Tag Archives: இந்திய தொல்லியல் அளவீட்டு துறை

உலகப் பாரம்பரிய தினம் ஏப்ரல் 18 ஆம் தேதி என்று உங்களுக்குத் தெரியுமா?

ஒவ்வொரு ஆண்டும் “ஏப்ரல்-18” ஆம் தேதி உலகப் பாரம்பரிய தினமாகக் கொண்டாடப்படுகிறது. இன்று ஏப்ரல் 18 ஆம் தேதி. உலக பாரம்பரியம் என்றால் என்ன? ஒவ்வொரு நாட்டிற்கும் பெருமையும் புகழும் சேர்ப்பது அந்த நாட்டின் பண்டைய வரலாற்று நினைவுச் சின்னங்கள் (Historical Monuments), கல்வெட்டுகள் (Inscriptions), ஓவியங்கள் (Paintings) மற்றும் சிற்பங்களே (Sculptures) ஆகும். இந்தப் பாரம்பரிய சின்னங்கள் ஓர் இனத்தையோ, காலத்தையோ, நிலப்பரப்பையோ அல்லது நாட்டின் கலாசாரத்தையோ பிரதிபலிக்கக் கூடியவையனவாகும். உலகம் முழுவதிலும் உள்ள பாரம்பரியச் சின்னங்கள் மனிதகுலம் பகிர்ந்துகொள்ளப்பட வேண்டிய செல்வங்களாகும். இந்தப் பாரம்பரிய சின்னங்களைப் பாதுகாத்துப் பராமரிக்கவும், பராமரிப்பை ஊக்குவிக்கவும் சர்வதேச அளவில் பெரும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

1982 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 18 ஆம் தேதி துனிசியக் குடியரசின் தலைநகரான துனிசியா நகரில் சர்வதேச மாநாடு மற்றும் நினைவுச்சின்னங்கள் (International Council for Monuments and Sites (ICOMOS) நடத்திய  மாநாடு ஒன்றில் ஏப்ரல் 18 ஆம் தேதியை சர்வதேச நினைவிடங்கள் தினமாக (International Day for Monuments and Sites) கொண்டாடுவதற்கான பரிந்துரையை மாநாட்டின் நிர்வாகக்குழு அங்கீகரித்தது. இந்த நிர்வாகக் குழு இந்தச் சர்வதேச நினைவிடங்கள் தினத்தைக் கொண்டாடுவதற்கான நடைமுறை ஆலோசனையையும் தேசியக் குழுக்களுக்கு (National Committees) வழங்கியது. இந்தப் பரிந்துரையை யுனெஸ்கோ நிறுவனம் (UNESCO) 1982 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற தன்னுடைய பொது மாநாட்டில் விவாதித்த பின்பு ஏற்றுகொண்டு அங்கீகரித்தது. இதன்படி  உறுப்பு நாடுகள் (Member States) ஏப்ரல் 18 ஆம் தேதி உலகப் பாரம்பரிய தினமாகக் கொண்டாடி வருகின்றன. Continue reading

Posted in சுற்றுலா, தொல்லியல், விழாக்கள் | Tagged , , , | 5 பின்னூட்டங்கள்

இந்திய தொல்லியல் அளவீட்டு துறையின் மைசூர் அலுவலகத்தில் முடங்கிக் கிடக்கும் தமிழ் கல்வெட்டுகள் பற்றி அறிஞர்களும் பொதுமக்களும் கவலை…

தமிழ் நாட்டின் வரலாற்றை முறைப்படுத்தி எழுதுவதற்கு சங்க இலக்கியங்களும், இடைக்கால இலக்கியங்களும், சுமார் இரண்டாயிரம் ஆண்டுகளின் தொடர்ச்சியான கல்வெட்டுகளும் பெரிதும் துணை புரிகின்றன. ஆங்கிலேய ஆட்சியின் போது கல்வெட்டுகளைப் படியெடுக்கத் தொடங்கிய பின்புதான், இருண்டு கிடந்த தமிழ்நாட்டின் வரலாற்றில் புதிய வெளிச்சம் பரவியது. தமிழ் நாட்டின் இடைக்கால வரலாறு தமிழ் மக்களுக்கு மட்டுமின்றி வெளியுலகுக்கும் தெளிவாக புலப்பட்டது.

