந்திய தொல்லியல் அளவீட்டு துறை

மதுரை உலகத் தமிழ்ச் சங்க வளாகத்தில் தற்காலிக கீழடி அருங்காட்சியகம்

தற்காலிக கீழடி அருங்காட்சியகம், மதுரை நகரில்(பின் கோடு 625020) மருத்துவர் தங்கராசு சாலையில், சட்டக் கல்லூரி அருகில், அமைந்துள்ள மதுரை உலகத் தமிழ்ச் சங்க வளாகத்தில் முதல் தளத்தில் செயல்பட்டு வருகிறது. சிவகங்கை மாவட்டம் கீழடியில் நான்கு மற்றும் ஐந்தாம் கட்ட அகழாய்வில் கண்டறியப்பட்ட தொல்பொருட்கள் மதுரை உலகத் தமிழ்ச் சங்க முதலாவது தளத்தில் மூன்று அறைகளில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.  முதல் இரண்டு அறைகளில் அமைக்கப்பட்டுள்ள அரங்கில் கீழடியில் கிடைத்த பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. மூன்றாம் அறையில் அமைக்கப்பட்டுள்ள அரங்கில் முப்பரிமானத் தொழில்நுட்பம் மூலம் மாதிரிகளைக் காட்சிப்படுத்தியுள்ளார்கள். இந்த அருங்காட்சியகத்தை காலை 11 மணி முதல் இரவு 7 மணி வரை பொதுமக்கள் இலவசமாகக் கண்டுகளிக்கலாம். இது பற்றிய விரிவான பதிவு இதுவாகும். Continue reading

Posted in தொல்லியல், வரலாறு, Uncategorized | Tagged , , , , , , , | 6 பின்னூட்டங்கள்

தென்னிந்தியாவின் காலத்தால் முந்தைய சம்ஸ்கிருதக் கல்வெட்டு ஆந்திரவின் குண்டூர் மாவட்டம், செப்ரோலு கிராமத்தில் கண்டறியப்பட்டுள்ளது

கடந்த ஆண்டு டிசம்பர் 25, 2019 ஆம் தேதி அன்று, இந்திய தொல்லியல் அளவீட்டுத் துறையின் (ஏ.எஸ்.ஐ) கல்வெட்டியல் கிளை சப்தமாதர்கள் வழிபாட்டின் காலத்தால் மிகவும் முந்தைய கல்வெட்டு ஆதாரங்களை ஆந்திர பிரதேச மாநிலம், குண்டூர் மாவட்டம், செப்ரோல் மண்டல், செப்ரோலு கிராமத்தில் மேற்கொண்ட கள ஆய்வின்போது
கண்டறிந்துள்ளது. தென்னிந்தியாவில் கண்டறியப்பட்ட மிகவும் முந்தைய சமஸ்கிருத கல்வெட்டும் இதுவே ஆகும். இந்தக் கண்டுபிடிப்பு சமஸ்கிருத மொழியின் பரிணாம வளர்ச்சியைக் கிட்டத்தட்ட 200 ஆண்டுகளுக்கு முன்னெடுத்துச் செல்கிறது. . Continue reading

Posted in தொல்லியல், வரலாறு | Tagged , , , , , , | 2 பின்னூட்டங்கள்

தொண்டூர்: பஞ்சனாப்பாடி குன்றில் சமணர் குகைத்தளங்கள், பல்லவர் கால விண்ணாம்பாறை விஷ்ணு சிற்பம்

விழுப்புரம் மாவட்டத்தில் சமணம் செழித்தோங்கியது. இம்மாவட்டத்தில் கி.மு. முதல் நூற்றாண்டு தொடங்கிப் பல சமண சமயச் சான்றுகள் கிடைத்துள்ளன. செஞ்சி வட்டத்தில் உள்ள மலைக்குன்றுகளில் 2000 ஆண்டுகள் பழமையான சமணர் குகைத் தளங்களும், கற்படுக்கைகளும், தமிழ் பிராமிக் கல்வெட்டுகளும், பாறைகளில் செதுக்கப்பட்ட சமண தீர்த்தங்கரர்களின் புடைப்புச் சிற்பங்களும் காணக்கிடைக்கின்றன.

தொண்டூர் கிராமத்தின் அருகே பஞ்சனாப்பாடி என்ற மலைக்குன்றில் அமைந்துள்ள இயற்கையான சமணர் குகைத் தளம், கற்படுக்கைகள், 23 ஆம் தீர்த்தங்கரரான பார்சுவனாதரின் புடைப்புச் சிற்பம் மற்றும் தமிழ் பிராமிக் கல்வெட்டு ஆகியவற்றைக் காணலாம். கல்வெட்டு கி.பி. 3 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது என்றும் பார்சுவனாதரின் புடைப்புச் சிற்பம் கி.பி. 8 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது என்றும் கணிக்கப்பட்டுள்ளன. இந்தச் சமணர் குகைத்தளம் தொல்லியல் துறையினரின் பராமரிப்பில் இல்லாதது வியப்புக்குரியது.  பராமரிப்பு இல்லாமல் பாழடையும் இந்த நினைவுச் சின்னத்தைப் பாதுகாக்க வேண்டியது மிகவும் இன்றியமையாதது ஆகும். 

தொண்டூர் அருகே வயல் வெளியில், விண்ணாம்பாறை என்று அழைக்கப்படும் தனிப் பாறையில் புடைப்புச் சிற்பமாகச் செதுக்கப்பட்டுள்ள சிற்பத் தொகுதியில் விஷ்ணு வலமிருந்து இடமாகப் பள்ளிகொண்ட கோலத்தில் அனந்தசயன விஷ்ணுவாக யோக நித்திரையில் காட்சி தருகிறார். மூன்றாம் நந்திவர்ம பல்லவன் காலத்தில் செதுக்கப்பட்ட இந்த அனந்தசயன விஷ்ணுவின் நீண்ட கிரீடமகுடம் கம்போடிய படிமவியல் கலைப்பாணியை நினைவுபடுத்துகிறது.    கம்போடியா நாட்டுடன் பல்லவர்கள் கொண்டிருந்த தொடர்புக்கு சான்றாக அமைந்துள்ளதாக வரலாற்று அறிஞர்கள் கருதுகிறார்கள். Continue reading

Posted in சமண சமயம், தொல்லியல், படிமக்கலை, வரலாறு | Tagged , , , , , , , , , , | 12 பின்னூட்டங்கள்