தற்பொழுது இந்திய தொல்லியல் அளவீட்டு துறை, தமிழ்நாடு அரசு தொல்பொருள் ஆய்வுத்துறை, பல்கலைக்கழகங்கள் முதலான அரசு நிறுவனங்களும் பல தனியார் நிறுவனங்களும் புதிய கல்வெட்டுகளை வெளியிட்டு வருகின்றன. தனிப்பட்ட ஆய்வாளர்களும், குழுக்களும், மன்றங்களும் இப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தொல்லியல் கழகம், தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர் எல்லா அடிப்படைச் சான்றுகளையும் தொகுத்து ஆண்டுதோறும் வெளியிட்டு வருகிறது. இதுவரை 28 தொகுப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. இணையதள சேவை, முகநூல், மன்றங்கள், வலைத்தளங்கள் மூலம் விரைவாக செய்திகள் பரிமாறப்படுகின்றன. சில வலைத்தளங்கள் ASI நிறுவனத்தின் குறிப்பிட்ட தொடர் வெளியீடுகளை மின்தரவுகளாக மாற்றியமைத்துள்ளார்கள். அன்றாடம் புதிய கல்வெட்டுகள் கல்வெட்டுகள் கண்டறியப்பட்ட செய்திகள் நாளிதழ்களில் வெளியிடப் படுகின்றன.

ஆங்கிலேயர் நமக்கு அளித்த பொக்கிஷம் இக்கல்வெட்டுகளின் படிகள் (copies). தமிழ் நாட்டின் வரலாற்று நினைவுச் சின்னங்களையும் கல்வெட்டுகளையும் பராமரிக்கவும், கல்வெட்டுப் படிகளைப் பாதுகாக்கவும், படித்து புரிந்து கொள்ளவும், தற்காலத்துக்கு ஏற்றவாறு அந்தந்த இந்திய மொழிகளில் எழுதுவடிவமாக்கவும், பதிப்பிக்கவும் இந்திய தொல்லியல் அளவீட்டுத் துறையும், தமிழ் நாடு அரசு தொல்லியல் துறையும் அரசு நிறுவனங்களாக ஏற்படுத்தப்பட்டு செயல்பட்டு வருகின்றன. இந்தப் பதிவு கடந்த 1890 ஆம் ஆண்டு முதல் அரும்பாடுபட்டு படியெடுத்து சேகரித்து, படித்து, தமிழ் எழுதுவடிவமாக்கி, ஆவணப்படுத்தப்பட்ட சுமார் 65000 தமிழக் கல்வெட்டுகளின் நிலை பற்றியது. இதற்கென பிரத்யோகமாக மைசூரில் செயல்படும் தொல்லியல் துறையின் கல்வெட்டியல் கிளை அலுவலகம் இந்த தரவுகளை முறையாகப் பராமரிக்கிறதா? சுமார் 400 ஆண்டுகள் பழைமையான இத்தரவுகள் பயன்படுத்தும் நிலையில் உள்ளனவா? 1909 ஆம் ஆண்டு முதல் இவை ஏன் நூலாக பதிப்பிக்கப்படவில்லை? 1908 ஆம் ஆண்டுவரை பதிப்பிக்கப்பட்ட நூல்களும் பிற கல்வெட்டு படி பிரதிகளும் ஆய்வாளர்கள் பயன்படுத்தும் வகையில் மின்தரவாக (digital document) கிடைக்க வகை செய்யப்பட்டுள்ளதா? இது போன்ற கேள்விகளுக்கு அறிஞர்கள் சொல்லும் தீர்வு என்ன? இந்தப் பதிவைப் படித்து தங்கள் மேலான கருத்துக்களை என் blog இல் பதிவிட வேண்டுமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன். Continue reading

Posted in தொல்லியல் | Tagged , , , , , , , | 1 பின்னூட்டம்